24.2 C
Chennai
Tuesday, Dec 24, 2024
vishnu vishal 1

வாய் திறந்த விஷ்ணு விஷால்! என் விவாகரத்துக்கு யார் தான் காரணம்.. அமலாபாலா? ஜுவாலாவா?

சினிமாவைப் பொறுத்தவரை காதல் கல்யாணம் விவாகரத்து என்பதெல்லாம் ஒன்றும் புதிய விஷயம் கிடையாது. அதேபோல் சினிமாக்காரர்களும் இதை பெரிதாக எடுத்துக் கொள்வதுமில்லை. ஒரு காலத்தில் ஒரு நடிகர் இரண்டு மூன்று மனைவிகள் வைத்திருந்தது கூட அனைவரும் அறிந்ததே.

ஆனால் தற்போது குடும்பத்தினருக்கும் கோர்ட்டுக்கும் பயப்படுகிறார்களோ, இல்லையோ, இரண்டு திருமணங்கள் மற்றும் விவாகரத்து செய்வதற்கு நெட்டிசன்களைப் பார்த்து பயந்து ஓடுகிறார்கள் சினிமாக்காரர்கள். ஆம். ஒரு சின்ன விஷயம் கிடைத்தாலும் அதை வைத்து நாறடித்து விடுகிறார்கள் நம்ம நெட்டிசன்கள்.

விஷ்ணு விஷால் சமீபத்தில் தனது மனைவியை பிரிந்து விவாகரத்து பெற்றார். அதன்பிறகு பிரபல பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டா என்பவரை காதலித்து வருகிறார் என்பதும் அவர் போடும் புகைப்படங்களில் வெட்ட வெளிச்சமாக தெரிகிறது. விவாகரத்து செய்து விட்டு இன்னொரு பெண்ணை திருமணம் செய்து கொள்வது ஒன்றும் தவறான விஷயம் அல்ல.

ஆனால் விஷ்ணு விஷால் நெட்டிசன்களிடம் மாட்டிக் கொண்டு படாதபாடுபடுகிறார். எதற்கெடுத்தாலும் ஜுவாலா குட்டா பற்றி பெருமையாக பேசிக் கொண்டிருப்பது நெட்டிசன்களை கோபமடைய வைத்து விட்டது போல. புதிதாக ஒரு புரளியை கிளப்பி விட்டு விட்டார்கள். அதாவது விஷ்ணு விஷாலின் முன்னாள் மனைவி ரஜினியை பிரிவதற்கு அமலா பால் தான் காரணம் என சில செய்திகள் பரவின.

அதனைத் தொடர்ந்து தற்போது விவாகரத்துக்கு காரணம் விஷ்ணு விஷாலின் தற்போதைய காதலி ஜுவாலா குட்டா எனவும் செய்திகள் பரவ ஆரம்பித்தது. இதனால் கடுப்பான விஷ்ணு விஷால், தன்னுடைய திருமணம் விவாகரத்து போன்றவை என்னுடைய தனிப்பட்ட விஷயம் எனவும், இதற்கு யாரும் காரணம் இல்லை ஆகவே யாரையும் குறை சொல்ல வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி மற்றவர்களிடம் சொல்ல வேண்டிய அவசியமில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். எங்கேயோ போற மாரியாத்தா என் மேல வந்து ஏறாத்தா என சும்மா இருந்த விஷ்ணுவை வம்புக்கிழுத்து விட்டார்கள் நெட்டிசன்கள்.

அவரும் எதற்கெடுத்தாலும் ஜூவாலா குட்டாவை பெருமையாகப் பேசுவது நமக்கே சென்று கடுப்பாக தான் இருக்கிறது என்கிறார்கள் சினிமா வட்டாரங்கள்.