29.3 C
Chennai
Friday, Jun 27, 2025
vanitha vijayakumar. 1

அடேங்கப்பா! வெறும் பத்தே நாளில் சாதிச்ச வனிதா விஜயகுமார்: நடக்கட்டும், நடக்கட்டும்

பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு வனிதா விஜயகுமாரின் கெரியர் டாப் கியரில் சென்று கொண்டிருக்கிறது. டிவி சீரியல், விஜய் டிவி நிகழ்ச்சிகள் என்று பிசியாகிவிட்டார் வனிதா.

பிக் பாஸ் வீட்டில் அவர் நடந்து கொண்ட விதத்தை பார்த்து அவரை விளாசியவர்கள் மனதையும் வென்றுவிட்டார். வனிதா யூடியூப் சேனல் ஒன்றை துவங்கி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த சேனலுக்கு ரசிகர்கள் தங்களின் அமோக ஆதரவை அளித்துள்ளனர். அதனால் யூடியூப் சேனல் துவங்கிய பத்து நாட்களில் அதை சப்ஸ்கிரைப் செய்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை தொட்டுள்ளது. இது சாதாரண விஷயம் அல்ல.

10 நாட்களில் நடந்த அதிசயத்தை பார்த்த வனிதா ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். மக்கள் அளித்த அன்பையும், ஆதரவையும் பார்த்து வனிதாவுக்கு பேச்சே வரவில்லை. இருக்காதா பின்ன…

வனிதா ட்விட்டரிலும் ஆக்டிவாக இருக்கிறார். பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களில் வனிதா விஜயகுமார், லோஸ்லியா ஆகியோரின் கெரியர் தான் முதலில் பிக்கப்பாகி சூப்பராக சென்று கொண்டிருக்கிறது.

லோஸ்லியா கைவசம் ஆரி, ஹர்பஜன் சிங் படங்கள் இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.