26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
அறுசுவைஐஸ்க்ரீம் வகைகள்

பைனாபிள் – செர்ரி ஜஸ்க்ரீம்

sl2054என்னென்ன தேவை?

நறுக்கிய அன்னாசிப் பழம் – 1 கப்,
அன்னாசி எசென்ஸ் – 3 துளிகள்,
சர்க்கரை – 1 கப், க்ரீம் – 1/2 கப்,
கஸ்டர்ட் பவுடர் – 2 டேபிள்ஸ்பூன்,
பால் – 1 கப்,
glazed செர்ரி – 8.


எப்படிச் செய்வது?

கடாயில் அன்னாசியுடன் சர்க்கரை சேர்த்து, மிதமான தீயில் அன்னாசி மென்மையாகும் வரை வதக்கவும். பிறகு அதை ஆற வைத்து மிக்ஸியில் அரைக்கவும். பாலை காய்ச்சவும். கஸ்டர்ட் பவுடரை சிறிது பாலில் கரைத்து ஊற்றி, மிதமான தீயில் சுட வைக்கவும். பால் கெட்டியானவுடன் இறக்கி, ஆற வைக்கவும். இத்துடன் க்ரீம், அரைத்த அன்னாசிப் பழக்கூழ், எசென்ஸ் சேர்த்து நன்கு கலக்கவும்.

ஒரு மணி நேரம் அதை ஃப்ரீசரில் உறைய வைக்கவும். அதை வெளியே எடுத்து, மிக்ஸியில் அரைக்கவும். இதே போல ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை எடுத்து 4, 5 முறை அரைத்து வைத்தால் வழுவழுப்பான மென்மையான ஐஸ்க்ரீம் தயார். இதில் ரீறீணீக்ஷ்மீபீ செர்ரியை ஒன்றிரண்டாக வெட்டி கலக்கி வைக்கவும். டின்னில் கிடைக்கும் அன்னாசிப் பழத் துண்டுகளையும் பயன்படுத்தலாம். சர்க்கரை அளவு, அன்னாசிப் பழத்தின் இனிப்புத் தன்மையை பொறுத்து மாறுபடும்.

Related posts

சுவையான பன்னீர் கிரேவி செய்வது எப்படி?

nathan

nathan

சூப்பரான பனங்கற்கண்டு பால் பொங்கல் ரெடி!…

sangika

முருங்கைக்கீரை புலாவ் ரெடி….

sangika

மட்டன் மிளகு வறுவல் எப்படிச் செய்வது?

nathan

அதிரசம்

nathan

வைட்டமின் சி ஸ்மூத்தீ

nathan

பேரிச்சம்பழ கேக்

nathan

கஸாட்டா ஐஸ்கிரீம் கேக்

nathan