23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
625.500.560.350.160.300.053.80 5

ஓப்பன் டாக்.. அலைப்பாயுதே படத்தில் நடித்த நடிகை ஸ்வர்ணமால்யாவின் தற்போதைய நிலை இதுதான்..

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்ததில் யார் நடித்தாலும் அவர்களில் சினிமாத்துறையில் பெரிய பிரபலங்களாக வருவார்கள் என்று இந்திய சினிமா வட்டாரத்திற்கே தெரியும். அந்தவகையில் மணிரத்னம் இயக்கத்தில் 2000ஆம் ஆண்டு வெளியான படம்தான் அலைப்பாயுதே. மாதவன், ஷாலினி, ஏ.ஆர். ரகுமான் இவர்களுக்கு பெரிய இடத்தினை கொடுத்த படம்தான் அலைப்பாயுதே.

இப்படத்தில் ஷாலினியின் சகோதரியாக பூரணி கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் ஸ்வர்ணமால்யா. பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாகவும் பணியாற்றி அடுத்தடுத்த படங்களில் குணச்சித்திர ரோல்களில் நடித்து பிரபலமானார்.

அதன்பின் 2002ல் திருமணம் செய்து சில கருத்து வேறுபாடுகளால் சில ஆண்டுகளிலேயே விவாகரத்து பெற்று பிரிந்தார். அதன்பின் படங்களில் நடித்து வந்த ஸ்வர்ணமால்யா பரதநாட்டியம் கற்று கொண்டார்.

இந்நிலையில் 2014ல் சினிமாத்துறையில் இருந்து விலகினார். இதற்கு காரணம் என்ன என்று தனியார் இணையத்திற்கு பேட்டி கொடுத்து கூறியுள்ளார்.

நான் தற்போது பேராசிரியராக இருந்து வருவதாகவும், நடனம் கற்றுக்கொடுத்தும் வருகிறேன். இதற்கிடையில் நான் படங்களில் நடிக்க நேரம் ஒதுக்குவதற்கு தயாரால இல்லை நேரமும் ஒதுக்க முடியவில்லை. நடிப்பதற்கான எண்ணமும் என்னிடம் இல்லை என்று கூறியுள்ளார்.625.500.560.350.160.300.053.80 5