25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
2 15
முகப் பராமரிப்பு

சூப்பர் டிப்ஸ்! மூக்குகிட்ட உங்களுக்கும் இப்படி இருக்கா? இதோ இத தேய்ங்க உடனே வெளிய வந்துடும்…

அதிக குளிர், அதிக வெப்பம் அதேபோல் வறட்சியான தட்ப வெட்பநிலை ஆகியவற்றின் காரணமாக நம்முடைய சருமம் இயல்பாகவே பாதிப்படையும். இவற்றை சரிசெய்ய வாரா வாரம் அதிக பட்ஜெட்டில் நல்ல ஸ்பாவை தேர்ந்தெடுத்து சென்றால் கூட இந்த பிரச்சினையை அவ்வளவு ஈஸியாகத் தீர்த்து விட முடியாது. அதற்கான இதற்குத் தீர்வே இல்லையென்று சொல்லிவிட முடியாது.

 

சருமத் திசுக்கள் பாதிப்படைவது, சரும செல்கள் ஆகியவற்றை சரிசெய்ய வேறு வழி இல்லை என்று நம்மால் சொல்ல முடியாது. அதை நம்முடைய வீட்டில் உள்ள அற்புதமான சில பொருள்கள் கொண்டு நம்முடைய சருமத்தில் உண்டாகின்ற கரும்புள்ளிகள் மற்றும் வெண்புள்ளிகளை நீக்க முடியும்.

மூக்குமேல் வெண்புள்ளிகள்

நம்முடைய மூக்கின் மேற்பகுதியிலும் ஓரங்களிலும் வெள்ளை வெள்ளையாக பிதுங்கிக் கொண்டிருக்கும். அப்படி பிதுங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்து நம்முடைய கைகள் சும்மா இருக்காது. ஆனால் எல்லோரும் அதை கையில் தொடக்கூடாது என்பார்கள். ஆனால் இதற்கு சில வீட்டு வைத்திய முறைகள் இருக்கின்றன.

 

நோஸ் ட்ரிப்

இதற்கென நோஸ் ட்ரிப்ஸ் கடைகளில் கிடைக்கின்றன. அதைப் பயன்படுத்தி மூக்கின் மேலும் இடுக்குகளிலும் தேங்கியிருக்கும் வெண்புள்ளிகளை நீக்கிக் கொள்ள முடியும். ஆனால் அப்படி நோஸ் ட்ரிப் பயன்படுத்தி எடுக்கிற பொழுது, மூக்கின் அந்த பகுதிகள் சிவந்து போகும். சில சமயம் அந்த இடங்களில் சருமத் தடிப்புகளும் அழற்சியும் கூட உண்டாவதுண்டு. இதை இதுபோன்ற விளைவுகள் இல்லாமல் எப்படி சரி செய்வது?

எப்படி வெளியேற்றுவது?

எப்படி வெளியேற்றுவது?
தேவையான பொருள்கள்

வெந்நீர்

மென்மையான துண்டு

பிரஷ் லெமன்

தூய்மை செய்யும் சிறுகத்தி

உப்பு

என்ன செய்ய வேண்டும்?

மென்மையான துண்டை எடுத்து வைத்திருக்கிறோமே அந்த துண்டை எடுத்து வெந்நீரில் நன்கு நினைத்து அதை அப்படியே வெதுவெதுப்புடன் முகத்தின் மேல் போட்டு மூடிக் கொள்ள வேண்டும். இது நம்முடைய சருமத் துவாரங்க்ள திறப்பதற்கு உதவி செய்யும். இது நாம் ஸ்கிரப் பயன்படுத்தி வெகுநேரம் தேய்த்த பின் கிடைக்கும் பலனை மிக வேகமாகவே நமக்குக் கொடுக்கும். பத்து முதல் பதினைந்து நிமிடங்கள் வரை இப்படி வைத்திருந்தால் போதும்.

எலுமிச்சையும் உப்பும்

ஒரு எலுமிச்சை பழத்தை இரண்டாக நறுக்கிக் கொள்ள வேண்டும். அந்த இரண்டு துண்டுகளில் இருந்தும் சிறிதளவு எலுமிச்சை சாறினை பிழிந்து விட்டு, அப்படியே அந்த எலுமிச்சை துண்டுகளின் மீது உப்பினை எடுத்து தூவி விடுங்கள்.

cover 155

ஸ்கிரப்

இப்படி உப்பு தூவப்பட்ட எலுமிச்சை துண்டுகளை முகம் முழுவதும் குறிப்பாக, வெண் புள்ளிகள், கரும்புள்ளிகள் இருக்கிற பாதிக்கப்பட்ட பகுதிகளில் கொஞ்சம் அதிகமாகவும் அக்கறை கொண்டு நன்கு வட்ட வடிவில் தேயுங்கள். நன்கு ஸ்கிரப் செய்த பின் காட்டனில் வெதுவெதுப்பான தண்ணீரால் தொட்டு துடைத்துவிட்டு, சுத்தம் செய்யும் கருவி கொண்டு முகம் மற்றும் மூக்குக்கு மேல் உள்ள வெண்புள்ளிகளை வெளியே எடுங்கள். வலி இல்லாமல் ஈஸியாக வெளியேறும்.

இப்படி ஒரு சிம்பிளான வழி இருக்கும்போது எதுக்குங்க ஸ்பா, பார்லர்னு போய் பணத்தை செலவு செய்யணும்.

Related posts

ஃபேஸ் பேக் வீட்டிலேயே செய்ய

nathan

ஆலிவ் ஆயிலை இவ்வாறு முகத்தில் அப்ளை பண்ணுங்கள்… அதிக பலன் கிடைக்கும்…

sangika

ஈடில்லா அழகை தரும் இந்த குறிப்பை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் :

nathan

உங்க முகப்பரு தழும்புகளை வேகமாக போக்க வேண்டுமா? சூப்பர் டிப்ஸ்..

nathan

வறண்ட சருமம் உள்ளவர்கள் இப்படி மேக்-அப் போட்டாதான் அழகா ஜொலிப்பாங்களாம்!

nathan

சென்சிட்டிவ் சருமத்திற்கு ஃபேசியல்

nathan

பெண்கள் சிவப்பழகை பெற..

nathan

தெரிஞ்சிக்கங்க…உதடுகளில் ஏற்படும் வறட்சியைத் தடுக்கும் சில அட்டகாசமான எளிய வழிகள்!

nathan

உங்க முகத்தில் உள்ள சுருக்கங்களை முழுமையாக போக்க தினமும் செய்யுங்க…

nathan