27.8 C
Chennai
Wednesday, Jan 22, 2025
cover 15

இதோ எளிய நிவாரணம்! தழும்புகள் மற்றும் பருக்கள் மறைய கொய்யா பழத்தில் பேஸ் பேக் தயாரிப்பது எப்படி?

கொய்யா பழம்   பெரும்பாலான மக்களுக்கு   தெரிந்த ஒன்றாகவே இருக்கும்.  பெரும்பாலாக கிராம புறங்களில் அதிகப்படியானோர்   வீட்டில் கொய்யா செடி இருக்கும். கொய்யா பழத்தை    வைத்து பேஸ் பேக் செய்யலாம் உங்களுக்கு தெரியுமா? இல்லெயென்றால்  தெரிந்து கொள்ளுங்கள். இது உங்களுக்கு செலவில்லாத சிம்பிளான ஒரு முறையாகும்.   வைட்டமின் சி, பி மற்றும் ஏ போன்ற ஏராளமான சத்துக்கள் கொய்யாவில் உள்ளதால் இது முகத்திற்கு  நல்லதொரு நிறத்தை தர உதவுகிறது. உடலில் கொலோஜன் உற்பத்தியை அதிகரிக்க செய்து, சூரிய கதிர்களால்  சருமம் பாதிக்காமல் இருக்க உதவுகின்றது.

முகத்தில்  ஏற்பட்ட தழும்புகள்   மற்றும் பருக்கள் மறைய கொய்யா  பழம் பெரிதளவில் உதவுகிறது. கொய்யாவில்   இருக்கும் இயற்கையான ஆற்றல் முகத்தில் ஏற்பட்ட  கரும்புள்ளிகளை தடுக்க உதவுகின்றது.

தேவையான  பொருட்கள் :

எலுமிச்சை சாறு – 1 தேக்கரண்டி

கொய்யா – 1

தேன் – 1 தேக்கரண்டி cover 15

செய்முறை:

  • கொய்யாவை தோல்   சீவி அதன் சாறை   மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.
  • பின்பு   அதனுடன் மேலே  கொடுக்கப்பட்டுள்ள   அளவில் தேன் மற்றும் எலுமிச்சை   சாறை கலந்து கொள்ளுங்கள்.
  •  இந்த  கலவையை   நன்கு கெட்டியாக  கலக்கிக் கொள்ளவும்.  இதை முகத்தில் அரை   மணி நேரம் வரை ஊற வைக்கலாம்.
  • அடுத்து வெதுவெதுப்பான  நீரில் முகத்தை கழுவிக்  கொள்ளலாம். இதை வாரத்திற்கு   ஒரு முறை செய்தால் போதும். முகம்  நல்ல நிறத்துடனும் பளிச்சென்றும் இருக்கும்.
  • தேன்   முகத்திற்கு  மினுமினுப்பு   தன்மையை தர உதவுகின்றது.
  • கொய்யா  இலை சருமத்திற்கு   நல்ல நிறத்தையும், பளபளப்பு  தன்மையும் தர உதவுகின்றது.
  • எலுமிச்சை  சாறு முகத்தில்   இருக்கும் சரும அழுக்குகள்  மற்றும் தூசுக்களை நீக்கி சருமத்தை  அழகாக்க உதவுகிறது. சருமத்தை தூய்மையாக்கவும்   உதவுகிறது. இந்த கொய்யா பேஸ் பேக்கை நீங்களும்  வீட்டில் ட்ரை செய்து பாருங்கள் தோழிகளே!