26.8 C
Chennai
Wednesday, Jan 15, 2025
sarakku actre

இதை நீங்களே பாருங்க.! ஆறுதலுக்கு சரக்கு கூட எடுத்துக் கொள்கிறாராம்!

தமிழ் சினிமாவுக்கு பல வருடங்களுக்கு முன்பு மும்பையில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவர் தான் அந்த பிரபல நடிகை. நடிக்க வந்த புதிதிலேயே வித்தியாசமான இயக்குனரின் படங்களில் நடித்து மிகவும் பிரபலமானார்.

ஒவ்வொரு படத்திலும் அவரது கேரக்டர்களில் வித்தியாசமாக இருந்ததால் எளிதில் மக்களை கவர்ந்து முன்னணி நடிகை ரேஞ்சுக்கு உயர்ந்தார். அதுமட்டுமல்லாமல் முன்னணி நடிகர்களுடனும் வெகுவிரைவில் ஜோடி போட்டார்.

தமிழ் தெலுங்கு மலையாளம் என அனைத்து மொழிகளிலும் கொடிகட்டிப் பறந்த நடிகை அந்த வித்தியாசமான இயக்குனரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார். சினிமாவில் உள்ள நடிகைகளுக்கு புகைப்பழக்கம் குடி என்பது ஒன்றும் புதிதல்ல.

ஆனால் இந்த பிரபல நடிகை கொஞ்சம் அதிகமாகவே அந்தப் பழக்கங்கள் இருந்து வந்துள்ளது. ஏன் வித்தியாசமான இயக்குனருடன் ஒரே வீட்டில் பல வகையான சரக்கு பொருட்களையும் புகை இலையையும் ஊதித் தள்ளியிருக்கிறார்கள்.

இப்படி சரக்கும் தண்ணியும் போல ஒன்றாக இருந்த இருவரும் திடீரென விவாகரத்து பெற்றுக்கொண்டு பிரிந்துவிட்டனர். அதன் பிறகு நடிகை அவர் வழியைப் பார்த்து சென்றுவிட்டார். தற்போதும் அந்த நடிகைக்கு ஓரளவு படவாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்கின்றன.

மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களில் மட்டுமே வாய்ப்புகள் வந்தவண்ணம் உள்ளன. அங்கேயும் கேரவன் பகுதிகளிலேயே நடிகை புகைத்து தள்ளுகிறாராம். அதுமட்டுமல்லாமல் இரவு அடிக்கும் சரக்கு காலையில் சூட்டிங் இருப்பதையே மறந்து தன் பொழப்புக்கு தானே வேட்டு வைத்துக் கொள்கிறாராம்.

அதுமட்டுமல்லாமல் நடிகை இருக்கும் கேரவனுக்குள் தப்பி தவறி கூட சென்றுவிட முடியாது. அப்படி ஒரு கெட்ட வாடை வருமாம். சரக்கு அடித்துவிட்டு அம்மணி எந்த கோலத்தில் கிடக்கிறார் என்று கூட தெரியாமல் இருப்பாராம். இந்த மாதிரி சிங்க பெண்கள் இருப்பதால்தான் அப்பப்போ இந்தியாவில் மழை பெய்கிறது.

அநியாயத்துக்கு கெட்ட பழக்கங்களுக்கு அடிமையான அந்த பிரபல நடிகை எப்படியாவது இதிலிருந்து மீண்டு வர வேண்டும் என இந்த ஊரடங்கு உத்தரவை பயன்படுத்தி மீண்டு வர முயற்சிக்கிறார். ஆடுன காலும் பாடுன வாயும் சும்மா இருக்காது என்பதை போல சரக்கும் புகைப்பழக்கமும் இருக்கும் ஒருவரை அவ்வளவு எளிதில் திருத்த முடியாது என்கிறது சினிமா வட்டாரம்.