இந்திய பெண்கள் மிகவும் அழகானவர்கள். இதை யார் தான் மறுக்க முடியும்? பொதுவாக பெண்கள் அழகாவும் ஆரோக்கியமாகவும் தங்களை வைத்துக் கொள்ள வேண்டும் என்று விரும்புவார்கள். உலகில் எந்த இடத்தில் இருந்தாலும் பெண்கள் அவர்களை அழகுபடுத்தி அதில் மகிழ்ச்சி காண்பார்கள். இந்திய பெண்களை கருத்தில் கொள்ளும் போது கலாச்சாரம் கலந்த, மிகவும் பவ்யமான குணமும், நீளமான கூந்தல் கொண்டும் மற்றும் மென்மையான சருமத்தை கொண்டவர்களாகவும் விளங்குவார்கள். அவர்கள் எப்படி இத்தகைய அழகை பெற்று மேம்படுத்துகின்றார்கள் என்று தெரியுமா? இப்போது தெரிந்து கொள்ளுங்கள்.

1. நெல்லிக்காய் எண்ணெய்
நெல்லிக்காயில் பெருமளவு வைட்டமின் சி உள்ளது. இந்த வைட்டமினால் நீளமான அடர்ந்த கூந்தலை பெற முடியும். இதை கொண்டு பொடுகு மற்றும் இதர முடி சம்மந்த பிரச்சனைகளை நீக்க முடியும். இந்த வகை எண்ணெயை வாங்கி பயன்படுத்தும்போது தலைமுடிகளில் சிறந்த மாற்றங்களை காண முடியும்.

2. கடலை மாவு
முகத்தில் உள்ள இறந்த திசுக்களை உரித்து எடுக்க இந்திய பெண்கள் பயன்படுத்தும் மிகப் பிரபலமான பொருளாகும். இதை பல நடிகைகளும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த ஸ்கிரப் முடியில் உள்ள எண்ணெயை எடுக்கவும் உபயோகப்படுகின்றது. இதை பால் அல்லது கிரீம் ஆகியவற்றில் கலந்து சோப் போல் பயன்படுத்தலாம். இந்த பால் மற்றும் கிரீம் சருமத்தை ஈரப்பதமூட்டி மென்மையாக்குகின்றது. இதில் தேன் மற்றும் பால் ஆகியவற்றை கலந்து ஃபேஸ் பேக்காகவும் பயன்படுத்தலாம்.

3. மஞ்சள்
இந்திய மசாலாக்களில் மிகச் சிறந்த மசாலா வாசனைப் பொருள் மஞ்சள். இது பல ஆண்டுகாலமாக மக்கள் பயன்படுத்தி வரும் கிருமி நாசினிகளில் ஒன்றாகும். சரும படை, தேமல், தொற்று மற்றும் எரிச்சல் ஆகியவற்றை குணப்படுத்த மஞ்சளை பயன்படுத்துவார்கள். சருமத்தில் ஏற்பட்ட கருமையை நீக்குவதற்கும் இதை பயன்படுத்துகின்றனர். அது மட்டுமில்லாமல் முகத்தில் வளரும் முடியை நீக்குவதற்கும் மஞ்சளை தினசரி பயன்படுத்தலாம்.

4. குங்குமப்பூ
இந்திய மசாலா வகைகளில் குங்குமப்பூவும் ஒன்றாகும். இது காஷ்மீரில் அதிகளவு விளைகிறது. இதை வறண்ட சருமம் மற்றும் இதர சரும பிரச்சனைகளுக்கு பயன்படுத்தலாம். அது மட்டுமில்லாமல் சரும நிறத்தை மேம்படுத்தி நல்ல வெளிர் நிறத்திற்கு தோலை கொண்டு வரவும் உதவுகின்றது.

5. ரோஸ் வாட்டர்
புதிதாக மலர்ந்த ரோஜா இதழ்களை கொண்டு உருவாக்கப்பட்ட ரோஸ் தண்ணீரை கரு வளையங்களை போக்கவும், அமைதிப்படுத்தவும் மற்றும் டோனராகவும் பயன்படுத்தலாம். இதை பல பெண்கள் அழுக்கு மற்றும் எண்ணெய் பசையை முகத்திலிருந்து நீக்க பயன்படுத்துகிறார்கள்.

6. சந்தனம்
இந்திய கலாசாரத்தில் கடவுளின் சன்னிதானத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் பொருள் சந்தனம். இவை அழகு சேர்ப்பது மட்டுமல்லாமல், மருத்துவ மருத்துவ குணங்கள் கொண்டதாகவும் உள்ளன. சந்தன பசை மற்றும் சந்தன எண்ணெய் ஆகியவை இந்திய பெண்களால் பெரிதும் பயன்படுத்தப்படுகின்றது. அது சருமப் பராமரிப்பு, எரிச்சல், படை மற்றும் பிளாக்ஹெட்ஸ்களையும் நீக்க உதவுகின்றது.

7. சீகைக்காய்
இதை முடியின் பழம் என்றும் ஆயர்வேதத்தில் கூறுவார்கள். இவை தலையில் உள்ள பொடுகை நீக்குவதிலும் தளர்ந்த வேர்களை வலுவூட்டவும் இது வல்லமை பெற்றது.

8. தயிர்
இது உண்ணும் பொருள் மட்டுமில்லாமல் இதில் உள்ள அழகு ரகசியங்கள் ஏராளம். இதை பல ஃபேஸ் மாஸ்க் தயாரிப்பதில் பயன்படுத்தினால் முகம் பொலிவுறும். தயிர் வெளிப்புற பயனை காட்டிலும் தினசரி சாப்பிட்டால் வயிறு சம்மந்த பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வாக அமையும்.

9. உதடு பராமரிப்பு
அழகிய உதடுகளை கொண்ட இந்திய பெண்கள் முக்கிய நாட்களில் மட்டும் லிப்ஸ்டிக் போட்டுக் கொள்வார்கள்.

10. பொட்டு
எந்த ஒரு இந்திய அழகு கலையும் பொட்டு இல்லாமல் முடிந்து விடாது. இது ஒரு ஒளிரும் சிவப்பு நிற வட்டம். அதை நெற்றியின் நடுவில் வைப்பார்கள். இதை நாம் பல வடிவங்களில் மற்றும் பல வண்ணங்களில் வாங்க முடியும். இது நாம் செய்யும் அழகிற்கு ஒரு புள்ளி வைப்பதை போல் அமையும்.