27.7 C
Chennai
Thursday, Aug 14, 2025
dc Cover dg46jvh68f13lkbnvg7vj61ia0

நடிகர் யோகிபாபுவின் அப்பா யார் தெரியுமா? தெரியாத தகவல் இதோ.!

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. ஆரம்ப காலங்களில் படங்களில் நடிக்க வாய்ப்பு இல்லாமல் இருந்து வந்த யோகி பாபு தற்போது தமிழ் சினிமாவில் வெளியாகும் பெரும்பாலான படங்களில் நடித்து வருகிறார்.

இவரின் கால்சீட் கிடைக்காதா என ஏங்கும் இயக்குனர்களும் பலர் உள்ளனர்.

இந்த நிலையில் தற்போது இவருடைய அப்பா குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

 

யோகி பாபுவின் அப்பா ஒரு ராணுவ வீரர். 24 ஆண்டுகள் ராணுவத் துறையில் இருந்துள்ளார். அப்பாவைப் போலவே தானும் ஒரு ராணுவ வீரராக வேண்டும் என ஆசைப்பட்டு உள்ளார் யோகி பாபு.

பெங்களூரில் ராணுவ கார்டன் பாய் ஆகவும் சில காலம் வேலை பார்த்துள்ளார். அப்பாவின் இறப்பிற்குப் பிறகு அவர் சினிமாவில் வாய்ப்புத் தேடி இன்று முன்னணி காமெடி நடிகராக உள்ளார்.

யோகி பாபு சில மாதங்களுக்கு முன்னர் தான் திருமணம் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது.