28.1 C
Chennai
Sunday, Dec 22, 2024
Meena interview SECVPF

தனது மகளுடன் விஜய் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்ட மீனா.

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகையாக இருந்து வருகிறார் நடிகை மீனா. சூப்பர் ஸ்டார் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த மீனா அதன் பின்னர் அவர் படத்திலேயே கதாநாயகியாகி பல்வேறு படங்களில் நடித்துள்ளார். மேலும், பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார் மீனா. 2009 ஆம் ஆண்டு நடிகை மீனா வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்/ திருமணத்திற்கு பின்னர் இவருக்கு நைனிகா என்ற அழகான பெண் குழந்தையும் பிறந்தது. மேலும், இவரது மகள் விஜய் நடிப்பில் வெளியான தெறி படத்தில் விஜய்க்கு மகளாக நடித்திருந்தார்.

அட்லி மற்றும் விஜய் கூட்டணியில் முதன் முறையாக வெளியான ‘தெறி ‘திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. இந்தப் படம் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தில் விஜய்யின் மகள்களாக பிரபல நடிகை மீனாவின் மகளான பேபி நைனிகாவும், விஜய்யின் மகள் திவ்யா ஷாஷாவும் நடித்திருந்தனர்.

தெறி படத்திற்கு பின்னர் வேறு எந்த படத்திலம் காண முடியவில்லை. சமீபத்தில் இவரது சமீபத்திய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் அடையாளம் தெரியாத படி வளர்ந்து இருக்கும் பேபி நைனிகாவை கண்டு நமக்கே வியப்பாக தான் இருந்தது.ஆனால், பேபி நைனிகா கதாபாத்திரத்தில் முதலில் நடிப்பதாக இருந்தது பிரபல நடிகரான ஸ்ரீயின் மகள் தானாம். நடிகர் ஸ்ரீ பிரபல இசையமைப்பாளரான சங்கர் கணேஷின் மகன் என்பது குறிபிடத்தக்கது.

 

View this post on Instagram

 

Throwback pic..Theri success party ❤@atlee47 @priyaatlee

A post shared by Meena Sagar (@meenasagar16) on

லும், பல்வேறு சீரியல்களில் தற்போது யாரடி நீ மோகினி தொடரில் நடித்து வருகிறார். அதே போல நடிகர் ஸ்ரீ பல்வேறு திரைப்படங்களிலும் நடித்துள்ளார். அந்த வகையில் விஜய் நடிப்பில் வெளியான தெறி படத்திலும் நடித்திருந்தார். மேலும், இவர், சஞ்சீவ், விஜய் ஆகியோர் நண்பர்கள் என்பதும் குறிபிடத்தக்கது.

 

View this post on Instagram

 

Throwback pic..Theri success party ❤ @atlee47 @priyaatlee @vijay_official

A post shared by Meena Sagar (@meenasagar16) on

இந்த நிலையில் நடிகை மீனா, தெறி படத்தின் வெற்றி விழாவில் தனது மகளுடன் விஜய் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை தனது சமூக வளைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இதுவரை இந்த புகைப்படத்தை கண்டிராத ரசிகர்கள் இந்த புகைப்படத்தை அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.