27.5 C
Chennai
Tuesday, Jan 21, 2025
cover 156

இளமை பருவத்திலேய உங்க கண்களை சுற்றி சுருக்கம் வந்து விட்டதா ? அப்ப தினமும் செய்யுங்க…

கண்கள் தான் நம் முகத்தில் இருக்கும் அழகை வெளிப்படுத்தும் ஒன்றாக உள்ளது. நம் கண்கள் அழகாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும் போது பார்ப்பதற்கும் நன்றாக இருக்கும். இல்லையெனில் அடுத்தவர்களைப் பார்த்துப் பேசவே தயக்கமாக இருக்கும். கண்களைச் சுற்றி வயதான தோற்றம் அல்லது சுருக்கங்கள் இருந்தால் முகத்தின் அழகே கேட்டு விடும்.

கண்களைச் சுற்றி சுருக்கங்கள் ஏற்படுவதற்குப் பல காரணங்கள் உள்ளன. அதாவது புகைபிடித்தல், ஊட்டச்சத்துக் குறைபாடு, தவறான உணவுப் பழக்கம், மரபியல் கோளாறு மற்றும் மன அழுத்தம் போன்ற பல்வேறு காரணங்களால், இளமைப் பருவத்திலும் கண்களைச் சுற்றி சுருக்கங்கள் ஏற்படலாம். ஆனால் சில எளிமையான வீட்டு வைத்தியம் மூலம் உங்கள் கண்களைச் சுற்றி உள்ள சுருக்கங்களை அகற்றி விடலாம்.

பால்

பாலில் லாக்டிக் அமிலம் நிறைந்துள்ளது. இது உங்கள் சருமத்தை மென்மையாகவும் உறுதியாகவும் மாற்றி சுருக்கங்களை மெது மெதுவாகக் குறைக்க உதவுகிறது.

தேவையான பொருட்கள்

1 அல்லது 2 தேக்கரண்டியளவு காய்ச்சாத பாலை எடுத்துக் கொள்ளுங்கள். பாலில் ஒரு காட்டன் பஞ்சை நனைத்து கண்களைச் சுற்றி அப்ளை செய்து 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவுங்கள். நல்ல முடிவுகளை விரைவான பெறத் தினமும் இந்த முறையைப் பின்பற்றலாம்.

தர்பூசணி

உங்கள் சருமத்தை ஈரப்பதத்துடன் வைப்பதற்கு தர்பூசணி உதவும். அத்துடன் பாலாடை சுருக்கங்களை நீக்குவதற்கும் இளமையான தோற்றத்தைத் தருவதற்கும் உதவும்.

தேவையான பொருட்கள்

ஒரு தேக்கரண்டியளவு தர்பூசணி கூழ் மற்றும் ஒரு தேக்கரண்டியளவு பாலாடை எடுத்துக் கொள்ளுங்கள். இரண்டையும் ஒன்றாகக் கலந்தால் பேஸ்ட் போல் உங்களுக்குக் கிடைக்கும். இதைக் கண்களைச் சுற்றித் தடவி 20 நிமிடங்கள் அப்படியே விட்டு பின்னர் கழுவுங்கள்.

வெந்தயம்

வெந்தயம் மற்றும் கொத்தமல்லி கலவை, இது உங்கள் சருமத்திற்கு இயற்கையான பளபளப்பை அளிக்கவும், சுருக்கங்களின் வளர்ச்சியை படிப்படியாகக் குறைக்கவும், மற்றும் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.cover 156

தேவையான பொருட்கள்

ஒரு தேக்கரண்டியளவு வெந்தய பேஸ்ட், ஒரு தேக்கரண்டியளவு கொத்தமல்லி பேஸ்ட் மற்றும் தேவையானளவு சுடுதண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு கிண்ணத்தில் கொத்தமல்லி மற்றும் வெந்தயம் பேஸ்ட் இரண்டையும் ஒன்றாகக் கலந்து 1 டம்ளர் சூடான நீரை அதில் ஊற்றி நன்றாகக் கலக்கவும். பின்னர் இரண்டு காட்டன் எடுத்து அதில் நனைத்து, சிறிது நேரம் ஊறவைத்து பின்னர் அதை, கண்களின் மேல் வைக்கவும். 10 நிமிடங்களுக்குக் கண்களைத் தொட வேண்டாம். 10 நிமிடங்களுக்குப் பிறகு அவற்றை நீக்கி விட்டு மற்றொரு காட்டன் பஞ்சுகளை கண்களின் மேல் வைக்கவும். மீண்டும் 10 நிமிடங்களைக் கடந்த பின்பு வெதுவெதுப்பான தண்ணீரில் கண்களைக் கழுவுங்கள். இந்த முறையை நீங்கள் வாரத்திற்கு 2 முதல் 3 செய்யலாம்.

ஓட்ஸ்மாவு

ஓட்ஸ்மாவு மற்றும் சூடான பால் எடுத்துக் கொள்ளுங்கள். ஓட்ஸ் மாவு வயதான தோற்றத்தைக் குறைக்கும் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. எனவே ஓட்ஸ்மாவு சுருக்கங்களைக் குறைப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

தேவையான பொருட்கள்

ஒரு தேக்கரண்டியளவு ஓட்ஸ் மாவு மற்றும் ஒரு தேக்கரண்டியளவு சூடான பால் எடுத்து கிண்ணத்தில் ஓட்ஸ் மாவு போட்டு மென்மையான பேஸ்டாக கிடைக்கும் வரை சிறிது சிறிதாகச் சூடான பாலை ஊற்றுங்கள். பின்னர் பேஸ்ட் எடுத்து உங்கள் கண்களைச் சுற்றி தடவி 20 நிமிடங்கள் கழித்துக் குளிர்ந்த நீரில் கழுவுங்கள். சுருக்கங்கள் விரைவில் அகற்ற விரும்பினால் வாரத்திற்கு 2 முதல் 3 முறை செய்யுங்கள்.

அன்னாசி

தயிர், தேன் மற்றும் அன்னாசிப்பழம் இவற்றில் இயற்கையாகச் சருமத்தைக் குணப்படுத்தும் பண்புகள் உள்ளன. இவை சுருக்கங்களைக் குறைப்பதற்கு மட்டுமல்லாமல் சருமத்தை ஈரப்பதத்துடன் வைக்கவும் உதவுகிறது.

தேவையான பொருட்கள்

1/2 தேக்கரண்டியளவு தயிர், 1/2 தேக்கரண்டியளவு தேன், ½ கப் அன்னாசி கூழ் பேஸ்ட் எடுத்து ஒரு கிண்ணத்தில் மூன்று பொருட்களையும் போட்டுக் கலந்து கொள்ளுங்கள். இந்த கலவையை எடுத்து கண்களைச் சுற்றித் தடவுங்கள். 10 நிமிடங்கள் வைத்துக் காய்ந்த பின்னர் வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவுங்கள்.

வெண்ணெய்

வெண்ணெய் மற்றும் வாழைப்பழம் இவை இரண்டும் கண்களைச் சுற்றியுள்ள சுருக்கங்களைக் குறைத்து சருமத்தை ஈரப்பதத்துடன் வைக்க உதவுகிறது. வாழைப்பழத்தில் நம் சருமத்தை இளமையாக வைக்க இயற்கையான பண்புகள் உள்ளன

தேவையான பொருட்கள்

ஒரு தேக்கரண்டியளவு பிசைந்த வாழைப்பழம், ஒரு தேக்கரண்டியளவு வெண்ணெய் எடுத்து ஒரு கிண்ணத்தில் போட்டு நன்கு கலந்து கண்களுக்கு அடியில் மற்றும் கண்களைச் சுற்றிலும் தடவுங்கள். 15 நிமிடங்களுக்குப் பிறகு வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவுங்கள்.

உருளைக்கிழங்கு

பிசைந்த உருளைக்கிழங்கு மற்றும் ஆலிவ் எண்ணெய், இதில் உருளைக்கிழங்கு சருமத்தை உறுதியாக்கும் பண்புகளைக் கொண்டுள்ளது மற்றும் வயதான தோற்றத்தைக் குறைக்கிறது. உருளைக்கிழங்கை ஆலிவ் எண்ணெய்யுடன் சேர்க்கும்போது இது உங்கள் சருமத்திற்குச் சிறந்த ஊட்டச்சத்தைக் கொடுக்கும்.

தேவையான பொருட்கள்

2 முதல் 3 தேக்கரண்டியளவு பிசைந்த உருளைக்கிழங்கு மற்றும் 1 தேக்கரண்டியளவு ஆலிவ் எண்ணெய் கலக்கும் போது உங்களுக்கு நல்ல திடமான பேஸ்ட் கிடைக்கும். இந்த பேஸ்டை கண்களைச் சுற்றித் தடவி 15-20 நிமிடங்கள் கழித்துக் குளிர்ந்த நீரில் கழுவுங்கள்.

ரோவன் பெர்ரி

ரோவன் பெர்ரி சருமத்தை உறுதியாக்கும் பண்புகளைப் பெற்றுள்ளது மற்றும் பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது. முட்டைகளில் சுருக்கங்களை எதிர்க்கும் பண்புகள் உள்ளன.

தேவையான பொருட்கள்

4 முதல் 5 அரைத்த ரோவன் பெர்ரி, ஒரு முட்டை, ஒரு தேக்கரண்டியளவு தயிர், ஒரு தேக்கரண்டியளவு தேன் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து கொள்ளுங்கள். உங்கள் கண்கள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் தடவுங்கள். அரைமணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவுங்கள்.

திராட்சை

திராட்சை மற்றும் தயிர், இதில் திராட்சை சிறந்த ஆண்டி ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் சுருக்கங்களை எதிர்க்கும் பண்புகளைக் கொண்டுள்ளது. எனவே திராட்சையைத் தயிருடன் கலப்பதால் சருமத்தை புத்துணர்ச்சியுறச் செய்கிறது.

தேவையான பொருட்கள்

4 முதல் 5 பிசைந்த திராட்சைகள் மற்றும் 1 தேக்கரண்டியளவு தயிர், பிசைந்த திராட்சை மற்றும் தயிரை ஒரு கிண்ணத்தில் போட்டு நன்கு கலந்து உங்கள் கண்களைச் சுற்றித் தடவி 10 முதல் 15 நிமிடங்கள் விட்டு பின்னர் வெதுவெதுப்பான நீரில் கழுவுங்கள்.

வெந்தயம்

வெந்தயம் பல்வேறு சரும பிரச்சனைகளுக்கு பண்டைய காலங்களிலிருந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது பல இயற்கை பண்புகளைக் கொண்டுள்ளது. எனவே கண்களைச் சுற்றியுள்ள சுருக்கங்களை அகற்ற உதவுகிறது.

தேவையான பொருட்கள்

5 முதல் 10 கிராம் வெந்தய இலைகள் மற்றும் தேவையானளவு தண்ணீர். வெந்தய இலைகளை எடுத்து ஒரு மிக்ஸியில் போட்டு தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ளுங்கள். இந்த பேஸ்டை உங்கள் முகம் முழுவதும் தடவலாம். பின்னர், 10 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவுங்கள் விரைவில் சுருக்கங்கள் காணாமல் போய்விடும்.