பாலில் இருக்கும் சத்துகள் குறித்து அனைவரும் அறிவோம். பாலில் வைட்டமின்பி, ஹைட்ராக்ஸி அமிலங்கள், கால்சியம், சக்தி வாய்ந்த ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்த நன்மைகளைக் கொண்டிருக்கிறது.
இதை சருமத்தில் பயன்படுத்தும் போது அவை நாள் முழுக்க சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்கும். முகப்பரு இருக்கும் போது கூட வெறும் பாலை கொண்டே பதமாக தோல் பாதிப்படையாமல் காப்பாற்றும். எல்லா சருமத்திற்கும் ஏற்ற பாலை நீங்கள் எப்படி எதற்கு பயன்படுத்தலாம் என்பதை பார்க்கலாம். பால் மெனக்கெடாமல் வீட்டிலிருக்ககூடியது என்பதோடு க்ரீம், லோஷன் போன்று அதிக விலையும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
பால் சருமத்தை இயற்கையாகவே சுத்தம் செய்யும் சிறந்த க்ளென்சிங் என்று சொல்லலாம். முகத்தில் இருக்கும் இறந்த செல்களை சரும பாதிப்பில்லாமல் வெளியேற்றுகிறது. சரும சுத்தம் என்னும் போது அவை முகத்தில் கரும்புள்ளிகள், முகப்பரு போன்றவற்றையும் வரவிடாமல் தடுக்கவும் உதவுகிறது என்பதால் இவை எப்போதும் முகத்துக்கு நன்மை செய்யகூடியது.