29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
foodsthatcausegreasy
தலைமுடி சிகிச்சை

உங்களுக்கு எவ்வளவு தலைக்கு குளிச்சாலும் முடி எண்ணெய் பிசுக்காவே இருக்கா? இதை முயன்று பாருங்கள்!

பொதுவாக நாம் செய்கின்ற செயல்கள் தான் நம்மை பாதிக்கின்றன. இது உணவு பொருட்கள் முதல் அன்றாட செயல்கள் வரை அடங்கும். இவை உள் உறுப்புகளை பாதிப்பதோடு, வெளி உறுப்புகளையும் சேர்த்தே பாதிக்கும். அந்த வகையில், நாம் தினமும் சாப்பிடுகிற ஒரு சில உணவுகள் தான் நமது முடியின் மோசமான நிலைக்கு முக்கிய காரணமாக இருக்கிறது.

பொடுகு தொல்லை, முடி கொட்டுதல், வழுக்கை, எண்ணெய் பசை இப்படி பலவித பிரச்சினைகள் முடியில் ஏற்படுகின்றன. இவற்றிற்கும் உணவிற்கும் தொடர்புண்டு என ஆய்வுகள் கூறுகின்றன. குறிப்பாக தலைமுடியை எவ்வளவு தான் அலசினாலும் முடியில் மீண்டும் மீண்டும் எண்ணெய் பசை வருவதற்கு நாம் சாப்பிட கூடிய உணவுகள் தான் காரணமாம். அவை என்னென்ன உணவுகள் என்பதை பற்றி இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம்.

சர்க்கரை

நாம் சாப்பிட கூடிய உணவு பொருட்களில் சர்க்கரை அதிக அளவில் இருந்தால் நிச்சயம் அது உங்களின் முடியையும் பாதிக்கும். சர்க்கரை அதிகம் சேர்த்துள்ள உணவுகளை சாப்பிட்டால் ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படும். இதனால் எண்ணெய் சுரப்பிகள் தலையில் மேலும் மேலும் எண்ணெய்யை சுரக்க செய்து விடும்.foodsthatcausegreasy

கொழுப்பு உணவுகள்

உணவில் அதிக அளவு கொழுப்பு சேர்த்து கொண்டால் அவை உடலை பாதிப்பதோடு முடியின் நலத்தையும் சேர்த்தே பாதிக்க செய்யும். இதனால் எண்ணெய் சுரப்பிகள் தலை பகுதியில் அதிக எண்ணையை சுரக்க செய்யும். எனவே, கொழுப்பு கொண்ட உணவுகளை தவிர்த்து விடுங்கள்.

கார்ப்ஸ்

கார்போஹைட்ரெட் அதிகம் கொண்ட உணவுகளை சாப்பிட்டால் முடியில் மீண்டும் மீண்டும் எண்ணெய் பிசுக்கு வர தொடங்கும். குறிப்பாக வெள்ளை பிரட், பிஸ்கட், குக்கீஸ் போன்றவற்றினால் இந்த பாதிப்புகள் ஏற்படும்.

பால் பொருட்கள்

அதிகமாக உணவில் பால் பொருட்களை சேர்த்து கொள்வோருக்கு முடியில் எண்ணெய் பிசுக்கு உண்டாக கூடும். மேலும், இதனால் முகப்பருக்கள், முகத்தில் எண்ணெய் வடிதல் ஆகிய பாதிப்புகள் நிகழலாம். இவை அனைத்திற்கும் முக்கிய காரணமே ஹார்மோன் மாற்றமும் தான்.7 155472

உப்பு

உணவில் அதிக அளவு உப்பு சேர்த்து கொண்டால் அதனால் எண்ணெய் பிசுக்குகள் தலையில் அதிகரிக்கும். அதிகம் உப்பு சேர்த்த சிப்ஸ், மிக்சர்கள், கடலை, பட்டாணி ஆகியவற்றால் இப்படிப்பட்ட பாதிப்புகள் ஏற்படும்.

பொறித்த, வறுத்த உணவுகள்

பலர் எப்போதுமே வறுத்த அல்லது பொறித்த உணவுகளை சாப்பிடுவதால் தான் முடியில் இது போன்ற பிரச்சினைகள் ஏற்படுகிறது. இவை தலை பகுதியில் எண்ணெய் சுரப்பிகளை சுரக்க செய்து முடியை எண்ணெய் பசையாக வைத்து கொள்கிறது.

தீர்வு

இது போன்ற எண்ணெய் பிசுக்குகளை நீக்க வைட்டமின் பி, ஜின்க் மற்றும் வைட்டமின் ஈ அதிகம் கொண்ட உணவுகளை சேர்த்து சாப்பிட்டாலே போதும். மேலும், கெட்ட கொழுப்புகள் கொண்ட உணவுகளை தவிர்த்து நல்ல கொழுப்புகள் கொண்ட உணவு பொருட்களை சாப்பிடுங்கள்.

Related posts

பொடுகை நீக்க சில டிப்ஸ்…

nathan

முடியின் அடர்த்தி குறைகிறதா? அப்ப உடனே இத ஃபாலோ பண்ணுங்க…

nathan

இதோ அற்புதமான எளிய தீர்வு! பொடுகுத் தொல்லையை நிரந்தரமாக போக்க ஷாம்புவுடன் தேங்காய்ப்பாலை இப்படி தேய்ங்க…

nathan

கருப்புத்தான் எனக்கு பிடிச்ச கலரு

nathan

இளநரைக்கான வீட்டு சிகிச்சை

nathan

சிறந்த கூந்தலுக்கு மூலிகை ஷாம்பு

nathan

வெள்ளை முடி அதிகமா இருக்கா?

nathan

ஆண்களே தெரிஞ்சிக்கங்க…இந்த ஒரு பொருள் வழுக்கைத் தலையிலும் முடியை வளரச் செய்யும் என்பது தெரியுமா?

nathan

உங்க இளநரையை போக்கும் ஹென்னா ஆயில் !

nathan