28.1 C
Chennai
Sunday, Nov 17, 2024
greens 15861n

உங்களுக்கு தெரியுமா நோய் தாக்காமல் நீண்ட நாள் ஆரோக்கியமாக இருக்க நம் முன்னோர்கள் சாப்பிட்ட கீரை இதாங்க…

உங்களுக்கு நீண்ட நாள் வாழ வேண்டும். அதுவும் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்ற விருப்பம் இருந்தால் சமச்சீர் உணவை உட்கொள்வது மிகவும் அவசியம். ஒரு உணவை நீங்கள் உட்கொள்ளும் போது அதில் முக்கியமாக நீங்கள் கவனிக்க வேண்டியது அந்த உணவின் ஊட்டச்சத்து குறித்த தகவலை மட்டுமே. அந்த உணவின் ஊட்டச்சத்துகளால் மட்டுமே அந்த உணவு நல்ல உணவு என்று கருதப்படலாம். பச்சை இலையுடைய காய்கறிகள் உணவில் முக்கிய பங்கு வகிக்கின்றன மற்றும் இவற்றில் இரும்புச்சத்து, நார்ச்சத்து மற்றும் இதர அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் உள்ளன.

நீங்கள் சேப்பங்கிழங்கு இலைகள் பற்றி கேள்விப்பட்டதுண்டா? இதன் அறிவியல் பெயர் கொலோகேசியா எஸ்குலேன்ட்டா ஆகும். பொதுவாக இதன் மாவுத்தன்மை கொண்ட கிழங்கான சேப்பங்கிழங்கு நமது உணவில் பெரும்பாலும் சேர்க்கப்படும் ஒரு பொருளாகும். ஆனால் பல்வேறு உணவு பாரம்பரியத்தில் சேப்பங்கிழங்கு இலைகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த இலைகளை சமைக்காமல் உட்கொள்ளும் போது விஷத்தன்மை கொண்டதாக உள்ளன. அதே நேரத்தில் சமைத்து உட்கொள்ளப்படும் போது பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளன.

ஊட்டச்சத்து மதிப்பு

சேப்பங்கிழங்கு இலைகளின் ஊட்டச்சத்து மதிப்பு குறித்து முதலில் காண்போம். இந்த இலையுடைய பச்சை காய்கறி குறைவனான கலோரிகள் கொண்டது, இதில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இதனால் எடை குறைப்பு திட்டம் மேற்கொள்பவர்களுக்கு மிகுந்த நன்மை அளிக்கிறது.

சேப்பங்கிழங்கு இலையின் ஊட்டச்சத்து விபரம்:
150 கிராம் சேப்பங்கிழங்கு இலையில்,

* கலோரி – 35

* கார்போ – 6 கிராம்

* புரதம் – 4 கிராம்

* நார்ச்சத்து – 3 கிராம்

* கொழுப்பு – 1 கிராம்

* வைட்டமின் சி – 57%

* வைட்டமின் ஏ – 34%

* போலேட் – 17%

* பொட்டாசியம் – 14%

* கால்சியம் – 13%

* இரும்பு – 10%1 taroleaves 1

சேப்பங்கிழங்கு உட்கொள்வதால் உண்டாகும் சாத்தியமான ஆரோக்கிய நன்மைகள்:
சேப்பங்கிழங்கு உட்கொள்வதால் உண்டாகும் சாத்தியமான ஆரோக்கிய நன்மைகள்:
சேப்பங்கிழங்கு இலையின் உயர் ஊட்டச்சத்து மதிப்பு காரணமாக, இது குறிப்பிட்ட ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. சமைக்கப்பட்ட சேப்பங்கிழங்கு இலைகளால் உண்டாகும் நண்மைகள் சிலவற்றை இப்போது காண்போம்.

நோய் தடுப்பு
சேப்பங்கிழங்கு இலைகளில் உயர்ந்த அளவு வைட்டமின் சி சத்து மற்றும் பாலிஃபீனால் கூறுகள் இருப்பதால் இவற்றில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் இருப்பது உறுதி செய்யப்படுகிறது. தன்னுடல் சார்ந்த நோய், புற்றுநோய், இதய கோளாறுகள் மற்றும் பல்வேறு நோய்கள் உண்டாகக் காரணமான தீங்கு விளைவிக்கும் கூறுகளுடன் இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் போராடுகிறது. ஆகவே இவ்வளவு நன்மைகள் கொண்ட இந்த இலைகளை உட்கொள்வதால் நீங்கள் ஆரோக்கியமாக மற்றும் பாதுகாப்பாக வாழலாம் .

 

இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்கிறது
பச்சை இலையுடைய காய்கறிகளான சேப்பங்கிழங்கு இலைகள், பரட்டைக்கீரை, பசலைக்கீரை போன்றவை இதயத்திற்கான வரப்பிரசாதங்கள் ஆகும். இந்த வகை காய்கறிகளை தொடர்ந்து உட்கொண்டு வருவதால் இதய நோய் உண்டாவதற்கான அபாயம் 16% வரை குறைவதாக அறியப்படுகிறது. உண்மையில் இந்த எண்ணிக்கை மிகவும் பெரியதாகும். மேலும் இவற்றில் உயர்ந்த அளவு நைட்ரேட் உள்ளன. இவை இரத்த அழுத்தத்தை நிர்வகிக்க உதவுகின்றன. ஆகவே உங்கள் இதயம் ஆரோக்கியத்துடன் இருக்க நீங்கள் விரும்பினால் சேப்பங்கிழங்கு இலைகளை உட்கொள்ளத் தொடங்குங்கள்.

greens 15861n

சமச்சீர் உணவு
உங்களுக்கு விருப்பமான எந்த உணவிலும் இந்த இலைகளை நீங்கள் சேர்த்து உட்கொள்ளும் அளவிற்கு மிகவும் எளிமையான உணவாகும். இதில் உள்ள குறைந்த கொழுப்பு, குறைந்த கலோரி, உயர் நார்ச்சத்து கலவை உடல் எடையை சீராக நிர்வகிக்க உதவுகிறது. அதாவது, நீங்கள் உங்கள் உடலில் கொழுப்பு சேராமல் ஒரு அருமையான சுவையான உணவை உட்கொள்கிறீர்கள். மேலும் இந்த இலைகள் அதிக நீர்ச்சத்து கொண்டவை என்பதால் உங்கள் உடலை பாதுகாக்கவும் உதவுகிறது. குறைவாக உட்கொள்ளும் போதும் வயிறு நிரம்பிய உணர்வைத் தருகிறது.

 

பக்க விளைவுகள்
சேப்பங்கிழங்கு இலையை சமைக்காமல் பச்சையாக உட்கொள்வதைத் தவிர வேறு எந்த பக்க விளைவும் இந்த இலைகளில் காணப்படுவதில்லை. சமைக்கப்படாத பச்சை இலைகள் மிகவும் விஷத்தன்மை வாய்ந்தது என்பதால் இதனை சமைத்த பின்பு மட்டுமே உண்ண வேண்டும். இதில் உள்ள ஆக்சலேட் காரணமாக இந்த விஷத்தன்மை காணப்படுகிறது. இவை சிறுநீரக ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் மற்றும் கற்களை தோற்றுவிக்கலாம். ஆகவே இதன் முழுமையான நன்மைகளை பெறுவதற்கு இந்த இலைகளை வேக வைத்து உண்பது மட்டுமே ஒரே சிறந்த வழியாகும். அரை மணிநேரம் இந்த இலைகளை வேக வைப்பதால் இந்த நச்சு கூறுகள் அழிக்கப்பட்டு இலையும் மென்மையாக மாறுகிறது.