31.4 C
Chennai
Thursday, Jul 17, 2025
Ajith

பிரபல நடிகர் கூறிய ரகசியம் ! “ஒரு நடிகைய கல்யாணம் பண்ணிக்காத அஜித் என்று நான் அஜித்திடம் அறிவுரை சொன்னேன்”

தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக இருக்கும் அஜித், தனது படங்கள் பற்றி எந்த இடத்திலும் பொது விழாக்களிலும் அதை பற்றி பேசுவதில்லை, இனியும் பேசபோவதில்லை. அதே போல், எந்த நிகழ்வுகளிலும் கலந்துக் கொள்ளாதவர், ஊடகங்களுக்கு பேட்டியளிப்பதை நிறுத்தி பல வருடங்கள் ஆகிவிட்டது.

இவரின் மனைவி ஷாலினி அஜித் அவர்கள் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி வெற்றிகண்டு ஹீரோயினாக ஒரு சில நல்ல படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார். குறிப்பாக விஜயுடன் அவர் நடித்த ‘காதலுக்கு மரியாதை’ மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. அப்படத்திற்குப் பிறகு அஜித்துக்கு ஜோடியாக நடித்தவர், அதன் பிறகு மீண்டும் விஜய்க்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்துவிட்டு, அஜித்தை திருமணம் செய்துக் கொண்டார். திருமணத்திற்குப் பிறகு நடிப்பதையும் நிறுத்திவிட்டார்.Ajith

இந்த நிலையில், ஷாலினி திருமணம் செய்துக் கொண்டு நடிப்புக்கு Bye சொன்னதை அறிந்த பல ரசிகர்கள் வருத்தப்பட்டார்கள்.

தற்போது பிரபல நடிகரும், அஜித்தின் நண்பரும் ஆன, ரமேஷ் கண்ணா அவர்கள், சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில், நான் அஜித்திடம் அமர்களம் படம் நடிக்கும்போது, அவர் ஷாலினியை காதலிப்பது தெரியாது, ஆனால் இருவரும் நேராக பேசாமல் ஃபோன் மூலமாகவே பேசுவார்கள், இதை கவனித்த நான், அஜித்தை அழைத்து ” இந்த பாரு பா, கல்யாணம் பண்ணினா ஒரு நல்ல குடும்ப பெண்ண கல்யாணம் பண்ணிக்கோ, நடிகைய மட்டும் கல்யாணம் பண்ணிகாதஎன்று கூறினேன்”.

மேலும், ” இதை கவனித்த அந்த படத்தின் இயக்குனர் சரண், சார், அவர்கள் இருவரும் love பண்றாங்க, இப்படிலாம் பேசாதீங்க. என்று எனக்கு அட்வைஸ் செய்தார்” என்று ஒரு பெட்டியில் கூறியுள்ளார்.