raghava lawrence6 150

கலங்கிய துணை நடிகர்கள்.. 25 லட்சம் கொடுத்த ஹீரோ- கெஞ்சிக் கேக்குறோம்.. குழந்தைங்க இருக்காங்க’ –

நடிகர் ராகவா லாரன்ஸ் துணை நடிகர்களுக்காக செய்த உதவி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

துணை நடிகர்களுக்கு 25 லட்சம் கொடுத்த ஹீரோ
உலகம் முழுவதும் கொரோனா நோயின் அச்சுறுத்தலால் முடங்கி போய் இருக்கிறது. நாளுக்கு நாள் பயம் அதிகரித்து கொண்டே போகிறது. மக்கள் அனைவரும் வீட்டிற்குள் அடங்கி இருக்கின்றனர். மேலும் தமிழகத்தில் போதுமான மருத்துவ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திரைப்படத்துறையை சேர்ந்த பலரும் தங்களால் முடிந்த பண உதவியை நிவாரண நிதிக்கு அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸ் துணை நடிகர்களுக்காக உதவி அளித்துள்ளார். தென்னிந்திய நடிகர் சங்கத்தை சேர்ந்த துணை நடிகர்களுக்கு போதுமான நிவாரணமின்றி கஷ்டப்படுவதாக அவர்கள் கண் கலங்கி வீடியோவில் பேசினார்கள். இந்த வீடியோவை நடிகர் உதய், லாரன்ஸுக்கு அனுப்பியுள்ளார். இதை கண்ட லாரன்ஸ், உடணடியாக 25 லட்சத்தை தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு கொடுத்துள்ளார். மேலும், ”என்னிடம் உதவி கேட்டு நிறைய ஃபோன்களும், வீடியோக்களும் வருகின்றது, என்னால் முடிந்தவரை நான் உதவி செய்து கொண்டிருக்கிறேன், வேறு யாராவது உதவ தயாராக இருந்தால் முன் வாருங்கள், உங்களின் ஒரு ரூபாய் கூட உதவும்” என லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.