140058513fcf493063eba6e8cb512223dc12eeb5f26f541e3979ddbd5bf04df84a244fc58

அதிரும் கோவை!இளம் சிறுமியை சீரழித்த 10 பேர்.

இந்த மோசமான சூழலிலும் க்ரைமில் எந்தவிட்டுள்ளது கோவை, ஆமாம், 10 பேர் 4 வருடங்களாக இளம் பெண்ணை மிரட்டி பாலியல் ரீதியாக நாசம் செய்து வந்துள்ளது அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கோவை சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி, 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுமி கொஞ்ச நாளாகவே வயிற்று வலி பிரச்சனையால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் அந்த சிறுமியின் பெற்றோர் தனது மகளை கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு டெஸ்ட் செய்யப்பட்ட பிறகு தான் தெரிந்தது அந்த சிறுமி கர்ப்பம் என்று.

இதனால் எதுவுமே புரியாமல் கலங்கிப்போன பெற்றோர், என்ன செய்வதென்று தெரியாமல் தொடர்ந்து சிகிச்சையில் மகளை அங்கேயே அனுமதித்திருந்த நிலையில், திடீரென அவர்கள் மகளை அழைத்து கொண்டு மருத்துவமனையில் இருந்து கிளம்பி சென்றுவிட்டனர்.

சிகிச்சையில் இருந்த சிறுமியை காணோம் என்று மருத்துவமனை நிர்வாகம் போலீசுக்கு விஷயம் போனது. இறுதியில் போலீசார் சிறுமியை கண்டுபிடித்து, அவரிடம் விசாரணை நடத்தியதில் சிறுமி சொன்ன விஷயத்தை கேட்டு போலீசார் அதிர்ந்து போயுள்ளனர். சிறுமியிடம் 10 பேர் பழகி வந்துள்ளனர். இவர்கள் 10 பேருமே சிறுமியை காதலிப்பதாக சொல்லி ஏமாற்றியுள்ளார்.

ஒருவர் பழகுவது இன்னொருவருக்கு தெரியாது. அதனால் 10 பேரும் தனித்தனியாக, வலுக்கட்டாயமாக சிறுமியை பலவந்தமாகவும், சில சமயங்களில் ஏமாற்றியும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.. இதனால அந்த சிறு கர்ப்பம் அடைந்துள்ளார். இதில், கோவையை சேர்ந்த கார்த்திக், தனசேக, சந்தோஷ், இவர்களை தவிர, பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் 4 பேர் என மொத்தம் 8 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கைதானதில் 4 பேர் சிறுவர்கள் என்பதால் அவர்கள் சீர்திருத்த பள்ளியிலும், மீதமுள்ள 4 பேர் கோவை சிறையிலும் அடைக்கப்பட்டனர். மேலும் சம்பந்தப்பட்ட 2 பேர் தலைமறைவாக உள்ளனர். கைதாகி உள்ளவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில் ஷாக் தகவல் வெளியாகி உள்ளது.

2016-ம் ஆண்டில் இருந்தே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர் இந்த விஷயத்தை வெளியில் சொன்னால் கொன்றுவிடுவதாக மிரட்டி உள்ளனர். மாணவர்களை தவிர மற்றவர்கள் சிறுமியின் அக்கம்பக்கத்தினர். உயிருக்கு பயந்து சிறுமியும் எதையும் வெளியே சொல்லாமல் இருந்துள்ளார். சிறுமியை பல ஆண்டுகளாக சீரழித்த சம்பவம் கோவையை மட்டுமல்லாமல் தமிழகத்தையே உலுக்கியுள்ளது.