30.4 C
Chennai
Sunday, Nov 17, 2024
cover 156 1
தலைமுடி சிகிச்சை

சூப்பர் டிப்ஸ்! வெறும் 2 ரூபாய் செலவில் உங்கள் முடி வளர்ச்சியை அதிகரிக்கலாம். எப்படினு பாருங்க.

பலரின் மிகப் பெரிய பிரச்சனையே முடி கொட்டுதலாகத் தான் உள்ளது. தற்போதைய காலகட்டத்தில் பெண்களுக்கு தங்களின் முடியைக் கவனித்துக் கொள்ளவே நேரமில்லை. முடி கொட்டுதல், முடி வளர்ச்சியின்மை, முடி அடர்த்தி இல்லாமை போன்ற பிரச்சனைகள் உள்ளன. எத்தனையோ குறிப்புகள் விலையுயர்ந்த மருந்துகள் வாங்கி பயன்படுத்தியும் முடி வளர்ச்சி பெறவில்லை என்ற கவலை சிலருக்கு உள்ளது. உங்களுக்கான சிறந்த தீர்வாக வைட்டமின் ஈ மாத்திரைகள் உதவும்.

வைட்டமின் ஈ மாத்திரைகள் உங்கள் முடியின் கட்டமைப்பை மாற்றி அமைக்க உதவும். இந்த மாத்திரைகள் உங்கள் முடியின் வளர்ச்சியை ஊக்குவித்து முடி உதிர்வதைக் கட்டுப்படுத்தி உங்கள் முடியைப் பளபளக்கச் செய்கிறது. இந்த மாத்திரை வெறும் இரண்டு ரூபாய் தான். வைட்டமின் ஈ மாத்திரைகளுடன் மற்றும் சில பொருட்களைச் சேர்ப்பதன் மூலம் உங்கள் முடி உதிர்தலைத் தடுத்து அடர்த்தியாகச் செய்யலாம்.

பாதாம் எண்ணெய்

வைட்டமின் ஈ, தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய் மற்றும் ஆமணக்கு எண்ணெய் இவை அனைத்தும் கலந்த கலவை முடியை ஆரோக்கியமாக மாற்றி உச்சந்தலையை ஈரப்பதத்துடன் வைப்பதால் முடி உதிர்வதைத் தடுக்க உதவுகிறது.

தேவையான பொருட்கள்

2 வைட்டமின் ஈ மாத்திரைகள், ஒரு தேக்கரண்டியளவு பாதாம் எண்ணெய், ஒரு தேக்கரண்டியளவு தேங்காய் எண்ணெய், ஒரு தேக்கரண்டியளவு ஆமணக்கு எண்ணெய் மற்றும் சில துளிகள் லாவெண்டர் எண்ணெய் எடுத்துக் கொள்ளுங்கள். முதலில் வைட்டமின் ஈ மாத்திரையிலிருந்து எண்ணெயை வெளியே எடுத்து பாதாம் எண்ணெய், தேங்காய் எண்ணெய், ஆமணக்கு எண்ணெய் மற்றும் லாவெண்டர் எண்ணெய் ஆகியவற்றுடன் கலக்குங்கள். இந்த கலவையை முடி முழுவதும் தடவி ஒரு நாள் இரவு வரை விட்டுவிடுங்கள். அடுத்த நாள் காலையில் நல்ல ஷாம்பூ பயன்படுத்தி அலசுங்கள். இந்த முறையை நீங்கள் வாரத்திற்கு மூன்று முறை செய்யலாம்.cover 156 1

முட்டை

வைட்டமின் ஈ மாத்திரைகள் மற்றும் முட்டை இவை இரண்டும் முடி உதிர்தலுக்கு எதிராகப் போராடுவதற்கும், முடியின் அடர்த்தியை அதிகரிப்பதற்கும் உதவுகிறது.

தேவையான பொருட்கள்

2 முட்டைகள், 2 தேக்கரண்டியளவு பாதாம் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய், மற்றும் 2 வைட்டமின் ஈ மாத்திரைகள் எடுத்துக் கொள்ளுங்கள். வைட்டமின் ஈ மாத்திரையிலிருந்து எண்ணெய்யை வெளியே எடுத்து முட்டை மற்றும் வைட்டமின் ஈ எண்ணெய் மற்றும் பாதாம் எண்ணெய் அனைத்தும் நன்றாக ஒன்றோடு ஒன்று மிக்ஸ் ஆகும் வரை கலந்து கொள்ளுங்கள். தலை முடியில் தடவி 20 முதல் 30 நிமிடங்களுக்குப் பிறகு, ஷாம்பூ கொண்டு அலசுங்கள்.

கற்றாழை

வைட்டமின் ஈ மாத்திரைகள் மற்றும் கற்றாழை இரண்டும் உலர்ந்த முடி பிரச்சினைகளுக்குச் சிறந்த தீர்வளிக்க உதவுகிறது.

தேவையான பொருட்கள்

கற்றாழை ஜெல் சிறிதளவு, இரண்டு தேக்கரண்டியளவு வினிகர் , இரண்டு வைட்டமின் ஈ மாத்திரைகள், ஒரு தேக்கரண்டியளவு கிளிசரின், ஒரு முட்டை எடுத்து அனைத்தையும் நன்றாகக் கலக்கிக் கொள்ளுங்கள். இந்த கலவையைக் கொண்டு தலைமுடியை மசாஜ் செய்யுங்கள். பின்னர் அரை மணி நேரத்திற்கு ஷாவ்ர் கேப் கொண்டு மூடி வையுங்கள். அரை மணி நேரம் கழித்து ஷாம்பூ மற்றும் கண்டிஷனர் கொண்டு அலசுங்கள்.

ஜோஜோபா எண்ணெய்

வைட்டமின் ஈ மாத்திரைகள் மற்றும் ஜோஜோபா எண்ணெய் இவை இரண்டும் முடி வளர்ச்சியை அதிகரிக்க உதவுகிறது. மேலும் முடியின் பிரச்சனைகளைச் சரி செய்து முடியை மென்மையாக்குகிறது.

தேவையான பொருட்கள்

மூன்று தேக்கரண்டியளவு ஜோஜோபா எண்ணெய், மூன்று தேக்கரண்டியளவு கற்றாழை ஜெல், மூன்று தேக்கரண்டியளவு வைட்டமின் ஈ எண்ணெய் ஆகியவற்றை நன்றாகக் கலந்து ஒரு பேஸ்டை உருவாக்கிக் கொள்ளுங்கள். இதனை முடியில் தேய்த்து 45 நிமிடங்கள் கழித்து ஷாம்பூ கொண்டு அலசுங்கள்.

அவோகேடா

உங்கள் முடியை ஈரப்பதத்துடன் வைப்பதற்குச் சிறந்த வழி அவோகேடா தான். அவோகேடா உங்கள் முடியை ஈரப்பதத்துடன் வைத்து முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.

தேவையான பொருட்கள்

இரண்டு வைட்டமின் ஈ மாத்திரைகள், ஒரு துண்டு வெள்ளரிக்காய், ஒரு தேக்கரண்டியளவு கற்றாழை ஜெல் எடுத்துக் கொள்ளுங்கள். வைட்டமின் ஈ மாத்திரையிலிருந்து எண்ணெய்யை எடுத்து மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். இதைத் தலை முடியில் தடவி கொண்டை இட்டு அரை மணி நேரம் கழித்து ஷாம்பூ மற்றும் கண்டிஷனர் கொண்டு அலசுங்கள்.4 156

ரோஸ்மேரி

வைட்டமின் ஈ மாத்திரைகள் மற்றும் ரோஸ்மேரி இவை இரண்டும் உங்கள் முடி வளர்ச்சியை அதிகரித்து, முடி உதிர்வதைத் தடுக்கிறது மேலும் முடியை உறுதியாக்குகிறது.

தேவையான பொருட்கள்

சிறிதளவு நறுக்கிய ரோஸ்மேரி, 5 முதல் 6 தேக்கரண்டியளவு பாதாம் அல்லது தேங்காய் எண்ணெய், 1 முதல் 2 வைட்டமின் ஈ மாத்திரைகளின் எண்ணெய் எடுத்து அனைத்தையும் நன்றாகக் கலக்கிக் கொள்ளுங்கள். ஒரு காட்டன் பஞ்சை எடுத்து அதில் நனைத்து முடியின் வேர்களில் படும்படி தேயுங்கள். பின்னர் சிறிது நேரம் மசாஜ் செய்து 15 முதல் 20 நிமிடங்கள் கழித்து ஷாம்பூ மற்றும் கண்டிஷனர் கொண்டு அலசுங்கள். இது உங்கள் முடியின் வளர்ச்சியை உறுதியாக்கும்

Related posts

கூந்தல் அதிகமாக உதிர்கிறதா? இந்த 3 சூப்பர் பொருட்களை எப்போதும் வீட்டில் வைத்திருங்கள்!!

nathan

தலைமுடி அதிகம் உதிர்வது ஏன் தெரியுமா?

nathan

நீளமாக கூந்தல் வளர…

nathan

பெண்களே என்ன பண்ணினாலும் பொடுகு போகலையா? இதோ அற்புதமான எளிய தீர்வு

nathan

பூண்டோடு ‘இந்த’ பொருட்களை சேர்த்து யூஸ் பண்ணா… அடர்த்தியா முடி வளருமாம்!

nathan

அடர் கூந்தலுக்கு அசத்தலான ஹேர் ஸ்பிரே! வெந்தயம் இப்படியும் பயன்படுமா?

nathan

கருப்புத்தான் எனக்கு பிடிச்ச கலரு

nathan

முடியின் வறண்ட தன்மை, பொடுகுத் தொல்லை மற்றும் முடி உதிர்தல் சிகிச்சைதான் ‘ஹேர் ஸ்பா’

nathan

முடியின் அடர்த்தியை அதிகரிக்க வேண்டுமா? அப்ப இதெல்லாம் ட்ரை பண்ணி பாருங்க…

nathan