23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
vijay worried for son sanjay is the star kid stuck in canada

கனடாவில் தனியாக தவிக்கும் மகன்.. சோகத்தில் நடிகர் விஜய்!

மகன் சஞ்சய் கனடாவில் தனியாக சிக்கித் தவிப்பதால் நடிகர் விஜய் பெரும் சோகத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படம் கடந்த 9 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது

இதனை தொடர்ந்து நடிகர் விஜய் தனது 65-வது படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். இதன் படப்பிடிப்பு கொரோனா விவகாரம் முடிந்தவுடன் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முருகதாஸ்க்கு வாய்ப்பு

விஜயின் 65வது படத்தை இயக்குனர்கள் பாண்டிராஜ், அருண்ராஜா காமராஜ், பார்த்திபன், சூர்யாவை வைத்து சூரரைப்போற்று படத்தை இயக்கியுள்ள சுதா கொங்கரா ஆகியோரில் ஒருவர் இயக்கலாம் என்று கூறப்பட்டது. இறுதியில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது.

வாய் திறக்கவில்லை

விஜய்யின் அடுத்த படம் துப்பாக்கி 2-ம் பாகம் என்றும் கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. இதனிடையே கொரோனா பாதிப்புக்கு நிவாரணம் வழங்கும் வகையில் மத்திய மாநில அரசுகளுக்கு பல்வேறு நடிகர் நடிகைகளும் நிதி அளித்து வரும் நிலையில் விஜய் இதுவரை வாய் திறக்கவில்லை என்பது திரைத்துறை வட்டாரத்தில் பெரும் பேச்சாக இருந்து வருகிறாது.vijay worried for son sanjay is the star kid stuck in canada

கனடாவில் மகன்

இந்நிலையில் நடிகர் விஜய் பெரும் சோகத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, விஜயின் மகன் சஞ்சய் கனடாவில் படித்துவருகிறார். கொரோனா வைரஸின் மிரட்டலால் உலகம் முழுவதும் பெரும்பாலான நாடுகள் முடங்கியுள்ளன. அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனார். பல நாடுகளில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்திவரும் நிலையில் தனது மகன் தனியே வெளிநாட்டில் இருப்பதால் நடிகர் விஜய் மிகுந்த கவலையில் உள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் கனடாவில் கொரோனா தாக்கம் குறைவு என்ற தகவலும் சஞ்சய் அங்கு பாதுகாப்பாக இருப்பதாக வந்த தகவலும் விஜய்க்கு சற்று நிம்மதியை அளித்துள்ளதாக தெரிகிறது.

குடும்பத்தினர் கவலை

ஆனாலும் இந்த நெருக்கடியான கால கட்டத்தில் மகன் குடும்பத்தை விட்டு தனியாக இருப்பது விஜய் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பெரும் வருத்தத்தையும் கவலையையும் கொடுத்துள்ளதாம். இந்தியாவில் விதிக்கப்பட்டிருந்த 21 நாள் ஊரடங்கு இன்றுடன் நிறைவடையும் நிலையில் இந்தியாவில் மே 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.