அழகு குறிப்புகள்சரும பராமரிப்பு

கோடையில் சரும பிரச்சனைகள் வராமல் தடுக்கும் தேங்காய் எண்ணெய்

 

கோடையில் சரும பிரச்சனைகள் வராமல் தடுக்கும் தேங்காய் எண்ணெய் தற்போது வெயில் நம்மை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. தேங்காய் எண்ணெயில் நிறைந்துள்ள சத்துக்களால் முடி பிரச்சனைகள் மட்டுமின்றி, சரும பிரச்சனைகளையும் தடுக்கலாம். அதிலும் இதனை வெறும் தலைக்கு மட்டும் பயன்படுத்தாமல், சருமத்திற்கும் பயன்படுத்துவது நல்ல பலனைத் தரும்.

கோடையில் ஏற்படும் சரும பிரச்சனைகளைப் போக்க தேங்காய் எண்ணெயை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்பதை பார்க்கலாம்… தினமும் தலைக்கு தேங்காய் எண்ணெயை ஸ்கால்ப்பில் படும்படி பயன்படுத்தி வந்தால், அது மயிர்கால்களை வலிமையாக்கி, கோடையில் முடி உதிர்வதைத் தடுக்கும்.

மேலும் கூந்தல் வறட்சி அடைவதையும் தடுக்கும். கோடையில் சருமத்தில் உள்ள இயற்கை எண்ணெயை சூரியக்கதிர்கள் உறிஞ்சிவிடுவதால், சிலருக்கு சரும வறட்சி ஏற்படும். அதனைத் தடுக்க தினமும் குளித்து முடித்த பின், சருமத்திற்கு தேங்காய் எண்ணெயை தேய்க்க வேண்டும். இது கோடை காலத்தில் சருமம் வறட்சி அடைவதை தடுக்கும்.

தினமும் இரவில் படுக்கும் முன், கண்களுக்கு அடியில் தேங்காய் எண்ணெய் தடவி மசாஜ் செய்து தூங்கினால், கண்களுக்கு அடியில் வறட்சி ஏற்படுவதையும், கண்களுக்கு கீழ் கருமை அடைவதையும் தடுக்கலாம். 3 டேபிள் ஸ்பூன் சர்க்கரையில், தேங்காய் எண்ணெய் சிறிது சேர்த்து கலந்து, அதனைக் கொண்டு சருமத்தை ஸ்கரப் செய்தால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் அனைத்தும் நீங்கி, சருமம் பொலிவாகும்.

தேங்காய் எண்ணெய் பயன்படுத்தி செய்யப்பட்ட மேக்கப்பை ரிமூவரை பயன்படுத்தினால் சருமத்திற்கு எவ்வித பக்கவிளைவுகளும் ஏற்படாமல் தடுக்கலாம். தினமும் குளிக்கும் போது, குளிக்கும் நீரில் சிறிது தேங்காய் எண்ணெய் சேர்த்துக் கொண்டால், உடல் முழுவதும் மாய்ஸ்சுரைசர் தேய்த்தது போன்று வறட்சியின்றி மென்மையாக இருக்கும்.

Related posts

மறைந்த சில்க் ஸ்மிதா இப்படிப்பட்டவராம்! நடிகை வெளியிட்ட பதிவு!

nathan

ஒவ்வொரு பெண்ணும் தெரிந்து கொள்ள வேண்டிய 9 அழகு இரகசியங்கள்!!!

nathan

மசாலா சப்பாத்தி

nathan

அழகு பல …….. பேஷியல் டிப்ஸ்

nathan

முகத்தை ஜொலிக்க செய்யும் மாஸ்க்

nathan

உங்கள் துணை கொடுத்த முத்தத்தால் சருமத்தில் தழும்பு விழுந்துவிட்டதா?

nathan

நடிகை ஐஸ்வர்யாவுக்கு இவ்வளவு பெரிய மகளா? நீங்களே பாருங்க.!

nathan

பணத்தை காந்தம் மாதிரி இழுக்கும் 5 ராசிக்காரங்க…

nathan

மனைவிக்கு தெரியாமல் அவரின் தங்கையான மச்சினியை 2வது திருமணம் செய்து கொண்ட கணவன்!

nathan