28.1 C
Chennai
Sunday, Dec 22, 2024
625.500.560.350.160.300.053.800 3

உண்மையா இது? கடந்த 10 வருடத்தில் பெரிய லாபத்தை கொடுக்காத விஜய் படங்கள், முழு ரிப்போர்ட் இதோ

தளபதி விஜய் தமிழ் சினிமா கொண்டாடும் ஒரு நடிகர். இவர் நடிப்பில் பிகில் படம் பிரமாண்ட வசூல் சாதனை செய்தது.

இப்படம் விஜய்யின் திரைப்பயணத்தையே மாற்றி அமைத்துள்ளது வர்த்தக ரீதியில். இதனால் மாஸ்டரும் பெரிய வியாபாரம் ஆகியுள்ளது.

அதே நேரத்தில் கொரோனாவால் தற்போது பல படங்கள் ரிலிஸ் தள்ளிச்சென்றது. இதில் மாஸ்டரும் மாட்டிக்கொண்டுள்ளது.

ஆனால் மாஸ்டர் எப்போதும் வந்தாலும் கண்டிப்பாக வசூல் வேட்டை தான், அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.

இந்நிலையில் விஜய் படங்கள் கடந்த சில வருடங்களாக மிகப்பெரும் வசூலை கொடுத்து வருகிறது. ரூ 250 கோடி தாண்டி தற்போது ரூ 300 கோடியை எட்டி விட்டது.

ஆனால், விஜய் படங்கள் கடந்த 10 வருஷத்தில் பெரிய லாபம் என்று விநியோகஸ்தர்களுக்கு கொடுத்ததா என்றால் கேள்விக்குறி தான்.

ஆம், அஜித்தின் வேதாளம், விஸ்வாசம் ஆகிய படங்கள் ரூ 10 கோடிகளை தாண்டி லாபத்தை கொடுத்துள்ளது.

அப்படி எந்த ஒரு விஜய் படமும் தமிழகத்தில் விநியோகஸ்தர்களுக்கு லாபத்தை கொடுப்பது இல்லை.

போட்ட பணம் வந்தால் போதும் என்பது தான் மெர்சல், சர்கார் தற்போது பிகில் வரை தொடர்கிறது.

இதன் மூலம் எல்லோருக்கும் லாபம் கிடைக்கும்படி விஜய் சிந்தித்து மாஸ்டரை வியாபாரம் செய்வது நல்லது.