ஐஸ்வர்யா ராயின் உம்ரா ஜான் படத்தில் இருக்கும் பாடலுக்கு அழகாக நடனம் ஆடிய ஜான்வி கபூர்!!
ஸ்ரீ தேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் ஐஸ்வர்யா ராயின் உம்ரா ஜான் படத்தில் வந்த பாடலுக்கு அழகாக நடனம் ஆடும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. ஜான்வி கபூர் நடித்த முதல் படமான தடக் ஷூட்டிங் துவங்கியபோது இருந்த ஸ்ரீதேவி ரிலீஸின் போது உயிருடன் இல்லை. ஸ்ரீதேவி இறந்தபோது ஜான்வி ஷூட்டிங்ஸ் பாட்டில் இருந்தார். தற்போது ஊரடங்கு உத்தரவால் வீட்டில் இருக்கும் ஜான்வி பழைய புகைப்படங்களை சமூக வலைதளங்களில் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், டான்ஸ் கிளாஸுக்கு போக முடியாததையடுத்து ஐஸ்வர்யா ராயின் உம்ரா ஜான் படத்தில் வந்த சலாம் பாடலுக்கு தான் முன்பு ஆடிய வீடியோவை ஜான்வி கபூர் வெளியிட்டுள்ளார். ஜான்வி வெளியிட்ட வீடியோவை பார்த்த ரசிகர்கள்… என்ன அழகாக ஆடுகிறார். பிங்க் நிற சல்வாரில் அழகாக இருக்கிறார். ஜான்வி இம்புட்டு அழகாக ஆடுவதை பார்க்க அவரின் அம்மா ஸ்ரீதேவிக்கு கொடுத்து வைக்கவில்லையே. மகளின் முதல் படத்தை கூட பார்க்காமல் போய்விட்டார் என்றனர். அம்மா இறந்துவிட்டாலும் அவரின் டிரெஸ்ஸிங் அறையில் இன்னும் அவர் வாசனை வருவதாக ஜான்வி கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டிருந்தார்.
View this post on Instagram
#missing the class room. But anywhere and everywhere can be a classroom no? ?
மறைந்த நடிகை ஸ்ரீதேவி மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் போனி கபூரின் மகள் ஜான்வி, 2018 ஆம் ஆண்டில் கரண் ஜோஹரின் ‘தடக்’ மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். அவர் கடைசியாக நெட்ஃபிக்ஸ்ஸின் ‘கோஸ்ட் ஸ்டோரீஸ்’ படத்தில் காணப்பட்டார். அவரது அடுத்த இரண்டு படங்கள் ‘ரூஹிஅஃப்ஸா’ மற்றும் ‘கார்கில் கேர்ள்’, ஐ.ஏ.எஃப் பைலட் குஞ்சன் சக்சேனாவின் வாழ்க்கை வரலாறு. கரனின் கால நாடகமான ‘தக்த்’ படத்திலும் அவர் ஒப்பந்தம் செய்துள்ளார்.