தமிழ் சினிமா திரை உலகில் பல ஆண்டு காலமாக லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை நயன்தாரா. ரசிகர்கள் நயன்தாராவை எவர்கிரீன் நடிகை என்று ரசிகர்கள் இவர், முன்னணி நடிகர்களுக்கு நிகராக சம்பளத்தை வாங்கும் ஒரே நடிகையும் இவர் தான். சில வருடங்களாகவே நடிகை நயன்தாரா கதாநாயகிகளுக்கு முக்கியதுவம் கொடுக்கும் கதாபாத்திரங்களை தேர்தெடுத்து நடித்து வருகிறார்.
ந்நிலையில் தற்போது நடிகை நயன்தாரா அவர்களின் அறிய புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. நடிகை நயன்தாரா அவர்கள் சினிமா உலகிற்கு வருவதற்கு முன்பு அவர்கள் மாடலிங், தொகுப்பாளினியாகவும் இருந்துள்ளார். தற்போது, நடிகை நயன்தாராவுக்கு மேக்கப் செய்த ஆர்ட்டிஸ்ட் அணிலா ஜோசப் அவர்கள் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் நயன்தாரா உடைய புகைப்படங்களை பதிவிட்டு உள்ளார்.
அதில், நயன்தாரா அவர்கள் பதிவிட்டு நடிக்கும் போது எடுத்த சில புகைப்படங்களை தற்போது அவர் சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தில் நயன்தாரா சற்று வித்தியாசமாக தான் காணப்படுகிறார் என்று தான் சொல்ல வேண்டும். இது இதுவரை பார்த்திராத இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக ப ரவி வருகிறது.