அதிகப்படியான இரத்தப்போக்கு, இரத்தப் போக்கே ஏற்படாமல் இருப்பது, வெள்ளை வெளிப்படுதல் என பல்வேறு பிரச்சனைகளை பெண்கள் மாதவிடாய் காலங்களில் எதிர்கொள்கின்றனர். முதலில் எல்லாம் நம் வீட்டு பெண்கள், வீடு துடைப்பது, துணி துவைப்பது, மாவாட்டுவது என உடற்பயிற்சிக்கு பதிலாக கடின வேலைகள் செய்து வந்தனர்.
அதனால், அவர்களுக்கு எந்த குறைபாடும் இன்றி இருந்தனர். ஆனால், நவீன இயந்திரங்கள் அவர்களது உழைப்பை குறைத்து, உடல்நலப் பிரச்சனைகளை அதிகரிக்க செய்துவிட்டது. தாறுமாறாக உடல் எடையை ஏற்றுபவர்களுக்கு, மாதவிடாய் காலங்களில் பிரச்சனைகள் எழுகின்றன என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். பொதுவாக இது நாட்கள் தள்ளி போகும் பிரச்சனைக்கு காரணமாக இருக்கின்றது.
எனவே, திடீர் என்று உடல் எடையை கூட்டுபவர்கள் கவனமாக இருங்கள். ஐ.டி. பெண்கள் பப்புகளில் ஐட்டம் டான்ஸ் ஆடியப்படியே மது அருந்துகின்றனர். இந்த போக்கு பெண்களின் மாதவிடாய் சுழற்சியை சீர்குலைக்கின்றது. ஐடி துறைகளில் ஷிப்ட் மாறி, மாறி வேலை செய்பவர்கள் மாதவிடாய் சுழற்சிகளில் மாற்றங்கள் ஏற்படுகிறது.
சமீபத்தில் ஓர் ஆய்வில், இவ்வாறு வேலை செய்யும் பெண்களில் 33% பேருக்கு நாட்கள் தள்ளி போவதாய் கூறப்பாட்டிருக்கிறது. தொடார்ந்து ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் நாட்கள் தள்ளி சென்றாலோ, இரத்தப் போக்கில் இடையூறுகள் ஏற்பட்டாலோ உடனடியாக மருத்துவரை அணுக வேண்டியது அவசியம். தைராயிடுப் பிரச்சனை இருந்தால் கூட இவ்வாறு ஆகலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.