தமிழ் சினிமாவில் பல நடிகர்களின் வாரிசுகள் சினிமாவுக்குள் நுழைவது வழக்கம் தான். அதே போன்ற வர்களுள் ஒருவர் தான் நடிகர் சிவகுமாரின் மகன் கார்த்தி. தமிழ் சினிமாவில், கார்த்தி இயக்குனர் அமீரின் “பருத்திவீரன்” படத்தில் அறிமுகம் ஆனார். சூர்யா தனது தம்பியை முதல் படத்தில் அறிமுகப்படுத்தினார். “பருத்திவீரன்” முதல் படமே மாபெரும் வெற்றியை பெற்று ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பையும் பெற்றது.
அதன் பின் “ஆயிரத்தில் ஒருவன்” என்ற செல்வராகவனின் படத்தில் நடித்து அதிலும் வெற்றியை பெற்றவர். முதல் படத்தில் கிராமத்து கதை களத்தை தேர்ந்து எடுத்த கார்த்தி. தனது மூன்றாவது படமான லிங்குசாமியின் “பையா” படத்தில் சிட்டி இளைஞராகக் நடித்தார். அதனை தொடர்ந்து ரசிகர்களை பூர்த்தி செய்யும் படங்களை நடித்து தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தார் கார்த்தி. சமீபத்தில் அவர் நடித்து வெளியான “தீரன் அதிகாரம் ஒன்று”, “கடைக்குட்டி சிங்கம்”, “கைதி” போன்ற அப்படங்கள் இவருடைய மார்க்கெட்டை பெரிதாக்கி கொடுத்தது.
இந்நிலையில் நடிகர் கார்த்தி, அவரது மனைவி ரஞ்சனி நிச்சயதார்த்த புகைப்படங்கள். மாப்பிளை வெட்கத்தை பாருங்களேன். இணையத்தில் வைரல் ஆகம் புகைப்படங்கள் இதோ…
