25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
cv3 15

அற்புதமான எளிய தீர்வு! ஆண்களின் முகத்தை இளமையாக வைத்து கொள்ளும் இந்த புதுவித பழம் பற்றி தெரியுமா..?

நம் அனைவருக்கும் நீண்ட நாட்கள் இளமையாகவும் அழகாகவும் இருக்க வேண்டும் என்ற எண்ணம் நிச்சயம் இருக்கும். இது எதார்த்தமான ஒன்றுதான். ஆனால், இதனை நிறைவேற்றுவதற்கு பல வகையனா வேதி பொருட்களையும், மருந்துகளையும் நாம் வாங்கி உண்கின்றோம். இதில் அந்த அளவிற்கு பயன் ஒன்றுமில்லை.

மாறாக, நாம் இந்த இளமையான பொலிவான சருமத்தை பெறுவதற்கு ஒரு புதுவித பழம் நமக்கு உதவும். அது என்ன பழம்னு கேக்கிறீங்களா..? அதுதான் கிரேப்ரூட் (grapefruit). இதனை பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், இந்த பழத்தில் தான் இளைமைக்கான ரகசியம் ஒளிந்து கொண்டுள்ளது. எப்படி என்பதை இனி அறிவோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

புது வகையா..?

இந்த கிரேப்ரூட் பார்ப்பதற்கு கிட்டத்தட்ட ஆரஞ்ச் பழத்தை போன்றே இருக்கும். ஆனால், இது ஆரஞ்ச் பழம் கிடையாது. இதன் மருத்துவ பயன்கள் ஏராளம். உடல் எடை குறைப்பு முதல் இளமையான முகம் வரை அனைத்திற்கும் இது வழி செய்கிறது. இதன் முழு பயன்பாட்டையும் நாம் இனி வரும் பத்தியில் தெரிந்து கொள்வோம்.

செக்க சிவந்த பழம்…!

இந்த பழத்தில் ஏராளமான அளவில் ஊட்டச்சத்துக உள்ளன. பொட்டாசியம், கால்சியம், இரும்பு சாது, மெக்னீசியம், வைட்டமின் சி, வைட்டமின் எ, பாஸ்பரஸ், போன்ற முக்கிய தாதுக்கள் இதில் இருக்கிறது. எனவே, உடல் ஆரோக்கியம் மற்றும் முக அழகு ஆகிய இரண்டையும் சேர்த்து பார்த்து கொள்ளும்.

நீண்ட இளமைக்கு…

நீங்கள் நீண்ட காலம் இளமையாக இருக்க வேண்டுமென்றால், அதற்கு கிரேப்ரூட் சிறந்த நண்பனாக உதவும்.

தேவையானவை :-

தேன் 1 ஸ்பூன்

கிரேப்ரூட் சாறு 1/2 கப்

ஓட்ஸ் 2 ஸ்பூன்

செய்முறை :-

முதலில் கிரேப்ரூட் மற்றும் ஓட்ஸை நன்றாக அரைத்து கொள்ளவும். பிறகு இவற்றுடன் தேன் கலந்து முகத்தில் பூசி மசாஜ் செய்து, 20 நிமிடம் கழித்து கழுவி விடவும். இவ்வாறு வாரத்திற்கு 1 அல்ல்து முறை செய்து வந்தால் முகத்தில் செல்கள் புத்துணர்வுடன் இருக்கும். எனவே, நீண்ட நாட்கள் இளமையாக இருக்கலாம்.

cv3 15

இளமை டிப்ஸ் #2

முகத்தில் எந்த வித கிரீம்களை பயன்படுத்தாமலே இளமையை பெற வேண்டுமா..? அப்போ இந்த குறிப்பை பயன்படுத்தி வாருங்கள்.

தேவையானவை :-

கிரேப்ரூட் சாறு 2 ஸ்பூன்

யோகர்ட் 2 ஸ்பூன்

செய்முறை :-

இளமையான முகத்தை பெற, முதலில் கிரேப்ரூட் சாற்றை தனியாக வடிகட்டி எடுத்து கொள்ளவும். அடுத்து இவற்றுடன் யோகர்ட் சேர்த்து முகத்தில் பூசி 15 நிமிடம் மசாஜ் செய்து வரவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் முகம் பளபளப்பான மற்றும் இளமையான சருமத்தை பெரும்.

பருக்களை விரட்டி அடிக்க…

முக அழகை கெடுக்கும் பருக்களை விரட்டி அடிக்கணுமா..? அதற்கு இனி நம்ம கிரேப்ரூட் மட்டுமே போதும்.

தேவையானவை :-

தேன் 1 ஸ்பூன்

கிரேப்ரூட் சாறு 2 ஸ்பூன்

சோளமாவு 2 ஸ்பூன்

1 154

செய்முறை :-

முதலில் சோளமாவை கிரேப்ரூட் சாறுடன் சேர்த்து கலந்து கொள்ளவும். அடுத்து இவருடன் தேனையும் கலந்து கொண்டு முகத்தில் பூசி, 20 நிமிடம் கழித்து வெது வெதுப்பான நீரில் கழுவவும். இவ்வாறு செய்து வந்தால் பருக்கள் காணாமல் போய் விடும்.

வறண்ட சருமத்திற்கு

சருமம் வறட்சியாக இருந்தால் முக அழகு முழுவதையும் கெடுத்து விடும். இனி இதனை சரி செய்ய இந்த குறிப்பை பயன்படுத்துங்கள்.

தேவையானவை :-

முட்டை வெள்ளை கரு 1

தேன் 1 ஸ்பூன்

கிரேப்ரூட் சாறு 2 ஸ்பூன்

செய்முறை :-

முதலில் முட்டையின் வெள்ளை கருவை நன்கு அடித்து கொள்ள வேண்டும். அடுத்து இவற்றுடன் தேன், கிரேப்ரூட்சாறு சேர்த்து கலக்கி கொண்டு முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவவும். இதனால், முக வறட்சி சரியாகி விடும்.

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் அழகிற்கும் உதவுங்கள்.