svsf

பிரபல கவர்ச்சி நடிகையின் ஓபன் டாக்…!“”இவருடைய” முத்தத்திற்கும் வீடியோ காலிற்கும் நான் அடிமையாகிவிட்டேன்”

இந்தியாவில் தற்போது கொரோனாவால் உருவான ஊரடங்கு கலாச்சாரத்தினால் மக்களின் அன்றாட வாழ்க்கையில் பலவிதமான மாற்றங்கள் நடந்து வருகின்றது. தினமும் தங்களது வீட்டிலேயே உடற்பயிற்சி செய்வது. தங்களது வீட்டிலிருக்கும் செடிகளிடையே பேசுவது. புத்தகங்களை படிப்பது, திரைப்படங்களை பார்ப்பதென்று மக்கள் தங்களுடைய நேரத்தினை செலவிட்டு வருகின்றனர்.

அதன் வரிசையில் சில மக்கள் ஊரடங்கு நேரத்தில் தங்களுடைய வீட்டிற்குள்ளேயே எந்த வேலையும் செய்யாமல் முடங்கிக்கிடக்கின்றனர். அவர்ககளை உற்சாகமூட்டும் வகையில் சினிமா மற்றும் விளையாட்டு வீரர்கள் தங்களால் முடிந்த முயற்சியை இணையதளத்தில் வீடியோ மூலம் தொடர்ச்சியாக பதிவிட்டு வருகின்றனர்.

அதன் வரிசையில் தமிழ் சினிமாவின் எவர்க்ரீன் நடிகையான ரம்யா கிருஷ்ணன் நேற்று மக்களுக்கு முத்தம் கொடுப்பதுப்போல் ஒரு வீடியோவினை இணையதளத்தில் வெளியிட்டார். அந்த வீடியோவிற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. அந்த முத்தத்தைப்பற்றி தெலுங்கு கவர்ச்சி நடிகையான சார்மி கவுர் ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார்.

“இந்த ஊரடங்கு நேரத்தில் நானும் ரம்யா கிருஷ்ணனும் பல முறை வீடியோ கால்களில் பேசியிருக்கிறோம். அவருடைய இந்த முத்தத்திற்கும் வீடியோ காலிற்கும் நான் அடிமையாகிவிட்டேன்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் ரம்யா கிருஷ்ணனின் புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார். இந்த போஸ்ட் தற்போது வைரலாக பரவி வருகிறது.