28.5 C
Chennai
Monday, Nov 18, 2024
sundar pich

நீங்களே பாருங்க..! கொரோனா நிவாரண நிதிக்கு நம்ப கூகுள் CEO சுந்தர் பிச்சை கொடுத்த தொகை எவ்வளவு தெரியுமா.?

கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை பிரதமர் மோடி பிறப்பித்துள்ளார். ஆனாலும் கொரோனா தாக்கம் கட்டுக்குள் வராததால், மேலும், 15 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியா முழுவதும் அத்தியாவசியப் பணிகளைத் தாண்டி வேறு எந்தவொரு பணியும் நடக்கவில்லை. இதனால் பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது.

sundar pich

நாடு முழுவதும் கோடிக்கணக்கான தினக்கூலிகள், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி வறுமையில் தவித்து வருகின்றனர். இதையடுத்து, தொழிலதிபர்கள், திரைப்பிரபலங்கள், சாமானியர்கள், அரசியல்வாதிகள் என பல்வேறு தரப்பினரும் தங்களால் இயன்ற நிதியுதவிகளை செய்து வருகின்றனர். டாட்டா சன்ஸ் நிறுவனம் மற்றும் டாட்டா ட்ரஸ்ட் சார்பில் ரூ.1500 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில், கூகுள் நிறுவனத்திம் சீஇஓ சுந்தர் பிச்சை ரூ.5 கோடியை இந்தியாவில் கொரோனா நிவாரண நிதியாக அளித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “மிகுந்த பாதிப்புக்குள்ளாகி உள்ள பண உதவி தேவைப்படும் தினக் கூலிகளுக்கு உதவிய கூகுள் நிறுவனத் தலைவர் சுந்தர் பிச்சைக்கு நன்றி” என கிவ் இந்தியாவுக்கு (Give India) பதிவிட்டுள்ளது. இதற்கு முன்னதாக கூகுள் நிறுவனம், 800 மில்லியன் அமெரிக்க டாலரை உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கியுள்ளது.