25.7 C
Chennai
Sunday, Dec 29, 2024
625.0.560.350.160.300.053.80 4

அதிரவைக்கும் ஆய்வின் முடிவு! கொரோனாவிற்கு பயன்படுத்தி வரும் மருந்தில் பக்க விளைவு…இதயம் முழுவதும் நச்சு!

கொரோனா வைரஸிற்கு தற்போது பயன்படுத்தி வரும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்து வைரஸை கட்டுப்படுத்தவில்லை என்ற முக்கிய தகவல், அமெரிக்காவின் ஆய்வுக் கட்டுரை ஒன்றில் தெரியவந்துள்ளது.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸின் பிடியில் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கும் நாடுகளின் வரிசையில் முதல் இடத்தில் அமெரிக்கா உள்ளது.

இந்நாட்டில் கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்பு அதிகமாக உள்ளது. இதுவரை கொரோனா வைரஸிற்கு முறையான சிகிச்சை முறையும், மருத்தும் கண்டுபிடிக்காத நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்து பயன்படும் என்று கருத்து தெரிவித்திருந்தார்.

இதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் ஹைட்ராக்ஸி குளோரோசில் மருந்து ஏற்றுமதி செய்ய இருந்த தடையை நீக்குமாறும் கூறியிருந்தார்.

இதையடுத்து மத்திய அரசு அமெரிக்காவிற்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்துகளை ஏற்றுமதி செய்தது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் பற்றி அமெரிக்காவின் பிலடெல்பியாவில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையின் தொற்று நோய் பிரிவு மருத்துவர் பால் ஆபிட் எழுதியுள்ள கட்டுரையில் ஹைட்ராக்ஸி குளோரோசில் மருந்து கொரோனாவை கட்டுப்படுத்தவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில், கொரோனா தொற்று ஏற்பட்ட நோயாளிகளுக்கு போதைப் பொருட்களால் ஏற்படும் பக்கவிளைவுகள் இருந்ததாகவும் இதயம் முழுவதும் நச்சுத்தன்மையுடன் காணப்பட்டதாகவும் தனது ஆய்வில் தெரிவித்துள்ளார்.

மேலும் கொரோனா வைரஸ் பாதித்த நோயாளிகளில் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் எடுத்த 2 புள்ளி 8 விழுக்காடு பேர் இறந்துள்ளனர்.

ஹைட்ராக்ஸி குளோரோகுயின் எடுத்துக் கொள்ளாத நோயாளிகளில் 4 புள்ளி 6 விழுக்காடு பேர் இறந்தனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த எண்ணிக்கையிலிருந்து பார்க்கப்போனால் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்து கொரோனா நோயாளிகளுக்கு ஓரளவுக்குத்தான் உதவுமே தவிர இது மருந்து அல்ல எனவும், இதை முழுமையாக நம்பி நாம் எல்லோருக்கும் இதை அளிக்க முடியாது, இதயத்தில் பாதிப்பு ஏற்படுத்தும் எனவும் பால் ஆபிட் தனது ஆய்வு கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.