27.5 C
Chennai
Tuesday, Jan 21, 2025
large bigg boss raiza 16076

ஷாக் ஆகாதீங்க…! அவருடன்தான் திருமணம், சொல்லிடாதீங்க: பிக் பாஸ் ரைசா

தமிழில் பிக் பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டவர் நடிகை ரைசா வில்சன். பிக்பாஸ் செல்லும் முன்பு மாடலாக சில விளம்பரங்கள் மற்றும் திரைப்படங்களில் சிறு வேடங்களில் நடித்திருந்தார் அவர். தனுஷ் நடித்த விஐபி2 படத்தில் கஜோலின் அசிஸ்டெண்டாக சில நொடிகள் மட்டுமே வரும் ரோலில் நடித்திருந்தார் அவர்.

பிக் பாஸ் சென்று வந்த பிறகு ஹீரோயினாக நடிக்க துவங்கினார். ஹரிஷ் கல்யாண் ஜோடியாக பியார் பிரேமா காதல் படத்தில் நடித்தார் ரைசா. அந்த படம் மிகப்பெரிய ஹிட் ஆனது.

அதை தொடர்ந்து தற்போது ஆலிஸ், காதலிக்க நேரமில்லை போன்ற படங்களில் நடித்து வருகிறார் ரைசா. தற்போது கொரோனா ஊரடங்கு என்பதால் அவர் வீட்டிலேயே இருக்கிறார். ஃபிரீயாக இருக்கும் நேரத்தில் சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு தனது வழக்கமான பாணியில் வித்யாசமாக பதில் அளித்து வருகிறார்.

ரசிகர் ஒருவர் “நீங்களும் ஹரிஷ் அண்ணாவும் கல்யாணம் பன்னிப்பீங்களா?’ என கேட்டார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்தே ஹரிஷ் கல்யாண் – ரைசா இருவரும் நெருக்கமாக இருக்கும் சூழலில் தான் இப்படி ஒரு கேள்வியை கேட்டுள்ளார் அவர்.

அதற்கு பதில் கூறிய ரைசா, “ஆமாம், ஆனால் அதை அவரிடம் சொல்லிடாதீங்க, அது சர்ப்ரைஸ்” என கூறியுள்ளார் அவர்.