25.5 C
Chennai
Sunday, Dec 22, 2024
Anushka

சற்றுமுன் மருத்துவர்களை தாக்கியதற்கு நடிகை அனுஷ்கா ஷர்மா வருத்தம்!!!

இந்தக் கொரோனா நோய் உலகெங்கிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் இந்தியாவில் ஓரளவுக்கு இந்த பாதிப்பினை அறிந்து அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றே கூறலாம்.

இதற்காக இரவு பகல் பாராமல் மருத்துவர்களும், சுகாதார பணியாளர்களும் மற்றும் பலரும் உழைத்து வருகின்றனர். நாம் அனைவரும் வீட்டில் இருக்க நம்மைப் பாதுகாப்பதற்காக அவர்கள் அவர்களது உற்றார் உறவினரை விட்டு நமக்காக சேவை செய்து வருகின்றனர்.

இந்த நிகழ்வினை குறித்து அனுஷ்கா ஷர்மா, சில நாட்களாக மருத்துவர்களும், சுகாதாரப் பணியாளர்களும் தாக்கப்படுவதாக செய்தியறிந்து மிகவும் வருத்தத்திற்கு உள்ளாகி உள்ளதாகவும், இது நாம் ஒற்றுமையுடன் இருக்க வேண்டிய தருணம் என்றும் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். மேலும் அவர் சக குடிமக்களை மரியாதையுடன் நடத்த வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

அனுஷ்கா ஷர்மாவும் அவரது கணவரும், கிரிக்கெட் வீரருமான விராட் கோலியும் இணைந்து பல்வேறு விழிப்புணர்வு செய்திகளை அவர்களது சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர்.Anushka Anushka Sharma Anushka Sharmah