26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
1 curdhoney 152595372
அழகு குறிப்புகள்

தெரிஞ்சிக்கங்க… இரண்டே நாட்களில் வெள்ளையா தெரியணுமா? இதோ சில ஆயுர்வேத வழிகள்!

உங்களுக்கு வெள்ளையாக வேண்டுமென்ற ஆசை உள்ளதா? இரண்டே நாட்களில் வெள்ளையாக வேண்டுமா? இன்று பலருக்கும் வெள்ளையாக வேண்டுமென்ற கனவு உள்ளது. உடலிலேயே தோல் தான் மிகப்பெரிய உறுப்பு. இது உடலுக்கு மாசுக்கள் மற்றும் தொற்றுக்களை உண்டாக்கும் இதர தீங்கு விளைவிக்கும் பொருட்களில் இருந்து பாதுகாப்பு வழங்குகிறது. அத்தகைய சருமத்தை பாதுகாப்பாகவும், அழகாகவும் வைத்துக் கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம்.

 

இன்று சருமத்தின் நிறத்தை அதிகரிக்க எத்தனையோ க்ரீம்கள் மற்றும் இதர அழகுப் பராமரிப்பு பொருட்கள் விற்கப்பட்டாலும், அவற்றில் உள்ள கெமிக்கல்களால் நிச்சயம் ஏதேனும் ஒரு பக்கவிளைவை சந்திக்க வேண்டியிருக்கும். ஆகவே சருமத்திற்கு எந்த ஒரு கெமிக்கல் கலந்த பொருளைப் பயன்படுத்தும் முன்பு ஒன்றிற்கு பல முறை யோசிக்க வேண்டும். அதுவே இயற்கைப் பொருட்களைக் கொண்டு சருமத்திற்கு பராமரிப்பைக் கொடுத்தால், எவ்வித பக்க விளைவும் இருக்காது.

எனவே தமிழ் போல்ட் ஸ்கை வெள்ளையாக ஆசைப்படுபவர்களுக்காக இரண்டே நாட்களில் சரும நிறத்தை அதிகரிக்க உதவும் சில ஆயுர்வேத வழிகளைக் கொடுத்துள்ளது. அதைப் பின்பற்றினால், நிச்சயம் சரும நிறத்தில் ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.

தேன் மற்றும் தயிர்

தினமும் தேனை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும். இல்லாவிட்டால், தேனுடன் தயிர் மற்றும் எலுமிச்சை சாறு அல்லது அதிமதுரப் பொடி சேர்த்து கலந்து பயன்படுத்தலாம். இந்த வழியானது வறட்சியான சருமத்தைக் கொண்டவர்களுக்கு ஏற்றது. இதனால் தேன் சருமத்திற்கு புத்துணர்ச்சி அளிக்கும், எலுமிச்சை மற்றும் தயிரில் உள்ள வைட்டமின் சி, சருமத்தில் உள்ள அழுக்குகளை வெளியேற்றி, சருமத்தை வெள்ளையாகவும், பொலிவோடும் காட்டும்.

எலுமிச்சை மற்றும் சர்க்கரை

* ஒரு ஸ்பூன் சர்க்கரையுடன் ஒரு எலுமிச்சையின் சாற்றினை சேர்த்து கலந்து, முகம் மட்டுமின்றி, கை, கால்களுக்கும் தடவி, சர்க்கரை கரையும் வரை மென்மையாக தேய்க்க வேண்டும்.

* இச்செயலால் சருமத்தில் இரத்த ஓட்டம் தூண்டப்படுவதோடு, சருமத் துளைகளில் உள்ள அழுக்குகள் முழுமையாக வெளியேற்றப்படும். அதன் பின் நீரால் சருமத்தைக் கழுவ வேண்டும்.

* அதன் பின் துணியால் துடைத்துவிட்டு, இறுதியில் மாய்ஸ்சுரைசர் எதையேனும் தடவ வேண்டும்.

பால் மற்றும் வாழைப்பழம்

வாழைப்பழத்தை நன்கு மசித்துக் கொள்ள வேண்டும். பின் அத்துடன் சிறிது பால் சேர்த்து கலந்து, முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி, 20 நிமிடம் நன்கு ஊற வைக்க வேண்டும். அதன் பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், விரைவில் சரும நிறத்தில் ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.

பேக்கிங் சோடா மற்றும் நீர்

* பேக்கிங் சோடாவை நீர் சேர்த்து ஓரளவு கெட்டியான பேஸ்ட் தயாரித்துக் கொள்ள வேண்டும். அதன் பின் அதனை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவ வேண்டும்.

* 15 நிமிடம் கழித்து, நீரால் கைகளை நனைத்து சருமத்தை தேய்க்க வேண்டும். இப்படி சிறிது நேரம் தேய்த்து மசாஜ் செய்வதால், சருமத் துளைகளில் உள்ள இறந்த செல்கள் மற்றும் அழுக்குகள் முழுமையாக வெளியேற்றப்படும்.

* அதன் பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

கற்றாழை

* வீட்டில் கற்றாழை செடி உள்ளதா? அப்படியானால் அந்த கற்றாழை இலையில் உள்ள ஜெல்லை எடுத்து முகத்தில் தடவி, 15-30 நிமிடம் நன்கு காய வையுங்கள். வேண்டுமானால் கற்றாழை ஜெல்லுடன் வேர்க்கடலைப் பொடியை சேர்த்து கலந்தும் பயன்படுத்தலாம்.

* வேர்க்கடலை பொடியை சேர்த்துக் கொண்டால், அது ஒரு ஸ்கரப்பர் போன்று செயல்பட்டு, சருமத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் இறந்த செல்கள் முழுமையாக வெளியேற்றப்பட்டு, சரும நிறம் நன்கு அதிகரித்துக் காணப்படும்.

* இறுதியில் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்தால், இரண்டு நாட்களில் சருமம் வெள்ளையாகி இருப்பதைக் காணலாம்.

பால் மற்றும் குங்குமப்பூ

* சூரியகாந்தி விதைகளை இரவு தூங்கும் முன் காய்ச்சாத பாலில் போட்டு ஊற வைக்க வேண்டும்.

* பின் மறுநாள் காலையில் அதை அரைத்து, அத்துடன் சிறிது குங்குமப்பூ மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி, 10-15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

* பின்பு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இப்படி அடிக்கடி செய்தால், சீக்கிரம் வெள்ளையாகலாம்.7 rose 15

ரோஸ்வாட்டர்

ரோஸ்வாட்டரில் கிளின்சிங் பண்புகள் உள்ளது. மேலும் இது சருமத்திற்கு புத்துணர்ச்சி அளிக்கும். அதிலும் ரோஸ் வாட்டரில் பச்சை பால் சேர்த்து கலந்து, இரவு தூங்கும் முன் முகத்தில் தடவி, இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். இப்படி ஒரு இரண்டு நாள் செய்தால், சருமத்தின் நிறம் அதிகரித்திருப்பதை நன்கு காணலாம்.

மாம்பழ தோல் மற்றும் பால்

இது மிகவும் பழமையான ஆயுர்வேத வழி. மாம்பழத்தின் தோலில் சரும ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துக்கள் அதிகம் உள்ளது. ஆகவே மாம்பழத்தை சாப்பிட்ட பின் அதன் தோலை தூக்கி போடாமல், அதைக் கொண்டு சருமத்திற்கு பராமரிப்பு கொடுங்கள். அதுவும் மாம்பழத்தின் தோலை பால் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின் அந்த கலவையை முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவி நன்கு காய்ந்த பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

Related posts

சூப்பரான வெங்காய பக்கோடா செய்வது எப்படி ??

nathan

முதல் முறையாக பார்லர் போகும் போது..

nathan

மசாலா சப்பாத்தி

nathan

அரங்கேறிய துயரம்! அண்ணனை நம்பி தோழியை அழைத்துச் சென்ற தங்கை!

nathan

ஆலிவ் எண்ணெய் தோல் மாய்ஸ்சுரைசர் செய்ய 4 எளிய வழிகள்,beauty tips at tamil

nathan

ஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை சுவேதாவா இது! நீங்களே பாருங்க.!

nathan

பருக்களால் உண்டான தழும்புகள், புள்ளிகள் ஆகியவற்றை மறைக்க உருளைக் கிழங்கு பேஸ் பேக்!….

nathan

புருவம் வளர எளிய வழிகள்

nathan

மார்பகங்கள் தளர்வடையாமல் இருக்க சில வழிகள் உள்ளன. அதைப் பற்றி இங்கு பார்க்கலாம்.

nathan