29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
medium thumb 2

ஈரோடு அதிசயம்! பிறந்து 14 நாட்களில் குடம் குடமாக பால் கொடுக்கும் மர்ம கன்றுக்குட்டி..!

ஈரோடு அருகே புலவன் பாளையம் என்ற கிராமத்தில் பிறந்து 14 நாட்களே ஆன கன்றுக்குட்டி ஒன்றின் மடியிலிருந்து பால் சுரக்கின்ற அதிசியம் நிகழ்ந்துள்ளது. இந்த நிகழ்வை கண்ட அப்பகுதி மக்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் வெள்ளோடு அருகே புலவன் பாளையம் என்ற கிராமத்தில் வசிக்கும் ஒருவருக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு அவர்கள் வளர்க்கும் பசு பெண் கன்றை ஈன்றுள்ளது. தற்போது பிறந்து 14 நாட்களே ஆன அந்த பசுவின் கன்றுக்குட்டியின் மடியிலிருந்து பால் சுரக்கிறது.

இதனை கண்ட அப்பகுதி மக்கள் மிகவும் அதிர்ச்சிக்கு உள்ளானர்கள். பின்னர் தகவல் அறிந்த வந்த கால்நடை மருத்துவர்கள் பசுவையும், கன்றையும் பரிசோதனை செய்துள்ளனர்.medium thumb 2

இந்நிலையில், கால்நடை மருத்துவர்கள் 100 பிரசவங்களில் இதுபோன்று அதிசயம் நிகழும் என கூறியுள்ளார். இதனால் கன்றுக் குட்டிக்கும் பசுவிற்கும் எந்தவித ஆபத்தும் இல்லை என்றும் கூறினார். மேலும், இப்படி நடக்க பசுவின் ஹார்மோன்கள் கன்றுக்குட்டியின் ரத்தத்தில் கலந்து இருப்பது தான் காரணம் என்று தெரிவித்துள்ளார்.