29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
4 153803

உங்களுக்கு தெரியுமா நெஞ்சு சளி, வறட்டு இருமலை அடியோடு வெளியேற்றும் கடலை மாவு…

அழகு மற்றும் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் நாம் பொதுவாகப் பயன்படுத்தப்படுகிற உட்பொருள்களில் ஒன்று தான் இந்த கடலை மாவு. அழகு சார்ந்த விஷயங்களில் மிக அதிகமாகவே நாம் கடலை மாவைப் பயன்படுத்துகிறோம்.

அதேபோல பொதுவாக எல்லோருக்கும் உண்டாகிற சின்ன சின்ன ஆரோக்கியக் கோளாறுகளை சரிசெய்வதில் இந்த கடலை மாவை பெரிதும் பயன்படுகிறது.

கடலைமாவு

கடலைமாவை ஜீரா போல செய்து நெஞ்சுச்சளி மற்றும் வறட்டு இருமல் ஆகியவற்றை அடியோடு விரட்டி அளித்துவிடும். இது ஒன்றும் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட முறை கிடையாது. இது நம்முடைய நாள்பட்ட பாட்டி வைத்தியங்களில் ஒன்று தான். குறிப்பாக, பஞ்சாபி வீடுகளில் இந்த மருத்துவ முறை வழக்கமாக பயன்படுத்தப்பட்ட மருத்துவ முறைகளில் ஒன்று தான்.

2 153கடலைமாவு ஜீரா

கடலை மாவுடன் நெய், பால், மஞ்சள் பொடி, மிளகு பொடி ஆகியவற்றைச் சேர்த்து செய்யப்படும் ஒரு மருந்து தான் இந்த கடலைமாவு ஜீரா. இது அதிக தண்ணீயாகவும் இருக்காது. ரொம்ப திக்கான பேஸ்ட்டாகவும் இருக்காது. அதாவது ஜீரா பதத்தில் இருக்கும். அதனால் தான் இதை கடலைமாவு ஜீரா என்கிறார்கள். இதில் சுவை இல்லை என்று நினைப்பவர்கள் வேண்டுமானால் சிறிது சர்க்கரையோ அல்லது வெல்லமோ சேர்த்துக் கொள்ளலாம்.

மஞ்சளும் மிளகும்

மஞ்சள் மற்றும் மிளகு இரண்டிலும் நோயெதிர்த்துப் போராடும் தன்மை அதிகமாக இருக்கிறது. பூஞ்சைத் தொற்றை குணப்படுத்தக்கூடியது என்று நமக்குத் தெரியும். பாக்டீரியா தொற்றுக்களை அழித்து, இது சளிக்கு மிகச்சிறந்த தீர்வாக இருக்கும். பொதுவாக சளி இருக்கும்பொழுது, பெரிதாக தூக்கம் இருக்காது. ஆனால் இந்த மஞ்சளும் மிளகுப்பொடியும் சளி இருந்தாலும் அதிலிருந்து தீர்வைக் கொடுத்து நல்ல தூக்கத்தைக் கொடுக்கும்.

எப்போது சாப்பிட வேண்டும்?

இந்த கடலை மாவை ஜீராவை இரவில் தூங்கச் செல்லும் முன் சாப்பிட வேண்டும். இந்த ஜீராவை இரவில் சாப்பிடும் போது, இரவில் ஏற்படும் மூக்கடைப்பை சரிப்படுத்தும். சிலருக்கு பெரும்பாலும் சளி பிடித்தவுடன் மூக்கு ஒழுக ஆரம்பிக்கும். அதையும் இந்த கடலைமாவு ஜீரா சரி செய்யும். கடலை மாவில் உள்ள ஆன்டி ஆக்சிடண்ட் மற்றும் வைட்டமின் பி1 ஆகியவை உடலுக்கு ஆற்றலை வழங்குகிறது. தொண்டை கரகரப்பு, மூக்கடைப்பு ஆகியவற்றை சரிசெய்யும்.4 153803

எப்படி செய்ய வேண்டும்?

தேவையான பொருள்கள்

கடலை மாவு – 3 ஸ்பூன்

வெதுவெதுப்பான பால் – 2 கப்

நெய் – 2 ஸ்பூன்

மஞ்சள் பொடி – 1 ஸ்பூன்

மிளகுப்பொடி – 1 ஸ்பூன்

பச்சை ஏலக்காய் பொடி – கால் ஸ்பூன்

வெல்லம் துருவியது – 3 ஸ்பூன்

குங்குமப்பூ – சிறிது

செய்முறை

அடி கனமான நான்ஸ்டிக் பாத்திரத்தில் நெய்யை போட்டு சூடேறியதும், அதில் கடலை மாவைப் போட்டு நன்கு கிளற வேண்டும். அது நல்ல வாசனை வர ஆரம்பிக்கும். நல்ல கோல்டன் கலரில் வரும் வரையில், வறுக்கவும். அடி பிடிக்காமல் கருகாமல் நன்கு கிளற வேண்டும். அதன் பின், கொஞ்சம் கொஞ்சமாக பால் சேர்த்துக் கிளற வேண்டும்.

பால் சேர்த்து கிளற ஆரம்பிக்கும்போது, கட்டி விழ ஆரம்பிக்கும். அப்படி கட்டி விழாமல் நன்கு கிளற வேண்டும். அதன்பின், மஞ்சள் பொடி, மிளகுப் பொடி, ஏலக்காய் பொடி ஆகியவற்றைச் சேர்த்து கிளற வேண்டும். அதன்பின், துருவிய வெல்லம் சேர்த்து கிளறுங்கள். 5 நிமிடங்கள் வரை தொடர்ந்து கிளறிவிட்டு பின் எடுத்துவிடலாம். ஓரளவுக்கு திக்காகிவிடும். இதை சூடாக இருக்கும் போதே சாப்பிடுங்கள்.

குறிப்புகள்

சர்க்கரையோ வெல்லமோ வேண்டாம் என்று சொல்பவர்கள் தேங்காய் சர்க்கரையோ பனை வெல்லமோ சேர்த்துக் கொள்ளலாம்.

பாலுக்கு பதிலாக பாதாம் பாலைக் கூட சேர்த்துக் கொள்ளலாம்.

ஒருவேளை நீங்கள் வெல்லத்தை பாகாகக் காய்ச்சி சேர்த்தால் பாலை தவிர்த்து விடவும். இல்லையென்றால் அது மிகவும் தண்ணியாகிவிடும்.

இந்த கலவையை சூடாகச் சாப்பிடுங்கள். தொடர்ந்து இரவில் அதை சாப்பிட்டு வந்தால், நெஞ்சுச் சளி மற்றும் வறட்டு இருமல், தொண்டைக் கட்டு, மூக்கடைப்பு ஆகிய அத்தனையும் குணமடையும்.