நாட்டில் அல்லாத நோய்கள் (NDC) சுமை அதிகரித்து வருகிறது மற்றும் பல்வேறு காரணங்களால் ஆண்கள் அதிக ஆபத்தில் உள்ளனர். சிறு நகரங்கள், நகரங்கள் மற்றும் கிராமப்புற பகுதிகளில் நாட்டில் அல்லாத நோய்களின் தாக்கங்களை அதிகம் காணலாம். இதற்கு ஆரோக்கியமான வாழ்க்கை குறித்த விழிப்புணர்வு பெண்கள் மற்றும் ஆண்களிடையே மிகவும் குறைவாக இருப்பது தான் காரணம். ஆனால் உடல்நல அபாயங்கள் என்று வரும் போது, அதில் ஆண்கள் தான் முதலிடத்தில் உள்ளனர்.
ஏனெனில் பெண்களை விட ஆண்கள் தான் அதிகளவு உடல்நல அபாயங்களால் அவஸ்தைப்படுவதோடு, மரணங்களையும் சந்திக்கின்றனர். இப்போது அந்த அபாயங்கள் குறித்தும், ஏன் ஆண்கள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர் என்றும் காண்போம்.
ஆண்களை அதிகம் தாக்கும் அபாயங்கள்:
* இதய நோய்
* புற்றுநோய்
* பக்கவாதம்
* விபத்துக்கள்
* நுரையீரல் நோய்
* நிமோனியா
* சர்க்கரை நோய்
* மன இறுக்கம்
* கல்லீரல் நோய்
* மனிதக்கொலை
* எடை பிரச்சனைகள்
ஏன் ஆண்கள் அதிக அபாயத்தில் உள்ளனர்?
ஆண்கள் அபாயங்களை சாதாரணமாக எடுத்துக் கொள்கிறார்கள் மற்றும் பெரும்பாலும் அபாயங்களை வயதானர்களுடன் தொடர்புபடுத்துகிறார்கள். மேலும் பெண்களுடன் ஒப்பிடும் போது ஆரம்ப கால நோயறிதல் மற்றும் சிகிச்சைக்கு ஆண்கள் மிகவும் குறைவாகவே செல்கின்றனர்.
மன அழுத்தம்
மன அழுத்தம் அமைதியாக இருந்து ஆளைக் கொல்வதில் முதன்மையானது. பெரும்பாலும் ஆண்கள் தான் மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கையை வாழ்கின்றனர். மன அழுத்தம் வந்துவிட்டாலே, அது உடலில் பல பிரச்சனைகளை வரவழைத்துவிடும். இதனால் தான் ஆண்கள் அதிகமாக உடல்நல அபாயங்களால் அவஸ்தைப்படுகிறார்கள்.
இயந்திரங்களே காரணம்
விரைவான தொழில்மயமாக்கல் மற்றும் நகரமயமாக்கல் உடலுழைப்பில்லாத வேலைப்பளு மற்றும் அழுத்தத்தைக் கொடுத்து ஆண்களை பரபரப்பான வாழ்க்கையை வாழச் செய்கிறது. முன்பெல்லாம் வீட்டில் அனைத்து வேலைகளையும் நாமாகவே செய்ய வேண்டியிருந்தது. ஆனால் தற்போது ஒவ்வொரு வேலையை செய்யவும் ஒவ்வொரு இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டதால், வீட்டு வேலைகளை இயந்திரங்களும், உடலுக்கு உழைப்பு கொடுக்காத அலுவலக வேலையை நாமும் செய்கிறோம். ஆய்வுகளில் 50 சதவீதத்திற்கும் அதிகமான ஆண்கள் உடல் பருமனால் அவஸ்தைப்படுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
விறைப்புத்தன்மை பிரச்சனை
ஆண்களின் ஆரோக்கியம் புரோஸ்டேட் ஆரோக்கியத்திற்கு அப்பாற்பட்டது என்பதால், ஆணின் கவலைக்கு மற்றொரு முக்கிய காரணம் விறைப்புத்தன்மை பிரச்சனை (ED) ஆகும். இது ஆண்மைக் குறைவு என்றும் அழைக்கப்படுகிறது. இப்பிரச்சனைக்கு பல காரணங்கள் உள்ளன. அவையாவன:
* ஹார்மோன் பிரச்சனைகள்
* காயங்கள்
* நரம்பு பாதிப்பு
* நோய்கள்
* தொற்றுகள்
* சர்க்கரை நோய்
* மன அழுத்தம்
* மன இறுக்கம்
* பதற்றம்
* போதைப் பழக்கம்
* மருந்துகள்
இயற்கை மருத்துவம் நோயின் மூல காரணத்தை மையமாகக் கொண்டிருப்பதால், இது விறைப்புத்தன்மை பிரச்சனைக்கு ஒரு சிறந்த சிகிச்சையை வழங்குகிறது.
விழிப்புணர்வு – குழப்ப வேண்டாம்
ஆரோக்கியமான வாழ்க்கைக்கு விழிப்புணர்வை உருவாக்குவது அவசியம். ஆனால் சில சமயங்களில் நமது முயற்சி தோல்வியடைந்துவிடுகிறது. உயர் தொழில்நுட்ப தகவலால் ஆண்கள் பொதுவாக குழப்பமடைவார்கள். முதல் நாள் டீ நல்லது என்று கண்டுபிடிக்கப்பட்டால், மறுநாள் மற்றொரு ஆய்வில் டீ ஆரோக்கியமற்றது என்ற தகவல் வெளிவரும். இந்நிலையில் இயற்கை மருத்துவமே நமக்கு கைக்கொடுக்கும். ஆகவே ஆரோக்கியமான வாழ்க்கை என்பது நம் கையில் தான் உள்ளது. அதைப் புரிந்து வாழுங்கள்.