28.1 C
Chennai
Sunday, Dec 22, 2024
625.500.560.350.160.300.053. 1

தமிழ் புத்தாண்டு பிறக்கும் இந்த வாரத்தில் யாருக்கு அதிர்ஷ்டம்? இதை படியுங்கள்

ஏப்ரல் மாதத்தின் மத்தியில் கொரோனா அச்சமும் பீதியுமாக நாட்கள் நகர்ந்து கொண்டிருக்கின்றன.

வேலை, வருமானம் எப்படி இருக்கும். நமக்கான நாட்கள் எப்படி இருக்கும் என்ற கேள்வி பலருக்கும் எழலாம். இந்த வாரத்தில் என்னென்ன நடக்கும், யாருக்கு சந்தோஷம் தரக்கூடிய நாட்களாக அமையும் என்று பார்க்கலாம்.

12 ராசிக்காரர்களுக்கும் இந்த வாரம் பலன்கள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

மேஷம்

இந்த வாரம் உங்களுக்கு ரொம்ப அற்புதமான வாரமாக இருக்கும். உத்தியோகத்தில் ப்ரமோஷன் இருக்கும். உங்க தன்னம்பிக்கை கூடிடும். கொஞ்சம் எச்சரிக்கையோட இருந்தா உஷ்ணம் சம்பந்தமான நோய் வராம தடுத்துடலாம்.

குடும்ப வாழ்க்கையும் ரொம்பவே குதூகலமா மாறிடும். சிலருக்கு எக்ஸ்ட்ரா வருமானம் வரும். குடும்பத்துல இருக்குறவங்களோட ஒத்தாசை கிடைக்கும். குடும்பத்துல சுபகாரியங்கள் நடக்க வாய்ப்புள்ளது. படிக்குற பசங்க மேல் படிப்பு படிக்க யோகம் உண்டாகும். செய்யுற வேலையுல முழு கவனத்தையும் செலுத்துனா நல்லது.ஊரடங்கு அமலில் இருக்குறதுனால, கையை காலை வச்சிக்கிட்டு வீட்டுலயே முடங்கி கிடங்க. வெளியில போனா தேவையில்லாத பிரச்சனையில மாட்டிக்குவீங்க. சஷ்டி கவசம் படிச்சிட்டு வாங்க. கவலைகள் குறையும்.

ரிஷபம்

இந்த வாரம் உங்களுக்கு நிறைய நல்லது நடக்கும். சுக்கிரன் உச்சத்துல இருக்குறதுனால சந்தோஷத்தையும், உற்சாகத்தையும் கொடுப்பார். கொரோனா பீதியினால வீட்டுலயே முடங்கி கிடக்குறதை நினைச்சி வருத்தப்படாதீங்க. எதிர்பாக்காத அதிர்ஷ்ட வாய்ப்புங்க வரலாம்.

பிசினஸ்ல இப்போதைக்கு லாபம் கிடைக்காட்டியும், நட்டம் வராதுங்குறது நிச்சயம். உங்க ராசியை குரு பாக்குறதுனால நிறைய நல்லதுங்க நடக்கும். எதுக்காகவும் பதட்டப்படாதீங்க. நோய் பாதிப்பு இருந்தா இந்த வாரம் அது குறைஞ்சிடும். வேலையில்லாம இருக்குறதை நினைச்சி வருத்தப்படாதீங்க. சீக்கிரமே விடிவு காலம் கிடைச்சிடும். கூடப்பொறந்தவங்களால ஒத்தாசை, உதவு கிடைச்சிடும். எதிர்பாக்காம திடீர் வருமானம் வந்து உங்க பாக்கெட்டை நிரப்பிடும். அதனால பழைய கடனை அடைச்சிடுவீங்க. கஷ்டங்களும் மறைஞ்சிடும். இந்த சமயத்துல வெளியில சுத்துறதை அவாய்ட் பண்ணிட்டு வீட்டுலயே இருக்குறதை நினைச்சி கவலைப்படாதீங்க. நல்லா சாப்பிட்டு உடம்பை தேத்திக்கிட்டு ஆரோக்கியமாவும், சந்தோஷமா இருங்க. இந்த வாரம் சந்திராஷ்டமம் நடக்குறதுனால, ஏப்ரல் 12 முதல் 15ஆம் தேதி மத்தியானம் வரைக்கும் வெளியில போறதை அவாய்ட் பண்ணுங்க. இல்லாட்டி தேவையில்லாத பிரச்சனைங்க வந்து வம்புல மாட்டிக்குவீங்க.

மிதுனம்

ஊரடங்கு உத்தரவு இருக்குற இந்த சமயத்துல, இந்த வாரம் குடும்பத்துல இருக்குற எல்லாரும் சேந்து இருக்குறதுனால, ரொம்பவே சந்தோஷமாவும், உற்சாகமாவும் இருப்பீங்க. அதனால உங்களுக்கு தன்னம்பிக்கை கூடிடும். கூடப்பொறந்தவங்களால ஒத்தாசை கிடைக்கும். வெளியாட்கள் கூட பேசும்போது, ரொம்ப கவனமா இருங்க, அநாவசியமா வாய் வார்த்தையை விட்டுடாதீங்க. இந்த வாரம் உங்க ஹெல்த் கண்டிஷன்ல அக்கறை காட்டுறது நல்லது. நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்குற சத்தான சாப்பாட்டை சாப்பிட்டு ஹெல்த்தை பாதுகாப்பா வச்சிக்கோங்க. சுவர் இருந்தா தான் சித்திரம் வரைய முடியும்கிறதை மனசல வச்சிக்கிட்டு ஹெல்த் கண்டிஷன்ல அக்கறையோட இருங்க.

எதையும் எதிர்மறையா திங்க் பண்ணாம நேர்மறையா யோசிக்க பாருங்க. இந்த வாரம் சுபகாரியம் சம்பந்தமான பேச்சுவார்த்தை எதையும் வச்சிக்காதீங்க. லவ் பண்றவங்க, லவ் ப்ரபோஷல் பண்றதுக்கு இந்த வாரம் சரிப்படாது. எதுக்கும் ரெண்டு பேரும் தள்ளி தள்ளியே இருக்குறது நல்லது. இந்த வாரம் ஆரம்பத்துல சந்திரன் சாதகமா இருந்தாலும், வார கடைசியில சந்திராஷ்டமம் வர்றதுனால, மவுன விரதம் இருக்குறது நல்ல பலனை கொடுக்கும். வீட்டை விட்டு வெளிய போகாம வீட்டுலயே இருங்க, விளக்கேத்தி சாமிய கும்பிடுங்க. நல்லதே நடக்கும்.

கடகம்

இந்த வாரம் வேலைப் பளு கூடிடும். சொந்தக்காரங்க கூட பேசி சிரிச்சி சந்தோஷப்பட்டுக்குவீங்க. பண வரத்தும் கூடிடும். இந்த வாரம் முழுக்க உங்களோட ஃபைனான்ஸ் பொஷிசன் அற்புதமா இருக்கும். கொரோன பீதியினால, வீட்டுல இருந்தே வேலை பாக்குறவங்களா இருந்தா, வேலைச் சுமை கூடிடும். பிசினஸ்லயும் லாபம் பெருகிடும். கவர்மெண்ட் வேலையில இருக்குறவங்க, டாக்டரா இருக்குறவங்களுக்கு வருமானம் பெருகிடும்.

குரு பார்வை உங்களுக்கு கிடைக்கும்கிறதுனால, மனசுல நல்ல சிந்தனைங்க வந்துடும். கவர்மெண்ட் மூலமா ஹெல்ப் எதிர்பாக்குறவங்களுக்கு ஒத்தாசையும் வெற்றியும் கிடைச்சிடும். ஹெல்த் கண்டிஷனும் இந்த வாரம் அற்புதமா இருக்கும். மனசுலயும் பாசிட்டிவ் எண்ணங்கள் உருவாகிடும். அதனால தன்னம்பிக்கை கூடி, எந்த வேலையையும் செஞ்சி முடிக்குறக்கான தைரியமும் திறமையும் கூடிடும். குடும்ப வாழ்க்கையுல கொஞ்சம் அக்கறை எடுத்துக்குறது நல்லது. வீட்டுல இருக்குறவங்களை கொஞ்சம் அனுசரிச்சி, விட்டுக்கொடுத்து போறது நல்லது. கல்யாணம் ஆனவங்களா இருந்தாலும் சரி, லவ் பண்றவங்களா இருந்தாலும் சரி, அநாவசிய பேச்சுக்களை பேசுறதை அவாய்ட் பண்றது நல்லது. இப்போ கண்டச்சனியோட காலம்கிறதுனால, பெர்சனல் லைஃப்ல பிரச்சனை வர்றதுக்கு வாய்ப்பிருக்கு. எச்சரிக்கையோட இருங்க.

சிம்மம்

அதிர்ஷ்ட வாய்ப்புங்க தேடி வரும். பிசினஸ் பண்றவங்களுக்கு வியாபாரம் நல்லா நடந்து லாபம் பெருகிடும். புது வேலை வாய்ப்பும் கிடைக்குறதுக்கு வாய்ப்பிருக்கு. இருந்தாலும், இப்ப இருக்குற நிலைமையில, இப்பா பாத்துட்டு இருக்குற வேலையை விட்டுடலாமா வேணாமாங்குறதை நல்லா நிதானமா யோசிச்சி முடிவெடுங்க. இந்த வாரம் சில இடைஞ்சல், தடங்கல்னு வர்றதுக்கும் வாய்ப்பிருக்கு. எச்சரிக்கையா இருங்க. எதிரிங்க தொல்லை மறையும்.

இருந்தாலும், புதுசா எந்த முயற்சியிலயும் இறங்காதீங்க. இல்லேன்னா மறைமுகமா எதிர்ப்புங்க வந்து இடைஞ்சலை கொடுக்கும். அதைப் பாத்து, என்னடா லைஃப் இதுன்னு அலுப்பும் சலிப்பும் உண்டாகும். நம்ம வாழ்க்கை இப்படியே தான் நகருமான்னு மனசுல விரக்தி உண்டாகும். அதனால மனசை தளரவிட்டுடாதீங்க. தினசரி காலையில எந்திரிச்ச உடனே சூரிய பகவானை கும்பிட்டு வாங்க. நல்லதே நடக்கும்கிறதை நம்புங்க. இந்த வாரம் வீட்டை விட்டு வெளிய போறதை அவாய்ட் பண்ணுங்க. அப்படி மீறி வெளியில போனா வம்புல மாட்டி அடிவாங்குற நிலை வந்துடும். வீட்டுல இருந்தாலும், அநாவசியமா யார் கிட்டயும் தேவையில்லாம வார்த்தையை விட்டுடாதீங்க. நிதானமா யோசிச்சி பேசுங்க. இல்லாட்டி அமைதியா மவுன விரதம் இருங்க.

கன்னி

இந்த வாரம் சூரியன் உச்சமாகி எட்டாம் வீட்டுக்கு போறதுனால, இந்த வாரம் கொஞ்சம் சுமார் தான். அதனால யார்கிட்டயும் பேசும் போதும் ரொம்பவே கவனமா பேசப்பாருங்க. வண்டி வாகனத்துல போகும் போதும் எச்சரிக்கையோட இருங்க. இல்லேன்னா வெளியில போகாதீங்க. வீட்டுலயே இருக்க பாருங்க. அதே மாதிரி, சூரியனால உங்களுக்கு ஹெல்த் கண்டிஷன் மக்கர் பண்ணும். வயிறு சம்பந்தமா உபாதைங்க வர்றதுக்கு வாய்ப்பிருக்கு. அதனால நல்ல சத்தான சாப்பாட்டையும், கீரை வகைகளையும் சாப்பிடுங்க. அதனால எந்த நோய் வந்தாலும் சமாளிச்சிடலாம். இந்த வாரம் புதன் நீசமடைஞ்சி இருக்குறதுனால, எதுக்கும் கொஞ்சம் எச்சரிக்கையா இருக்குறது நல்லது. அதோட உங்களுக்கு சில நல்லதையும் பண்ணுவார்.

பணவரத்தை பொறுத்த வரைக்கும், நல்ல இம்ப்ரூவ்மெண்ட் இருந்தாலும், சில குழப்பங்கள் வர்றதுக்கு வாய்ப்பிருக்கு. வீட்டுல கல்யாணம் சுபகாரியம் சம்பந்தமான பேச்சுவார்த்தை எதுவும் இந்த வாரம் வேணாம், தள்ளிப்போடுறது நல்லது. எந்த முடிவெடுத்தாலும் ஒரு தடவைக்கு நாலு தடவைக்கு யோசிச்சி முடிவெடுங்க. வெளியூர் பிரயாணம் பண்றதை அவாய்ட் பண்ணுங்க. வீட்டுல தன்வந்திரி பகவானுக்கு விளக்கேத்தி பூஜை பண்ணுங்க. திடீர் அதிர்ஷ்ட யோகமும் உண்டு.

துலாம்

இந்த வாரம் சந்திரனோட சஞ்சாரம் உங்களுக்கு சாதகமாவே இருக்கும். அதோட சூரிய பகவானும் உங்க ராசியை பாக்குறதுனால, வருமானம் பல வழியிலயும் வந்து சேரும். ஆனாலும், அதுக்கேத்த மாதிரி செலவும் சேந்த மாதிரி ஜோடி போட்டு வரும். அதே சமயத்துல, சுக்கிரன் எட்டாம் வீட்டுல மறைஞ்சி கிடக்குறதுனால, பணம் சம்பாதிக்குறதுக்கு ரொம்பவே சிரமப்பட வேண்டியிருக்கும். காஸ்ட்லியான நகை நட்டுங்களை பத்திரமா பாத்துக்கோங்க. சவால்களை சமாளிக்கவும், வலிகளை பொறுத்துக்கவும் பழகிக்கோங்க. முக்கியமான முடிவெடுக்குறதுக்கு முன்னாடி நாலு வாட்டி யோசிங்க. எதிர்பாக்காத நல்ல பலன்கள் தேடி வர்றதுக்கு வாய்ப்பிருக்கு. முன்ன பின்ன தெரியாதவங்க கூட தேடி வந்து ஹெல்ப் பண்ணுவாங்க.

அதனால பண வரத்தும் இருக்கும். இப்போ அர்த்தாஷ்டம சனியோட காலம்கிறதுனால, படிக்குற பசங்க, எந்த முடிவெடுத்தாலும் கொஞ்சம் நிதானமா யோசிச்சி முடிவெடுங்க. அம்மாவோட ஹெல்த் கண்டிஷன்ல கொஞ்சம் அக்கறை காட்டுறது நல்லது. அவங்க கிட்ட கொஞ்சம் ஆறுதலா, அன்பா அனுசரனையா பேசுங்க. அதுவே அவங்களுக்கு தெம்பா இருக்கும். சொந்தக்காரங்க கூட எச்சரிக்கையோட பழகுங்க. உத்தியோகம் பாக்குறவங்களுக்கு வாரக் கடைசியில சில எதிர்பாக்காத வேலை மாற்றம் உண்டாகலாம். அது பிடிச்சிருந்தா யோசிச்சி முடிவெடுங்க. இந்த வாரம் கிரக சஞ்சாரங்கள் சரியில்லாதுனால, சுபகாரியம் சம்பந்தமா எந்த பேச்சுவார்த்தையும் வச்சிக்க வேணாம். வார தொடக்கத்துல எதுக்காகவும் வீட்டை விட்டு வெளிய போகாதீங்க. ஹெல்த் கண்டிஷன் நல்லா இருக்கணும்னா, ரெண்டுலயும் அக்கறை எடுத்துக்குறது நல்லது.

விருச்சிகம்

இந்த வாரம் உங்களுக்கு தைரியமும் எனர்ஜி லெவலும் கூடிடும். இருந்தாலும், மனசளவுல ரொம்பவே சந்தோஷமாவும், உற்சாகமாவும் இருப்பீங்க. புதுசா ஷேர் மார்கெட் எதுலயும் இண்வெஸ்ட் பண்ற ஐடியாவை ஒத்திப்போடுங்க. உங்க லைஃப் பார்ட்னர் மூலமா பெருசா ஒத்தாசை கிடைச்சிடும். அதனால இந்த வாரம் முழுக்க உங்களுக்கு நல்லது நடந்துடும். உங்களோட செல்வாக்கும் கூடிடும்.

குடுமபத்துல இருந்து வந்த பிரச்சனைங்களும் பறந்து போயிடும். ஊரடங்குனால வீட்டுல இருக்குற இந்த நேரத்துல நல்ல சத்துள்ள ஆகாரமா சாப்பிட்டு நல்லா ரெஸ்ட் எடுக்க பாருங்க. கூடப்பொறந்தவங்களால அநேக நல்லதுங்க நடந்துடும். இந்த வாரம் உங்க நிதி நிலைமை சுமாராவே இருக்கும். பண வரத்து இருந்தாலும், செலவும் அதுக்கேத்த மாதிரி வந்துடும். கூடவே கடனையும் அடைச்சிடலாம். இந்த வாரம் எந்த வேலையையும் ஆரம்பிக்குறதுக்கு முன்னால யோசிச்சி முடிவெடுத்து பண்ணுங்க. முருகப் பெருமானை நினைச்சி சாயங்கால நேரத்துல வீட்டுல விளக்கேத்தி பூஜை பண்ணுங்க. கையோட கந்த சஷ்டி கவசம் படிங்க, நல்லது நடக்கும்.

தனுசு

இந்த வாரம் சூரியன் உங்க ராசிக்கு அஞ்சாம் வீட்டுல ரொம்ப ஸ்ட்ராங்கா உக்காந்து இருக்கார். அதனால பண வரத்தும் அற்புதமா இருக்கும். கூடவே வருமானத்துக்கும் புதுசா வழி பொறக்கும். சொந்தக்காரங்க மூலமா நிறைய நல்லதுங்க நடந்துடும். அதோட உங்க தைரியமும் தன்னம்பிக்கையும் கூடிடும்.

உங்க ராசிக்கட்டத்துல பூர்வ புண்ணியஸ்தானம் ரொம்பவே ஸ்ட்ராங்கா இருக்குறதுனால, நெகடிவ் எண்ணங்கள் காணாம போயி, பாசிட்டிவ் எண்ணங்கள் கூடிடும். அதிர்ஷ்டமும், சுக பாக்கியமும் நல்லதும் தேடி வரும். அதனால சந்தோஷமும் கூடிடும். வேலை இல்லாம கஷ்டப்படுறவங்களுக்கு வார கடைசியில நல்லது நடக்கும். எதையுமே போராடி தான் ஜெயிப்பீங்க. கணவன் மனைவிக்குள்ளாற இருந்து வந்த பிரச்சனைங்க காணாம போயி அந்நியோன்யம் கூடிடும். படிக்குற பிள்ளைங்க ரொம்ப தெளிவான முடிவெடுப்பாங்க. பிசினஸ் பண்றவங்களுக்கு லாபம் பெருகிடும். இதுவரைக்கும் தொல்லை கொடுத்த கடன் பிரச்சனையும் காணாம போகும். இந்த வாரம் பிரச்சனை இல்லாம நகரணும்னா குருபகவானை நினைச்சி சாமிய கும்பிடுங்க. நல்லதே நடக்கும்.

மகரம்

இந்த வாரம் உங்களுக்கு சாதகமான வாரமாவே இருக்கும். உத்தியோகம் சம்பந்தமா நல்லது நடக்கும்னு நம்பலாம். தனிப்பட்ட வாழ்க்கையிலயும் நிறைய நல்ல மாற்றங்கள் நடக்க வாய்ப்பிருக்கு. நீங்க இப்ப இருக்குற கண்டிஷனை பாத்து சில சமயத்துல கடுப்பானாலும், அதையும் ரொம்பவே திறமையா சமாளிச்சி எடுத்த காரியத்தை வெற்றிகரமா முடிச்சிடுவீங்க. வேலையில இருக்குறவங்க நிம்மதியா உத்தியோகம் பாப்பாங்க. இருக்குற வேலையை விட்டு வேற வேலைக்கு மாற நினைக்குறவங்க, இந்த வாரம் அதுக்கு முயற்சி செய்யலாம்.

வேலை பாத்தது போதும்னு நினைக்குறவங்க, இந்த வாரம் வேலையை ரிசைன் பண்ணிடலாம். பிசினஸ் பண்றவங்களுக்கு இந்த வாரம் லாபம் அமோகமா இருக்கும். கணவன் மனைவிக்குள்ளாற சின்ன சின்னதா பிரச்சனைங்க முளைக்கலாம். கொஞ்சம் விட்டுக்கொடுத்து அனுசரிச்சி போறது நல்லது. வீணா பிரச்சனை பண்ணுனீங்கன்னா, உங்களுக்கு தான் சேதாரம் ஜாஸ்தியா இருக்கும். கவனமா இருங்க. வீட்டுலயே இருக்குறதுனால, நல்ல சத்துள்ள ஆகாராமா சாப்பிட்டு, தெம்பா இருங்க. வீட்டுல விளக்கேத்தி பூஜை பண்ணி சாமிய கும்பிட்டு வாங்க. நல்லதே நடக்கும்.

கும்பம்

இந்த வாரம் வண்டி வாகன பிரயாணம் பண்ண வேண்டாம். எதிர்பாக்காத பிரச்சனைங்க வந்து முளைக்கும். அதனால தேவையில்லாத பாதிப்புகளும் வரலாம். இந்த வாரம் பண விஷயத்துல முக்கியமான முடிவெடுக்குறதா இருந்தாஇ ஒரு தடவைக்கு நாலு தடவை நல்லா யோசிச்சி முடிவெடுங்க. வீட்டுல இருக்குறவங்க கிட்டயும், லைஃப் பார்ட்னர் கிட்டயும் கொஞ்சம் விட்டுக்கொடுத்து போறது நல்லது. இந்த வாரம் உங்க ஹெல்த் கண்டிஷன்லயும் கொஞ்சம் அக்கறை காட்டுறது நல்லது. இல்லேன்னா அநாவசிய உடல் உபாதைங்க வர்றதுக்கு வாய்ப்பிருக்கு. பண வரத்து அதிகமா இருந்தாலும், கூடவே தண்டச்செலவுங்களும் கை கோர்த்துட்டு வரும். அதனால ரொம்பவே கவனமா இருங்க. இருக்குற வேலையை விட்டுட்டு பறக்குற வேலைக்கு ஆசைப்படாதீங்க. நிலம் சம்பந்தமான விசயத்துல பிரச்சனை வர்றதுக்கு வாய்ப்பிருக்கு, கொஞ்சம் எச்சரிக்கையா இருக்க பாருங்க. ரொம்ப நாளா எதிர்பாத்துட்டு இருக்குற பேங்க் லோன் இந்த வாரம் கிடைச்சிடும். ஆனாலும், அந்த லோன் அவசியமான்னு யோசிச்சி முடிவெடுங்க. வந்த வரைக்கும் லாபம்னு லோனை வாங்கிடாதீங்க. புதுசா எதுலயும் இண்வெஸ்ட் பண்ற ஐடியாவை மூட்டை கட்டி வைச்சிடுங்க.

வாரக் கடைசியில உங்க ஹெல்த் கண்டிஷன் அற்புதமா இருக்கும். பிசினஸ் விசயமா எந்த அக்ரீமெண்ட்லயும் கையெழுத்து போடாதீங்க. படிக்குற பசங்க ரொம்ப உஷாரா இருங்க. வெளிய போயி யார் கிட்டயும் வம்பு தும்பு வச்சிக்காம, வீட்டுலயே நல்லா ரெஸ்ட் எடுங்க. இந்த வாரம் முழுக்க நல்லது நடக்குறதுக்கு நீங்க ஸ்ரீமகாலட்சுமியை நினைச்சிகிட்டு வீட்டுல விளக்கேத்தி பூஜை பண்ணுங்க. பாதிப்பு இருந்தா விலகிடும்.

மீனம்

இந்த வாரம் உங்க ராசிக்கு லாப ஸ்தானம் ரொம்பவே ஸ்ட்ராங்கா இருக்கு. அதனால, வேலை இல்லாதவங்களுக்கு புது உத்தியோகம் கிடைக்க வாய்ப்பிருக்கு. பிசினஸ் பண்றவங்களுக்கு லாபம் பெருகிடும். அதனால பண வரத்தும் அமோகமா இருக்கும். கல்யாணம், சுபகாரிய பேச்சுவார்த்தைங்க நல்ல விதமா முடியும். பேங்க் லோன் எதிர்பாத்தவங்களுக்கு இந்த வாரம் கிடைக்க வாய்ப்பிருக்கு. அது மூலமா புதுசா சொத்து பத்து வாங்கிடலாம். குடும்பத்துல இருக்குவங்களோட சப்போர்ட் முழுக்க உங்களுக்கு கிடைச்சிடும். அதனால பாசிட்டிவ் எண்ணங்கள் உங்க மனசுல உண்டாகும். அதனால நீங்க ரொம்பவே சந்தோஷமா ஃபீல் பண்ணுவீங்க. படிக்குற பசங்க மேல் படிப்பு படிக்குறதை பத்தி யோசிச்சி முடிவெடுக்கலாம். சூரிய பகவான் உங்களுக்கு சாதகமா இருக்குறதுனால, வீட்டுல இருக்குறவங்க சப்போர்ட் உங்களுக்கு கிடைச்சிடும்.

இருந்தாலும் அவங்க கிட்ட பேசும்போது, ரொம்பவே கவனமா பேசி பழகுறது நல்லது. இந்த சமயத்துல பிள்ளைங்க பேர்ல கூடுதலா இண்வெஸ்ட் பண்ணலாம். உங்களால பிள்ளைங்களுக்கும் நிறைய நல்லது நடக்கும். கூடப்பொறந்தவங்க வழியில உங்களுக்கு நிறைய அனுகூலம் உண்டாகும். வாரம் முழுக்க நல்லது நடக்குறதுக்கு நீங்க தன்வந்திரி பகவானை நினைச்சி விளக்கேத்தி பூஜை பண்ணுங்க.