25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
cv 15
தலைமுடி சிகிச்சை

எவ்வளவு தான் தலைக்கு குளித்தாலும் முடி எண்ணெய் பசையாக இருக்கா..? அப்போ இதை செய்யுங்கோ..!!

பலருக்கு என்னதான் செய்தாலும் தலையில் உள்ள அழுக்குகளும், கிருமிகளும், எண்ணெய் பசைகளும் போகாது. முடியில் உள்ள எண்ணெய் பசையை இயற்கை முறையில் எளிதாக சரி செய்து விடலாம்.

உங்களின் முடி எண்ணெய் பசையாக இருந்தால் உங்களின் முகமும் எண்ணெய் வடிவதாய் இருக்கும். எண்ணெய் பசை முகத்தின் முழு அழகையும் பாழாக்கி விடும். இதனை எப்படி சரி செய்வது என தெரியாமல் முழித்து கொண்டிருப்பவர்களுக்கே இந்த பதிவு.

எண்ணெய் பசையா..?

தலை முழுக்க எண்ணெய் பசையா இருக்கிறதா..? என்னதான் செய்தாலும் தலையில் உள்ள அழுக்குகள் பிசுக்குகள் குறையவே இல்லையா..? இதற்கெல்லாம் காரணம் பயன்படுத்தப்படும் ஷாம்பூவும், கால மாற்றமும், ஹார்மோன் குறைபாடும், ஊட்டசத்து குறைபாடும் தான். இந்த பிரச்சினைக்கு ஆயுர்வேதத்தில் ஒரு அருமையான வழி உள்ளது.

கற்றாழை

முடியின் எண்ணெய் பசையை குணப்படுத்த ஒரு அருமையான தீர்வு தான் இந்த கற்றாழை. கற்றாழை அருமையான பலனை தரும்.

தேவையானவை :-

கற்றாழை ஜெல் 1 டேபிள்ஸ்பூன்

எலுமிச்சை 3 டேபிள்ஸ்பூன்

செய்முறை :-

முதலில் கற்றாழையின் ஜெல்லை மட்டும் தனியாக எடுத்து கொள்ளவும். அடுத்து, இதனுடன் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும். பிறகு இதனை தலைக்கு தேய்த்து மசாஜ் செய்யவும். 30 நிமிடம் கழித்து தலைக்கு குளிக்கவும். இவ்வாறு வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால் எண்ணெய் பிசுக்குகள் முற்றிலுமாக போய் விடும்.

முட்டை வைத்தியம்

முடியின் ஆரோக்கியத்திற்கு முட்டை பெரிதும் உதவும். எண்ணெய் பசையுள்ள முடியை சரி செய்ய இந்த குறிப்பு உங்களுக்கு உதவும்.

தேவையானவை :-

முட்டை 2

எலுமிச்சை 2 ஸ்பூன்

செய்முறை :-

முட்டையில் உள்ள வெள்ளை கருவை மட்டும் தனியாக எடுத்து கொள்ளவும். பிறகு இதனை நன்கு அடித்து கொள்ளவும். அடுத்து இதனுடன் எலுமிச்சை சேர்த்து கலந்து கொண்டு தலையில் தேய்த்து 20 நிமிடம் ஊற வைக்கவும். இதன் பின் தலைக்கு தேய்த்து குளிக்கவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் முடியில் உள்ள எண்ணெய் பசை விலகி விடும்.6 154116

மருதாணி

முடியின் போஷாக்கை அதிகரிக்க மருதாணி நன்கு பயன்படும். மேலும், இந்த குறிப்பு முடியில் உள்ள எண்ணெய் பசையும் சரி செய்து விடும்.

தேவையானவை :-

மருதாணி பவுடர் 1/2 கப்

முட்டை வெள்ளை கரு 1

செய்முறை :-

முதலில் முட்டையின் வெள்ளை கருவை மட்டும் தனியாக எடுத்து கொண்டு, நன்றாக அடித்து கொள்ளவும். பிறகு இதனுடன் சிறிது சிறிதாக மருதாணி பவ்டர் சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த பேஸ்ட்டை தலைக்கு தேய்த்து 40 நிமிடம் ஊற வைத்து குளிக்கவும். இதனை வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால் முடியில் எண்ணெய் பசை இல்லாமல் இருக்கும்.

முல்தானி மட்டி

முடியின் எண்ணெய் பசை பிரச்சினைக்கு ஒரு அருமையான தீர்வை தருகிறது இந்த முல்தானி மட்டி. முல்தானி 2 ஸ்பூன் எடுத்து கொண்டு அதனுடன் தேவையான அளவு நீர் சேர்த்து தலைக்கு தேய்த்து குளித்தால் தலையில் எண்ணெய் பசை பிரச்சினை முற்றுப்புள்ளி பெற்ற விடும்.9 1541

யோகர்ட்

எளிமையாக உங்கள் தலையில் உள்ள எண்ணெய் பசையை குணப்படுத்த ஒரு வழி இதுதான். இதனை தொடர்ந்து வாரத்திற்கு 1 முறை செய்து வந்தால் எண்ணெய் பிசுக்குகள் போய் விடும்.

தேவையானவை :-

யோகர்ட் 1/2 கப்

பேக்கிங் சோடா 1 ஸ்பூன்

எலுமிச்சை சாறு 2 ஸ்பூன்

செய்முறை :-

முதலில் யோகர்டுடன் பேக்கிங் சோடாவை கலந்து கொள்ளவும். அடுத்து இந்த கலவையுடன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து கொண்டு தலைக்கு தடவவும். 30 நிமிடம் ஊற வைத்து, தலைக்கு குளிக்கவும். இந்த குறிப்பு உங்களின் பிரச்சினைக்கு விரைவில் முடிவை தரும்.

இது போன்ற புதிய குறிப்புகளை பெற, எங்கள் இணைய பக்கத்தை லைக் செய்யுங்கள். அத்துடன் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் முடி பிரச்சினைக்கும் உதவுங்கள்.

Related posts

உங்களுக்கு தெரியுமா கூந்தல் வறட்சியைப் போக்கும் சிறப்பான சில முட்டை மாஸ்க்குகள்!!!

nathan

பளபளப்பான மற்றும் அடர்த்தியான தலைமுடியை பெற சூப்பர் டிப்ஸ்

nathan

வெறும் 30 நாட்களில் தலைமுடி அடர்த்தியாக வளரணுமா?இதோ அற்புதமான எளிய தீர்வு

nathan

நரைமுடியை கருமையாக்க சில டிப்ஸ்!…

nathan

படுக்கும் முன் கூந்தலை பராமரிப்பது எப்படி?

nathan

ஆரோக்கிய கூந்தலுக்கு அருகம்புல் சாறு!

nathan

பட்டுப் போன்ற கூந்தல் கிடைக்க செம்பருத்தி மாஸ்க்!

nathan

உங்களுக்கு தலை சீவும் போது முடி கொத்தா கையோடு வருதா? அப்ப தினமும் செய்யுங்க…

nathan

பொடுகு பிரச்னையை திர்க சில டிப்ஸ்!

nathan