28.4 C
Chennai
Thursday, Dec 26, 2024
அழகு குறிப்புகள்

கறுப்பான பெண்களுக்கு மேக்கப் டிப்ஸ்

p95

அதிமதுரம் கலந்து தயாரிக்கப்படும் ஸ்கின் லைட்டனிங் ஜெல் இப்போது கிடைக்கிறது. அதை முகத்தில் தடவி, அதற்கு மேல் கால் வானிக் சிகிச்சையை நான்கைந்து முறைகள் செய்தாலே வியப்பான மாற்றத்தைக் காண முடிகிறது.

கறுப்பான பெண்களுக்கான வரப்பிரசாதம் என்றே வையிட்டனிங் பேஷியல்களைச் சொல்லலாம். பட்டுக்காகப் பயன்படும் மல்பரி, கோஜிக் அமிலம் என சருமத்தை நிறமாக்கக் கூடிய இயற்கைப் பொருட்களைக் கொண்டு தயாரிக் கப்படுகின்றவற்றால் இந்த பேஷி யல் செய்யப்படுகிறது. கிளென் சிங்கில் தொடங்கி, மசாஜ், ஸ்கரப், பெக் என ஒவ்வொரு கட்டத்தி லும் நிறத்தை அதிகரிக்கச் செய் கிற பொருட்கள் இதில் உண்டு. கிவி பழம், ஸ்ட்ராபெர்ரி மற்றும் ஓரஞ்சுப் பழங்களைக் கொண்டு தயாரிக்கப்படுகிற பொருட்களால் செய்யப்படுகிற ஸ்கின் மிராக்கிள் சிகிச்சை கறுப் பான பெண்களுக்கு ரொம்பவே லேட்டஸ்ட். இவர்கள் எப்படி மேக்கப் போடலாம்?

கறுப்பான பெண்கள் பளிச்செனக் காட்சியளித்தால் போதும் என நினைக்க வேண்டுமே தவிர, வெள்ளையாகத் தெரிய வேண்டும் என நினைக்கக் கூடாது. அவர்களது சருமம் மஞ்சள், பிரவுன் அல்லது பிங்க் என எந்த மாதிரியான ஸ்கின் டோன் கொண்டது எனப் பார்த்து அதற்கேற்ற பவுண்டேஷனைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பவுண்டேஷனை மணிக்கட்டில் தடவிப் பார்த்து அது சரியாகப் பொருந்துகிறதா எனத் தெரிந்து உபயோகிக்கலாம். ஐ ஷேடோ, லிப்ஸ்டிக் போன்றவை ரொம்பவும் வெளிர் நிறமாகவும் இல்லாமல், ரொம்பவும் டார்க் நிறமாகவும் இல்லாமல் மீடியம் ஷேடில் இருக்கட்டும். லிப்ஸ்டிக் போடுகிற நிறத்திலேயே ஐ ஷேடோவும் இருக்கட்டும்.

உடை அணிகிற விஷயத்தில் இவர்கள் அதிக அக்கறை காட்ட வேண்டும். பளீர் நிற உடைகள் அப்படியே முகத்தில் பிரதிபலிக்கும். அதே சமயம் டார்க் நிற உடைகளும் அப்படியே உடலின் நிறத்தோடு ஒன்றிப் போய் இன்னும் கறுப்பாகக் காட்டும். வெள்ளை மற்றும் ரொம்பவும் வெளிர் நிறங்களைத் தவிர்த்து கிறீம், டார்க் பிங்க், ஒரேஞ்சு, நீலம், பச்சை, மெஜந்தா பிங்க் போன்ற நிறங்களில் உடை அணியலாம். கறுப்பாக இருக்கிறோமே என சோர்ந்து போயிருக்கும் பெண்களுக்கு ஒரு விஷயம். ஆரோக்கியமான சருமம் என்றால் அது கறுத்த சருமம்தான். அதில் முதுமையும், சருமப் பிரச்சினைகளும் அத்தனை சீக்கிரம் வருவதில்லை.

Related posts

எப்படி ரெண்டே நாள்ல விரட்டலாம்…அதுவும் வீட்லயே.. இந்த பருக்களை

nathan

முகப்பருவை சரியான வழிமுறைகளைக் கையாள்வதன் மூலம் வீட்டிலேயே சரிசெய்ய முடியும்.

nathan

பனிக்காலத்தில் சருமத்தின் ஆரோக்கியத்தை பராமரிக்க…..

sangika

அப்பானார் செல்வராகவன்!செல்வராகவன் வீட்டிற்கு புதிய விருந்தாளி: திரையுலகினர் வாழ்த்து!

nathan

பிரபல நடிகை பளீச்! மதுவுக்கு அடிமையானேன்.. அது இல்லனா தூக்கமே வராது

nathan

அழகுக்கு ஆயுர்வேதம்

nathan

மாலத்தீவில் தங்கையுடன் பிறந்த நாள்! நீங்களே பாருங்க.!

nathan

விவாகரத்தை தொடர்ந்து தனுஷ் பற்றி வெளியான அடுத்த உண்மை – வெளிவந்த ரகசியம்!

nathan

உங்களுக்கு தெரியுமா புடவை சாஸ்திரம் ?

nathan