CORONA வைரஸினால் தற்போது தமிழில் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் சூட்டிங் இல்லாமல் அல்லாடிக் கிடக்கிறது. அதிலும் நம் கோலிவுட்டை எடுத்துக்கொண்டால் பெப்சி Unit டெய்லி வாங்கும் பேட்டா சம்பளம் கூட இல்லாமல் கையேந்தி நிற்கிறது. இதனால் பல நடிகர்கள் உதவிகள் செய்து வருகிறார்கள்.
அந்த வகையில் ஏற்கனவே, சூப்பர் ஸ்டார்
ரஜினிகாந்த், சூர்யா, சிவகார்த்திகேயன்
பார்த்திபன், பிரகாஷ் ராஜ், தயாரிப்பாளர்
தாணு, இயக்குனர் லோகேஷ் கனகராஜ், அஜித் , லாரன்ஸ்
ஆகியோர் உதவியுள்ள நிலையில், கேப்டன் விஜயகாந்த் தன்னால் முடிந்த உதவியை செய்ததற்கு அவரது ரசிகர்கள் மட்டுமில்லாமல், பிற நடிகர் ரசிகர்களும் அவரை பாராட்டுகின்றனர்.
என்ன என்றால், ஊரடங்கு விலகிய பிறகு மூன்றாம் தேதிக்கு பின்னர் கழக நிர்வாகிகள் ஒவ்வொருவரும் நிவாரண பொருட்களை வழங்க தயாராக இருங்கள் என கூறி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார். , கேப்டன் அவர்கள் 5 கோடி நிதியை அறிவித்து அனைவரையும் முந்தியுள்ளார்.