24.8 C
Chennai
Monday, Dec 23, 2024
cover 15 1

உங்களுக்கு கண்களில் லென்ஸ் வைத்து எல்லோரையும் கவர ஆசையா? அப்போ இதை செய்யுங்கோ..!!

காண்டக்ட் லென்ஸ் அணிவது தற்போது ட்ரெண்ட் ஆக மாறி வருகிறது. நீங்கள் காண்டக்ட் லென்ஸ் அணியும் போது உங்களை மிகவும் நாகரீகமாகவும் மற்றும் அழகாகவும் காட்சியளிக்க வைக்கும். அதில் பெண்களுக்கு மிகவும் எரிச்சல் ஏற்படும் விஷயம் என்னவென்றால் காண்டக்ட் லென்ஸ் அணிந்து விட்டு மேக்கப் செய்வது தான்.

காண்டக்ட் லென்ஸ் அணியும் சிலருக்குக் கண் சிவத்தல், கண் அரிப்பு மற்றும் சில கண் சம்பந்தமான பிரச்சனைகளைச் சந்திக்கின்றன. உங்களது முறையற்ற மேக்கப் முறையினால் கூட இப்படிப்பட்ட கண் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே காண்டக்ட் லென்ஸ் அணியும் போது எவ்வாறு முறையான மேக்கப் செய்வது என்பதைப் பற்றிப் பார்ப்போம்.

எண்ணெய் மேக்கப்
உங்கள் முகத்திற்கு மேக்கப் செய்ய ஆரமிப்பதற்கு முன்பு முதலில் கைகளைச் சுத்தமாகக் கழுவுவது அவசியம். ஏனெனில் முதலில் உங்கள் கைகளில் இருக்கும் பாக்டீரியாக்களை அகற்ற வேண்டும். இல்லையெனில் இவை உங்கள் சருமத்தில் எரிச்சலை ஏற்படுத்தும். மேலும் நீங்கள் வாங்கும் மேக்கப் சாதனங்களாகிய ஐ ஷேடோ, ஐ பென்சில் மற்றும் பௌண்டேசன் ஆகியவற்றை எண்ணெய் இல்லாத ஒன்றாகத் தேர்வு செய்யுங்கள். ஏனெனில் எண்ணெயை அடிப்படையாகக் கொண்ட மேக்கப் சாதனங்களைப் பயன்படுத்தும் போது அது உங்கள் கண்களுக்குப் பரவி எரிச்சலை ஏற்படுத்தும். எனவே லிக்விடு மேக்கப் சாதனப் பொருட்களைத் தேர்வு செய்து வாங்குங்கள்.

3 1

மேக்கப்பிற்கு முன்பு
நீங்கள் மேக்கப் செய்யத் தொடங்குவதற்கு முன்பு காண்டக்ட் லென்சினை அணிவது சிறந்தது. ஏயெனில் நீங்கள் மேக்கப் செய்து விட்டு லென்சினை அணியும்போது உங்கள் கண்களின் ஒப்பனை களைந்து விடவோ அல்லது சற்று ஸ்மூட்ஜ் ஆகி விடவோ வாய்ப்புள்ளது. எனவே லென்சினை அணிந்துவிட்டு மேக்கப் செய்வதனால் லென்ஸ் உங்கள் கண்களில் சரியாக பொருந்தி விடும்.

தினமும்
லென்சுகளில் இரண்டு விதம் உள்ளது. ஒன்று குறிப்பிட்ட நாள் வரையிலும் உங்கள் கண்களிலேயே அணிந்து கொள்ளலாம். மற்றொன்று தினமும் கழற்றி மாற்றிக் கொள்ளும் ஒன்று. நீங்கள் தினமும் மேக்கப் செய்யும் ஒருவராக இருந்தால் தினமும் கழற்றி மாற்றிக் கொள்ளும் லென்சினை தேர்வு செய்வது நல்லது. ஏனெனில் உங்கள் கண்களிலேயே இருக்கும் லென்சுகள் மேக்கப் சாதனங்களிலிருந்து வரும் துகள்கள் மற்றும் வெளியே செல்லும்போது கண்களில் படும் தூசிகள் மற்றும் அழுக்குகள் சேர்ந்து கண்களுக்குத் தீங்கு விளைவித்து தொற்று நோய்களை ஏற்படுத்தும். எனவே நீங்கள் தினசரி லென்ஸ்களை பயன்படுத்துவதே சிறந்தது.

ஐ லைனர்
ஐ லைனர் அணியும் பழக்கம் இருந்தால் உங்கள் கண்களுக்குள் ஐ லைனரை பயன்படுத்தும்போது அவை லென்சுகளில் சென்று கறைப்படுத்தி கண்களுக்குள் விளைவுகளை ஏற்படுத்தும். எனவே நீங்கள் ஐ லைனர் பயன்படுத்தும் போது லென்சினைச் சுற்றி எந்த ஒரு இடத்திலும் பாதித்து விடாமல் சற்று கவனத்துடன் கையாளுங்கள்.cover 15 1

மஸ்காரா
நீங்கள் ஃபைபர் சார்ந்த மஸ்காராவினை உபயோகிக்கும் போது உங்கள் கண்களில் விழுந்து கண்களை பாதிக்க வாய்ப்புள்ளது. எனவே கண்களுக்குப் பயன்படுத்தும் மஸ்காரா லிக்விடு மஸ்காராவாக இருக்க வேண்டும் அப்போது தான் உங்கள் லென்சின் மீது விளைவுகளை ஏற்படுத்தாமல் இருக்கும். எப்போதும் உங்கள் கண்களுக்குச் சரியான மஸ்காராவினைத் தேர்வு செய்து பயன்படுத்துங்கள்.

 

மேக்கப் அகற்றுதல்
லென்சுகளை பயன்படுத்தும்போது கண்டிப்பாக அவற்றைத் தண்ணீர் மற்றும் எண்ணெய் சம்பந்தமான பொருட்களிலிருந்து பாதுகாப்பாகப் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். எனவே உங்கள் கைகளை நன்றாகக் கழுவிவிட்டு மேக்கப்பை அகற்றுவதற்கு முன்பு லென்சுகளை வெளியே எடுத்து விடுங்கள். அதேபோல் கண்களில் மேக்கப் அணிந்து இருக்கும்போது கண்களைக் கசக்கக் கூடாது. இது கண்களில் சேதத்தினை ஏற்படுத்தும். எனவே முறையான மேக்கப் முறைகளைப் பின்பற்றி கண்களை சேதத்திலிருந்துப் பாதுகாத்திடுங்கள்.