30.4 C
Chennai
Sunday, Nov 17, 2024
beauty
தலைமுடி சிகிச்சை

தெரிஞ்சிக்கங்க… ஒரு பைசா செலவில்லாமல் அழகான நீண்ட தலைமுடியை பெற செய்யும் அற்புத இலை!!!

தலைமுடி உதிர்வை சமாளிப்பது என்பது மிகவும் கடினமான ஒரு காரியம். தலைமுடி வேர்க்கால்கள் வலுவிழந்து போகும் போது தான் தலைமுடி உதிர்வு ஏற்படுகிறது.தலைமுடி உதிர்வுக்கு பல காரணங்கள் உண்டு. தலைமுடி உதிர்வை கட்டுப்படுத்தும் ஷாம்பூக்களில் இருந்து வீட்டு வைத்தியம் வரை பல விஷயங்களை முயற்சி செய்து பார்த்திருப்பீர்கள். ஆனால் சாதாரணமாக சமையலில் நாம் பயன்படுத்தும் இலைகள் தலைமுடி உதிர்வை கட்டுப்படுத்த உதவும் என்பது உங்களுக்கு தெரியுமா…

ஆம் உணவின் சுவையை கூட்ட பயன்படுத்தப்படும் கறிவேப்பிலையை பற்றி தான் பேசுகிறோம். பெரும்பாலானோர் வீட்டில் கறிவேப்பிலை மரம் காணப்படும். செலவே இல்லாமல் சுலபமான முறையில் தலைமுடி உதிர்வை சரி செய்ய இந்த இலைகள் உங்களுக்கு பயன்படும். தலைமுடியில் பல அதிசயங்களை நிகழ்த்தி முடி வளர்ச்சியை தூண்டுகின்ற பொருட்கள் அனைத்தும் கறிவேப்பிலையில் நிறைந்துள்ளது.

கறிவேப்பிலையில் வைட்டமின் C, பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கால்சியம், நிக்கோட்டின் அமிலம் ஆகியவை அடங்கி உள்ளது. கறிவேப்பிலையை தலைமுடிக்கு பயன்படுத்தும் முறை குறித்து இப்போது பார்க்கலாம்.

■தேங்காய் எண்ணெய் நம் தலைமுடிக்கு மிகவும் நல்லது. இத்தகைய தேங்காய் எண்ணெயை கறிவேப்பிலையோடு கலந்து பயன்படுத்தி வரலாம். சிறிதளவு தேங்காய் எண்ணெய் எடுத்து அதில் கறிவேப்பிலை போட்டு அடுப்பில் வைத்து சூடு செய்யுங்கள். எண்ணெய் கருப்பாக மாறும் வரை இருக்கட்டும். இந்த கலவை ஆறிய பிறகு அதனை ஒரு சுத்தமான பாட்டிலில் ஊற்றி வைத்து கொள்ளுங்கள். இதனை உங்கள் தலைமுடி வேர்க்கால்களில் இருந்து நுணி வரை நன்றாக மசாஜ் செய்யுங்கள். சில மணி நேரம் கழித்து தலைமுடியை எப்போதும் போல அலசுங்கள். இதனை அதிக அளவில் செய்து வைத்து கூட பயன்படுத்தி கொள்ளலாம்.curry leave

■கறிவேப்பிலை, நெல்லிக்காய் மற்றும் வெந்தயம் கொண்டு ஒரு அற்புதமான தலைமுடி மருந்தை தயாரிக்கலாம். நெல்லிக்காய் மற்றும் வெந்தயம் ஆகிய இரண்டும் தலைமுடியை அற்புதமாக வளரச் செய்யும். இவை இரண்டையும் சேர்த்து கறிவேப்பிலையோடு ஒரு ஹேர் மாஸ்க் தயார் செய்து பயன்படுத்தலாம். இரண்டு தேக்கரண்டி வெந்தயம் எடுத்து அதனை பொடி செய்து கொள்ளவும். இப்போது 10 – 15 கறிவேப்பிலை இலைகள், வெந்தய பொடி மற்றும் நெல்லிக்காய் பொடி எடுத்து அனைத்தையும் தண்ணீர் விட்டு கலந்து கொள்ளுங்கள். இந்த பேஸ்டை உங்கள் தலைமுடி வேர்க்கால்களில் தடவி 30 நிமிடங்கள் கழித்து முடியை அலசுங்கள்.

■படியாமல் இருக்கிறது தலைமுடிக்கு கறிவேப்பிலை ஒரு சிறந்த தீர்வினை தரும். இரண்டு கப் தண்ணீர் எடுத்து கொள்ளுங்கள். அதில் 10 – 15 கறிவேப்பிலை இலைகளை போட்டு கொதிக்க வைத்து கொள்ளவும். தண்ணீரை சிறிது நேரம் நன்றாக கொதிக்க வையுங்கள். உங்கள் முடியை ஷாம்பூ போட்டு அலசிய பிறகு மீண்டும் இந்த தண்ணீர் கொண்டு முடியை அலசுங்கள்.

Related posts

அதிக எண்ணெய் பசையுள்ள தலையை எப்படி இயற்கை முறையில் பராமரிப்பது?தெரிஞ்சிக்கங்க…

nathan

பொடுகை அடியோடு விரட்ட வேண்டுமா?

nathan

தெரிந்து கொள்ளுங்கள்.. கருப்பு முடி விரைவாக கருப்பு நிறமாக இருக்க இதை செய்ய வேண்டும்…

nathan

பொடுகு தொல்லையா?

nathan

நீங்கள் Hair style செய்து கொள்வதற்கு முன் இதைப் படியுங்கள்..

nathan

உங்களுக்கு தெரியுமா ஆண்களுக்கு வெள்ளை முடி வருவதற்கு இந்த 11 செயல்கள்தான் காரணமாம்..!

nathan

முடி கருப்பாக வீட்டிலேயே செய்யலாம் செம்பருத்தி எண்ணெய் – இயற்கை மருத்துவம்

nathan

உங்களுக்கு தெரியுமா பீர் குடிக்கு மட்டுமல்ல, முடிக்கும் தான்!!!

nathan

நேரான முடியை பெறவேண்டுமா?

nathan