27.4 C
Chennai
Sunday, Nov 17, 2024
r5656
அழகு குறிப்புகள்சரும பராமரிப்பு

குழந்தைகளுக்கான குளியல் பொடிகளை தயாரித்து பயன்படுத்துங்கள்..

குழந்தையின் சருமம் மிகவும் மென்மையானதாக இருக்கும். இதனால் குழந்தைகள் நோய் தொற்றுகளால் எளிதில் பாதிக்கப்படுவார்கள். அவர்கள் பாதிப்படையாமல் இருக்க அவர்களை சுத்தம் செய்ய சோப்புகளை பயன்படுத்துகிறோம்.

ஆனால், அவர்களது மென்மையான உடல் சோப்பில் இருக்கும் இரசாயனத்தால் பாதிப்படைவதற்கான வாய்ப்புகள் அதிகம். நீங்கள் குழந்தைகளுக்கான சோப்பை உபயோகித்தாலும், அதிலும் இரசாயனங்கள் கலக்கப்பட்டிருக்கும். இன்றைய சூழலில் இரசாயனங்கள் அற்ற சோப்புகள் கட்டாயம் கிடைக்காது. அதற்கு என்ன தான் வழி என்றால், நம் முன்னோர்கள் பயன்படுத்திய குளியல் பொடி தான். குழந்தைகளுக்கான குளியல் பொடிகளை தயாரித்து பயன்படுத்துங்கள். இங்கு குழந்தைகளுக்கான குளியல் பொடி தயாரிக்கும் முறையை பார்க்கலாம்.

r5656

தேவையான பொருட்கள்
1 ரோஜா இதழ் – 100 கிராம்

2 பாசிப்பயறு – 500 கிராம்

3 வேப்பிலை – 50 கிராம்

4 கஸ்தூரி மஞ்சள் – 50 கிராம்

5 பாதாம் – சிறிதளவு

6 வெத்தி பூ (அ) இட்லி பூ – ஒரு கைப்பிடி அளவு

7 வெட்டி வேர் – ஒரு கைப்பிடி அளவு

8 ஆவாரம் பூ – 100 கிராம்

9 பூலான் கிழங்கு – 50 கிராம்

10 நெல்லிக்காய் பொடி – 50 கிராம்

11 அதிமதுரம் – 50 கிராம்

12 உலர்ந்த இஞ்சி (அ) சுக்கு – 25 கிராம்

13 அரிசி – ஒரு கைப்பிடி அளவு

14 துளசி – 100 கிராம்

15 ஆரஞ்சு (அ) எலுமிச்சை தோல் – 75 கிராம்

16 மகிழம் பூ – 50 கிராம்

17 செம்பருத்தி பூ – 100 கிராம்

18 சந்தானம் (கட்டையாக) – 25 கிராம்

19 கோரை கிழங்கு – 25 கிராம்

20 கடலை மாவு

செய்முறை
மேற்கூறிய பொருட்களை நன்கு வெயிலில் உலர்த்தவும். பூ வகைகள் அனைத்தும் கைகளால் பிடித்தல், நொறுங்கும் படி நன்கு உலர வேண்டும். பின் இவற்றை அரைத்து மீண்டும் உலர வைத்து பத்திரப்படுத்தி வைத்து கொள்ளுங்கள். இரண்டு முதல் மூன்று மாதங்கள் வரை கெடாமல் இருக்கும்.

குறிப்புகள்
1 கடலை மாவு தேவைப்படும் போது தனியாக கலந்து கொள்ளுங்கள். கடலை மாவு சேர்த்தால் விரைவில் பூச்சி மற்றும் வண்டுகளும் பாதிக்கப்படும். அவற்றை அதன் பின் பயன்படுத்த முடியாது.

2 குழந்தையை குளிக்க வைப்பதற்கு முன் ஆலிவ் எண்ணெய், பாதாம் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணையை உபயோகித்து மசாஜ் செய்து பின் இந்த பொடியை கொண்டு குளிக்க வையுங்கள்.

3 குழந்தையை குளிக்க வைப்பதற்கு அரைமணி நேரத்திற்கு முன்னால், இந்த பொடியை தண்ணீர், தயிர் அல்லது பால் கலந்து வைத்து பின் குளிக்க வையுங்கள்.

4 மேற்கூறிய பொருட்கள் கிடைக்கவில்லை என்றால், நாட்டு மருந்து கடைகளில் பொடியாக வாங்கி உபயோகிக்கலாம். இதில் கிடைக்காத சில பொருட்களை தவிர்த்து மற்றவைகளை கொண்டும் தயாரிக்கலாம்.

பயன்கள்
1 ரோஜா இதழ்களில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது சருமத்தை மென்மையாக்கவும், மிளிர செய்யவும், ஈரப்பதத்தை தக்க வைக்கவும் உதவுகிறது. மேலும் சூரிய கதிர்களிலிருந்து பாதுகாக்கிறது.

2 பாசிப்பயரில் வைட்டமின் எ மற்றும் சி நிறைந்துள்ளது. இது இறந்த செல்களை அகற்றவும், மென்மையாகவும், சருமத்தை பொலிவு பெறவும் செய்ய உதவுகிறது.

3 வேப்பிலை மற்றும் துளசி இயற்கை கிருமிநாசினியாக செயல்படுவதோடு, சருமத்திலிருக்கும் எண்ணெய் பசையை அகற்ற உதவுகிறது.

4 கஸ்தூரி மஞ்சள் சருமத்தின் தேவையற்ற முடிகளை அகற்றவும், சரும நிறத்தை மென்மையாக்கி மிளிர செய்யவும்,கிருமி நாசினியாகவும் செயல்படுகிறது.

5 பாதம் உடலின் ஈரப்பதத்தை தக்க வைக்க உதவுகிறது.

6 இட்லி பூ இறந்த செல்களை நீக்கவும், சருமத்தை மென்மையாகவும் உதவுகிறது.

7 வெட்டி வேர் உடலின் குளிர்ச்சியை தக்க வைக்கவும், கிருமிநாசியாகவும், சருமத்தை மென்மையாகவும் பயன்படுகிறது.

8 ஆவாரம் பூ நல்ல மணத்தை தருவதோடு, உடலில் நிறத்தை மாற்றி பொலிவு பெற செய்யவும், சரும பிரச்சனைகளுக்கான நல்ல தீர்வாகவும் அமைகிறது.

9 பூலான் கிழங்கு மற்றும் சந்தானம் வாசனை பொருளாகவும், சருமத்தின் நிறத்தை மெருகூட்டவும், சரும பிரச்சனைகளை சரி செய்யவும், கிருமி நாசினியாகவும் பயன்படுகிறது.

10 நெல்லி பொடி நிறைந்திருக்கும் வைட்டமின் சி சருமத்தை மிளிர செய்யவும், மென்மையாகவும் உதவுகிறது.

11 அதிமதுரம் சரும துர்நாற்றத்தை போக்கவும், சரும பிரச்சனைகளுக்கு அருமருந்தாக இருப்பதோடு, பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டிருக்கிறது.

12 இஞ்சி மற்றும் ஆரஞ்சு தோல் சருமத்தில் உள்ள தேவையற்ற கழிவுகளை அகற்றி, தசையை வலிமையாக்குவதோடு புத்துணர்ச்சி பெற செய்கிறது.

13 அரிசி சருமத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குவதோடு, ஈரப்பதத்தை தக்க வைக்க உதவுகிறது.

14 மகிழம் பூ மற்றும் செம்பருத்தி பூ வாசனை பொருளாகவும், சருமத்தை மென்மையாக்கி அழகு பெற செய்கிறது.

15 கோரை கிழங்கு சரும பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வாகவும், தேவையற்ற முடிகளை அகற்றவும் பயன்படுகிறது.

Related posts

பெண்களே தினமும் மேக்கப் போடாதீங்க

nathan

பருக்களினால் ஏற்பட்ட வடுக்கள் மறைய -சூப்பர் டிப்ஸ்

nathan

கும்ப ராசிக்கு இடம்மாறும் சனி!தலையெழுத்தே மாறப்போகும் ராசிக்காரர்கள்

nathan

‘இந்த’ ஃபேஷியல் உங்களுக்கு பளபளப்பான மின்னும் சருமத்தை தருமாம்…!

nathan

ஒரே வாரத்தில் அக்குளில் உள்ள கருமையை நீக்க உதவும் 3 எளிய வழிகள்!

nathan

கருப்பாக இருப்பவர்களுக்காக சில டிப்ஸ்

nathan

ஆரஞ்சு பழத்தோலை இனி தூக்கி எரியாதிங்க, காய்ந்த ஆரஞ்சு பழத்தோலை கொண்டு நம் முக அழகை அதிகரிக்க முடியும்.

nathan

இதனால் முகம் மிருதுவாகவும் பளபளப்பாகவும் மாறும்!…

sangika

Beauty tips.. சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளை தடுக்க செய்யவேண்டியவை….!!

nathan