28.1 C
Chennai
Sunday, Dec 22, 2024
1548662618

உங்களுக்கு தெரியுமா எந்த கீரையில் அதிகப்படியான சத்துக்கள் உள்ளது?

ஏராளமான கீரைகளை நாம் பயன்படுத்தி இருப்போம். ஆனால் அதன் நன்மைகளை பற்றி நமக்கு தெரியாமல் பல வகையான ருசியான உணவுகளில் அதை உண்டு வந்திருப்போம். அத்தகைய கீரைகளில் நிறைந்திருக்கும் ஏராளமான சத்துக்களை பற்றி இதில் காண்போம்.

அகத்திக்கீரை:

  • இந்தக்கீரையை உணவு சமைத்து உண்டு வந்தால், உடலில் இருக்கும் உஷ்ணத்தை குறைத்து விடும்.
    இரத்தம், குடல் ஆகியவற்றை தூய்மையாக்கி உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. குடலில் இருக்கும் புழுக்களை கொன்று வயிற்றை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவுகின்றது. அதுமட்டுமில்லாமல் பித்தத்தை தணிக்கும் சக்தி இந்த கீரையிடம் உள்ளது.
  • தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் போன்ற பலவகையான உடல் உபாதைகளை இந்தக் கீரை குணப்படுத்தி விடும். உடலில் ஏறும் விஷத்தை முறிக்கும் தன்மை அகத்திக்கீரையை உள்ளது.

பசலைக்கீரை:

இந்த வகை கீரை உடலில் இருக்கும் நீரை பெருக்குவது மட்டுமில்லாமல், உடலுக்கு குளிர்ச்சியை தரவும் உதவுகிறது. குழந்தை பெற்றெடுத்த பெண்கள், இந்த கீரையை உண்டு வந்தால் தாய்ப்பால் நன்றாக சுரக்கும். இது வயிற்று புண்களை குணப்படுத்தும் அற்புத தன்மை கொண்டுள்ளது. பசலை கீரையை தொடர்ந்து உண்டு வந்தால், கண்கள் குளிர்ச்சி அடைந்து நல்ல ஒளியை தரும்.

வெந்தயக்கீரை:

உடலுக்கு தேவையான இரும்புச்சத்தை தர வெந்தயக்கீரை உதவுகின்றது, வயிற்றுப்போக்கு பிரச்சனையை விரைவில் குணப்படுத்திவிடும். கண்களை ஆரோக்கியமாக வைப்பது மட்டுமில்லாமல், வயிற்றில் இருக்கும் புண்களையும் ஆற்றி விடும்.

அரைக்கீரை:

தோல் வியாதிகளான தேமல், சொறி போன்ற பல வியாதிகளை குணப்படுத்த அரைக்கீரையை தினமும் உண்டு வரலாம்.1548662618

மணத்தக்காளி கீரை:

இந்தக் கீரை அல்சர் நோயை குணப்படுத்தக்கூடியது. குடலை சுத்தம் செய்வது மட்டுமில்லாமல், குடலை ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ளும். பெண்கள் இந்தக்கீரையை தொடர்ந்து உண்டு வந்தால் கர்ப்பப்பை ஆரோக்கியமாக இருக்கும். குடற்புழுக்களை அழிக்கும் தன்மை இந்தக்கீரைக்கு உள்ளது.

முருங்கைக்கீரை:

  • ரத்தத்தை சுத்தப்படுத்தம் இரும்புச்சத்து முருங்கை கீரையில் உள்ளதால், இதை தொடர்ந்து உண்டு வரலாம். உடல் உஷ்ணத்தை குறைத்து, உடலை குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ள இந்தக்கீரை உதவுகின்றது. அதுமட்டுமில்லாமல் மலசிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் இதை தினமும் உண்டு வரலாம்.இதனால் மலம் எளிதில் கழியும்.
  • மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் வலியை குறைக்க முருங்கை இலை சாறுடன், சிறிது கல் உப்பு சேர்த்து குடித்து வந்தால் வலி எளிதில் நின்று விடும். வயிற்றுப் புண்களையும் எளிதில் குணப்படுத்திவிடும்.

சிறுகீரை:

குடலின் பலத்தை அதிகரிக்க உதவுகின்றது. உடல் தளர்ச்சியை எளிதில் நீக்கிவிடும். உடலில் இருக்கும் பித்தத்தை குறைத்து, மலசிக்கல் பிரச்சனையை குணப்படுத்தி விடும்.

புளிச்சக்கீரை:

இந்தக்கீரையுடன் வெங்காயம் மற்றும் வெந்தயத்தை சேர்த்து சமைத்து மூன்று வேலையும் உண்டு வந்தால், வயிற்று கடுப்பு பிரச்சனை நின்று விடும். ரத்தப்போக்கை கட்டுக்குள் வைத்துக்கொள்ள இந்தக்கீரையை உண்டு வரலாம்.குடலை சுத்தம் செய்து, வலிமையாக வைக்க இந்தக்கீரை உதவுகிறது.