கொரோனா தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு கடந்த சில வாரங்களாகவே பிரபலங்கள் மற்றும் திரைஉலகை சேர்ந்தவர்கள் நிதியுதவி அளித்த வண்ணம் உள்ளனர். அந்த வகையில் பிரபல திரைப்பட நடிகர் அஜித் அவர்கள் கொரோனா தடுப்பு பணிகளுக்காக 1.25 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கினார். ஆனால் நடிகர் விஜய் இதுவரை கொரோனா தடுப்பு பணிகளுக்கு எந்த நிதியுதவியும் அளிக்கவில்லை. ஏன் நடிகர் விஜய் கொரோனா தடுப்பு பணிகளுக்காக எந்த நிதியுதவியும் அளிக்கவில்லை என்று பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதுபற்றி மூத்த பத்திரிகையாளர் ஜெ.பிஸ்மி என்பவர் பேசும்போது தன்னுடைய திரைப்படங்கள் வெளியாகும் போதெல்லாம் மத்திய மற்றும் மாநில அரசுகள் நெருக்கடி கொடுக்கின்றன. எனவே நாம் ஏன் நிதி அளிக்க வேண்டும் என்று அவர் நினைத்திருக்கலாம். மேலும் தன்னுடைய ரசிகர்களை திரட்டி அவர்கள் மூலமாக நேரடியாக உதவிகளை செய்ய நடிகர் விஜய் திட்டமிட்டு இருக்கலாம் எனவும் அவர் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து பேசிய அவர் வருகிற ஜூன் மாதம் வரை எந்த திரைப்படமும் தியேட்டரில் ரிலீஸாக வாய்ப்பில்லை. ஏனெனில் நமக்கு பிரச்சனையை சரி ஆனாலும் உலக அளவில் இந்த பிரச்சனை சரியாக வேண்டும் எனவும் அவர் கூறினார்.