28.1 C
Chennai
Sunday, Dec 22, 2024
625.500.560.350.160.300.0
தலைமுடி சிகிச்சை

தெரிஞ்சிக்கங்க… தலைக்கு குளிக்கும் போது இந்த தப்பை இனிமேலும் செய்யாதீங்க!

பெரும்பாலானோர் முடி உதிர்வு பிரச்சனையால் அவதிப்பட்டு வருகின்றனர். இதற்கு காரணம் தலைமுடி பராமரிப்பில் நாம் செய்யும் தவறுகளே ஆகும்.

தலைக்கு குளிக்கும் போது என்னென்ன வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பதை பார்ப்போம்.

தலைக்கு குளிப்பதற்கு முன் சீப்பால் தலைமுடியை ஒரு முறை சீவ வேண்டும். இவ்வாறு செய்வதால் தலையில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும். பின் நாம் தலைக்கு குளித்தால் முடி உடைவது தடுக்கப்பட்டு , முடி உதிர்வும் தடுக்கப்படுகிறது.

தலைமுடியை குளிர்ந்த நீரால் அல்லது வெதுவெதுப்பான நீரால் அலச வேண்டும். அதன்பின் ஷாம்பூ -வை நேரடியாக தலைமுடியில் தேய்க்கக்கூடாது.

ஷாம்பூவை ஒரு பாத்திரத்தில் ஊற்றி தண்ணீருடன் கலந்து,பின் தலையில் மென்மையாக தேய்க்க வேண்டும். இவ்வாறு செய்தால் ஷாம்பூவில் உள்ள கெமிக்கல் நேரடியாக முடியை தாக்குவது தடுக்கப்படுகிறது.

நம்மில் பல பேர் செய்யும் தவறு ஷாம்பூ நுரை போகும்வரை மட்டுமே தலைமுடியை அலசுவார்கள். இவ்வாறு செய்தால் ஷாம்பூவில் உள்ள கெமிக்கல் தலையில் தங்கி பொடுகாக மாறிவிடும். இதனால் எப்பொழுதுமே தலைமுடியை அலசிய பின் சிறிது நேரம் தலையில் மசாஜ் செய்ய வேண்டும்.

அதன்பின் மீண்டும் குளிர்ந்த நீரால் தலைமுடியை அலச வேண்டும். தலைமுடியில் உள்ள அதிகப்படியான நீரை பிழிந்துவிட்டு Conditioner -ஐ தலையில் படாமல் முடியில் மட்டும் தேய்க்க வேண்டும்.

பின் குளிர்ந்த நீரால் தலைமுடியை அலச வேண்டும். ஆரம்பத்தில் வெதுவெதுப்பான நீரில் தலைமுடியை அலசினாலும் கடைசியில் குளிர்ந்த நீர் கொண்டே தலைமுடியை அலச வேண்டும்.

இவ்வாறு செய்வதால் scalp -ல் உள்ள மயிர் துளைகள் இறுக்கமடைந்து முடி உதிர்வது தடுக்கப்படுகிறது. தலைக்கு குளித்த பின் டவல் கொண்டு முடியை கடுமையாக தேய்க்கக்கூடாது.

இவ்வாறு செய்தால் முடி உடைவு ஏற்படும்.முடி நன்கு உலராமல் சீப்பைக்கொண்டு தலைமுடியை சீவக்கூடாது. இவ்வாறு செய்தால் முடி உதிர்வு ஏற்படும்.

முடி காய்ந்தபின் தான் சீப்பை பயன்படுத்த வேண்டும். தலைமுடி உதிர்வு ஏற்படக்கூடாது என்று நினைப்பவர்கள் முக்கியமாக தினமும் தலைக்கு குளிக்கக்கூடாது.

வாரம் 2 முறை அல்லது 3 முறை மட்டுமே தலைக்கு குளிக்க வேண்டும். தினமும் தலைமுடியை அலசினால் தலையில் உள்ள இயற்கை எண்ணெய் முழுமையாக வெளியேறி முடி வறட்சி ஏற்படும்.

Related posts

கொத்து கொத்தா முடி கொட்டுதா? இப்படி ஒரு வைத்தியம் செஞ்சு பாருங்க!!

nathan

இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணா முடி உதிர்வை நிறுத்தி வழுக்கை விழாமல் தடுக்கும் …!

nathan

உங்க தலைமுடி அளவுக்கதிகமா உதிர்ந்து சொட்டையாகுதா?

nathan

உருளைக்கிழங்கு தோலை கொண்டு புதிய முடிகளை வளர செய்யும் டிரிக்ஸ்!

nathan

வழுக்கை விழுந்த இடத்தில் முடியின் வளர்ச்சியைத் தூண்ட சில பயனுள்ள டிப்ஸ்

nathan

கூந்தல் ரொம்ப உதிர்கிறதா? அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

உங்களுக்கு முடி வேகமாக வளர வேண்டுமா? அப்ப இதெல்லாம் ட்ரை பண்ணுங்க.

nathan

பெண்களே நரை முடி ஒரே வாரத்தில் கருமையாக்க வேண்டுமா?

nathan

முடி உதிர்தலை கட்டுப்படுத்தும் சூப்பர் மாஸ்க் ரெசிப்பிகள் !!

nathan