28.1 C
Chennai
Sunday, Dec 22, 2024
car updatd

அடேங்கப்பா! ரஜினி முதல் அஜித் வரை உள்ள சினிமா பிரபலங்கள் வைத்துள்ள கார்கள் ஒரு அலசல்!!!

சினிமா துறை பிரபலங்கள் வைத்துள்ள ஆடம்பரமான கார்களை பற்றி இந்த பதிவில் காண்போம். தென்னிந்திய சினிமா துறையின் முன்னனி பிரபலங்கள் என்னென்ன கார்களை வைத்துள்ளார்கள் என பார்ப்போமா..???

ரஜினிகாந்த் அவர்கள் ஆடம்பரம் இல்லாத சிம்பிளான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார் என்பது நம் எல்லோருக்கும் தெரிந்த விஷயம். இதையே அவரது கார் கலக்ஷனும் பிரதிபலிக்கின்றது. பெரும்பாலான நேரத்தில் ரஜினி தனது ப்ளாக் ஃபியட் ப்ரீமியர் பத்மினி மற்றும் அம்பாசிடர் காரில் தான் பயணம் செய்வார். ஆஷ்ரமங்களுக்கு செல்லும் போது டொயோட்டா இனோவா MPV மற்றும் ஹோன்டா சிவிக் கில் செல்வார். தற்போது அவர் பயன்படுத்துவது BMW X5.

rajini ud
பேட்டை படத்தின் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திர் ப்ளூ ஃபார்டு மஸ்டாங் மற்றும் BMW 340i ஸ்போர்ட்ஸ் எடிஷனை கொண்டுள்ளார்.

anirudh ud
வடசென்னை படத்தின் கதாநாயகன் தனுஷ் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட், ஆடி A மற்றும் பிளாக் ஃபார்டு மஸ்டாங் ஆகிய கார்களுக்கு சொந்தகாரர்.

dhanush d
மலையாள நடிகர் மமுட்டியின் மகனான துல்கர் சல்மான் ஒரு கார் பிரியர். அவர் முப்பது வருடங்கள் பழைமையான வோல்வோ 240 DL ஸ்டேஷன் வேகன் மற்றும் மெர்சிடஸ் பென்ஸ் 250 யை வைத்துள்ளார். இது போக பனாமேரா டர்போ, BMW i8 மற்றும் போர்ஸ்சே 997 ஆகிய காய்களையும் தனது கேரேஜில் வைத்துள்ளார்.

dulquer d
பிரபலமான நடிகர் என்பதை தாண்டி அஜித் குமார் ஒரு பைக் ரேஸர் என்பது நமக்கு தெரியும். மேலும் இவர் ஹெலிகாப்டர் லைசன்ஸையும் பெற்றுள்ளார். BMW மற்றும் லம்போர்கினி கார் கலக்ஷன்களை தாண்டி பல வகையான பைக்குகளை வைத்துள்ளார். BMW S1000 RR, BMW K1300 S, கவாசகி நின்ஜா ZX 14R, யமஹா FZR, ஏப்ரலியா கேப்பர்நார்டு, டுகாட்டி இன்னும் பல பல பைக்குகளுக்கு சொந்தகாரராக உள்ளார் அஜித். ஆனால் இவரை அதிக முறை மாருதி சுஸூகி ஸ்விஃப்டில் பயணம் செய்து பார்த்துள்ளனர் அவரின் ரசிகர்கள்.

ajith ud
இசையமைப்பாளர் ஹாரிஷ் ஜெயராஜிடம் லம்போர்கினி காலர்டோ V10, லம்போர்கினி அவன்டேடார், ஹம்மர் HE ஆகிய கார்களை கொண்டுள்ளார்.

nayantharad
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவிடம் BMW X5 மற்றும் ஃபார்டு என்டவரை கொண்டுள்ளார்.

vijay ud
இளைய தளபதி விஜய் அவர்கள் தனுஷ்கு பிறகு ரோல்ஸ் ராய்ஸ் காரை வைத்துள்ளார். மேலும் BMW சீரீஸ் 5, BMW X6, ப்ளூ மினி கூப்பர், ஆடி 8 மற்றும் டொயாட்டா இனோவா ஆகிய கார்களை சொந்தமாக்கி கொண்டுள்ளார்.

nivin d
மைக்கேல் நடிகர் நிவின் பாலி வோல்க்ஸ்வேகன் போலோ GT, ஆடி A4, மினி கூப்பர் S ஆகிய வைத்துள்ளார்.

prithviraj d
லூசிஃபர் நடிகர் பிரித்விராஜ் சுகுமாரனிடம் BMW Z4 மற்றும் லம்போர்கினி ஹூராகன் LP580-2 ஆகிய கார்கள் உள்ளது.

shruthi haasand
கமல்ஹாசனின் மகள் ஸ்ருதி ஹாசன் ரேன்ஜ் ரோவர் மற்றும் ஆடி Q7 யை பெற்றுள்றார்.

yuvan d
இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜாவிடம் அஸ்டான் மார்டின் N420, மஸ்டர்ட் மினி கூப்பர் மற்றும் BMW 6 உள்ளது.

anushka shed
ஆடி A மற்றும் மெர்சிடஸ் பென்ஸ் கார்களை வைத்துள்ளார் பாகுபலி நடிகை அனுஷ்கா ஷெட்டி.

suriyd
சிங்கம் பட நடிகர் சூரியா டக்காட்டி மான்ஸ்டர் 796 பைக், மற்றும் கார்களில் ஆடி Q7, ஆடி A7, BMW Z4 ஆகியவை கொண்டுள்ளார்.