26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
625.500.560.350.160.300.0 4

நடிகை ஸ்ரேயாவின் கணவருக்கு கொரோனா அறிகுறி! தாங்களே தனிமைப்படுத்தியுள்ளனர!

நடிகை ஸ்ரேயாவின் கணவருக்கு கொரோனா அறிகுறி தென்பட்டதால் குடும்பத்துடன் தங்களை தாங்களே தனிமைப்படுத்தியுள்ளனர்.

இதுகுறித்து ஸ்ரேயா அவரின் இன்ஸ்டாகிரம் பக்கத்தில் கூறுகையில்,

என் கணவர் ஆண்ட்ரவிற்க்கு உலர்ந்த இருமல் மற்றும் காய்ச்சல் இருந்ததால் நாங்கள் ஒரு மருத்துவமனைக்கு விரைந்தோம்.

ஆனால் மருத்துவர்கள் எங்களை வெளியேறும்படி வற்புறுத்தினார்கள். அவருக்கு கோவிட் -19 இல்லையென்றாலும், அவர் இங்கேயே இருந்தால் வந்து விடும் என்று மருத்துவர்கள் எங்களிடம் கூறினார்கள்.

எனவே நாங்கள் வீட்டிற்குச் சென்று எங்களை தனிமைப்படுத்திக் கொண்டு வீட்டிலேயே சிகிச்சை பெற முடிவு செய்தோம்.

இப்போது அவர் நன்றாக இருக்கிறார் என்றும் கூறியுள்ளார். இது ஒருபுறம் இருக்க ஸ்ரேயாவின் கணவர் இன்று பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதற்கு ஸ்ரேயா இன்ஸ்டாகிராமில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.