பேக்கிங் சோடா: 2 ஸ்பூன் பேக்கிங் சோடாவுடன் தண்ணீர் கலந்து பேஸ்ட் போல் கரைத்து அதை கழுத்தில் பேக் போல் அப்ளை செய்து 15 நிமிடங்கள் கழித்து கழுவுங்கள்.
உருளைக் கிழங்கு: உருளைக்கிழங்கை அரைத்து அதை சாறு பிழிந்து கழுத்தை சுற்றிலும் தேய்த்து வர கருமை நீங்கும்.
கடலை மாவு : 2 ஸ்பூன் கடலை மாவு, அரை ஸ்பூன் மஞ்சள், எலுமிச்சை சாறு 1/2 ஸ்பூன், ரோஸ் வாட்டர் என எடுத்துக்கொள்ளுங்கள். அனைத்தையும் பேஸ்ட் போல் கலந்து அதை அகழுத்தை சுற்றிலும் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவிவிடுங்கள்.
தயிர் : தயிருடன் எலுமிச்சை சாறு பிழிந்து அதை கழுத்தை சுற்றிலும் தடவுங்கள். நல்ல பலன் தெரியும்.
கருவளையம் : உறைந்த டீ பேக்கை கண்களில் வைத்து 15 நிமிடங்கள் ஓய்வு எடுத்தால் சரியாகும்.
இளமை தோற்றம் : டீ பேக்கில் உள்ள இலைகளில் ஆண்டி ஆக்ஸிடண்ட் இருப்பதால் அது தோலின் செல்களை புத்துணர்வுடன் வைத்து இளமையான தோற்றத்தை தரும்.
தலை முடி வளர்ச்சி : டீ பேக்கை தண்ணீரில் கொதிக்க வைத்து அதன் சூடு குறைந்து குளுமையானதும் தலையில் ஊற்றி அலசுங்கள். 15 நிமிடங்களுக்குப் பின் தலைக்குக் குளியுங்கள்.