கொரோனா பாதிப்பு இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இந்த ஒரு நிலையில், மருத்துவ பணியாளர்கள், செவிலியர்கள், தூய்மைப்பணியாளர்கள் மற்றும் சேவை செய்யும் அதிகார பலத்துடன் பொறுப்பு வகிப்பவர்களின் தேவையும் அதிகரித்து உள்ளது.
அந்த வகையில் மாவட்ட ஆட்சியர் பங்கு மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. கொரோனா தொற்று பரவலை அடிப்படையாக கொண்டு எந்தெந்த மாநிலத்தில் தொற்று அதிகமாக வாய்ப்பு இருக்கிறது என்றும், அதே போன்று மாநிலத்தில் எந்தெந்த மாவட்டத்தில் அதிகமாக உள்ளது என்றும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு அதற்கேற்றவாறு கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டு உள்ளது.
இது ஒருபக்கம் இருக்க, பொதுவாகவே குழந்தை பேரு காலத்தில், பெண்களுக்கு 6 மாதம் விடுப்பு கொடுப்பது வழக்கம். ஆனால் கொரோனா பாதிப்பு காரணமாக இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் தன்னுடைய சேவை இந்த நாட்டு மக்களுக்கு தேவை என உணர்ந்த ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் தன் கைக்குழந்தையுடன் வேலை செய்கிறார்.
அதாவது ஆந்திரா மாநிலத்தில் விசாகப்பட்டினம் பெருநகர மாநகராட்சி பெண் கமிஷனர் தனது கைக்குழந்தையுடன் கொரோனா தடுப்பு பணியை மேற்கொண்டார். இவரது கடமையுணர்ச்சியை பலரும் பாராட்டி வருகின்றனர்.
ஆந்திரா மாநிலத்தில் 350-கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 6 பேர் பலியாகியுள்ளனர். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அம்மாநில அரசு தீவிரப்படுத்தி வருகிறது. இந்நிலையில் விசாகப்பட்டினம் பெருநகர மாநகராட்சி கமிஷனர் ஸ்ரீஜனா என்ற பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி தனது கைக்குழந்தையுடன் நேற்றுஅலுவலகத்தில் கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொண்டார். இதன் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
இவருக்கு கடந்த மார்ச் இறுதியில் ஆண் குழந்தை பிறந்தது. கணவர் வழக்கறிஞராக உள்ளார்.தற்போது இவருக்கு குழைந்து பிராந்து 22 நாட்களை ஆகி உள்ளது. இப்படி ஒரு நிலையில் தன் கைகுழந்தையை அலுவலகத்திற்கு அழைத்து வந்து பணியில் ஈடுபட்டு இருப்பது அனைவரின் கவனத்தை ஈர்த்து உள்ளது. இந்த போட்டோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி அனைவரின் பாராட்டுக்குக்கு உரியவரானார் இந்த பெண் ஐஏஎஸ் அதிகாரி