30.4 C
Chennai
Sunday, Nov 17, 2024
1 2

சூப்பர் டிப்ஸ்! நூறு வயசு வாழ வெண்டைக்காய் சாறை இப்படி குடித்தால் போதும்!

வெண்டைக்காய் பிடிக்காதவர்கள் பலர் இருக்கிறார்கள். ஆனால் இதில் பல மருத்து நன்மைகள் இருப்பது பலருக்கு தெரியாத விஷயமாகவே உள்ளது.

வெண்டைக்காய் சாறில் பல ஊட்டச்சத்துக்களும், வைட்டமின்களும் உள்ளது.

அதிலும் வெண்டைக்காய் சாறு பருகுவதனால் சக்கரை நோய் முதல் முதல் மலச்சிக்கல் வரை பல நோய்களுக்கு தீர்வளிக்கும் அருமருந்தாக உள்ளது.

அந்தவகையில் வெண்டைக்காய் சாறை பருகுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்பதை பார்க்கலாம்.

1 2
  • அனிமியாவால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த காயின் பலனை பெற இதன் சாறை பருகலாம். வெண்டைக்காய் சாறு சிவப்பு இரத்த அணுக்களை அதிகம் உற்பத்தி செய்யக்கூடியது, இது அனிமியாவை குணப்படுத்த உதவும்.
  • தொண்டைப்புண் மற்றும் இருமலால் பாதிக்கப்பட்டவர்கள் வெண்டைக்காய் சாறை தாரளமாக குடிக்கலாம். இதில் உள்ள ஆன்டிபாக்டீரியா மற்றும் ஆன்டிசெப்டிக் பண்புகள் இந்த அற்புதத்தை செய்கிறது.
  • தினமும் காலையில் வெண்டைக்காய் சாறு குடிப்பது உங்கள் சர்க்கரை நோயை குறைக்கும். இது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்க பயன்படுகிறது.
  • வெண்டைக்காய் சாறு வயிற்றுப்போக்கை குணப்படுத்தி மேலும் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது.
  • வெண்டாக்காய் சாறை பருகுவது உங்கள் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைப்பதோடு உங்கள் இதயத்தை பாதுகாக்கிறது.
  • இயற்கையான மலமிளக்கியாக செயல்படும் வெண்டைக்காய் சாறு உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதுடன் குடல் இயக்கங்களை சீர்படுத்துகிறது.
  • வெண்டைக்காய் சாறில் உள்ள வைட்டமின் சி நம்முடைய நோயெதிர்ப்பு மண்டலத்தின் பலத்தை அதிகரிக்க உதவுகிறது.
  • வெண்டைக்காய் சாறை உள்ள ஆன்டிஆக்சிடண்ட்கள் இரத்தத்தை சுத்தம் செய்வதோடு, முகப்பரு மற்றும் சருமம் தொடர்பான மற்ற பிரச்சனைகளை குணப்படுத்த பயன்படுகிறது. தெளிவான சருமம்தான் உண்மையில் அழகான சருமம் ஆகும்.
  • வெண்டைக்காய் சாறு குடிப்பது ஆஸ்துமா ஏற்படும் வாய்ப்பை குறைக்கிறது மேலும் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்கள் வெண்டைக்காய் சாறை குடிப்பதும் அதன் தாக்கத்தை குறைக்கும்.
  • வெண்டைக்காய் சாற்றில் உள்ள போலேட் என்னும் சத்து கர்ப்பத்தில் இருக்கும் குழந்தைக்கும், தாய்க்கும் நன்மைகளை வழங்கக்கூடியது. இது எலும்புகளின் அடர்த்தியையும், வலிமையையும் அதிகரிக்கும் மற்றும் ஆஸ்டாபோரோசிஸ் ஏற்படுவதை தடுக்கிறது.